திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

882 துறைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே; உயர் ஏற்று கொடியுடையாய் - உயர்ந்த இடபக்கொடியையுடைய வனே; எனை உடையாய் -எளியேனை அடிமையாக உடையவனே ; எம்பெருமான் - எங்கள் தலைவனே ; பள்ளி எழுந்தருளாய் - துயில் நீங்கி அமளியினின்றும் எழுந்தருளவேண்டும். திருவாசக ஆராய்ச்சியுரை என் வாழ் முதலாகிய பொருளே, பொழுது புலர்ந்தது; இணை து துணை மலர் கொண்டு துதித்து, நின்திருமுகத்தின் எழில் நகை கொண்டு, நின்திருவடிகளில் அம்மலர்களைச் சொரிந்து வணங்க விரும்புகின்றோம். ஆதலால் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே; ஏற்றுக்கொடியையுடையவனே; எனை உடையவனே; எம்பெருமானே நீ திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம். வாழ்விற்கு என நான்காவது விரிக்க. முதலாகிய பொருள்- முதன்மையாகிய பொருள். உயிரின் வாழ்வாகிய காரியத்திற்கு முதல் துணை நிமித்தம் எனக் காரணங்கள் மூன்று உண்டு. முதற்காரணம் - மாயை; துணைக்காரணம் - திருவருட் சத்தி; நிமித்தகாரணம் - இறை வன். இம் மூன்றனுள் நிமித்தகாரணமே மற்றைக்காரணங்கள் தொழிற்படுதற்கு ஏதுவாதலால், நிமித்தகாரணமாயுள்ள பரம் பொருள் என உரைக்கப்பட்டது. புலர்ந்தது என்பது பள்ளியெழுதற் குரிய காலம் வந்துவிட்டதை உணர்த்தியதாகும். இணைதுணைமலர் என்றது ஒப்பாயுள்ளனவும் வழிபாட்டிற்குத் துணையாயுள்ளனவு மாகிய மலர் என்றவாறு. இணைதுணைமலர் - இணைதலமைந்த திரு வடிக்கு ஒத்தமலர் எனினுமமையும். இணை - இணைதலமைந்த. இணையணை" (நெடுநல். 133). துணைமலர் -ஒத்தமலர். (கோவை 118 உரை). துணையூர்-ஒத்தவூர் (கோவை.372 உரை) கொண்டு என்பதனைத் திருவடிகளில் சொரிந்து என அவாய்நிலையால் வருவிக் கப்பட்ட சொரிந்து என்னும் வினையொடு முடிக்க. ஏத்தி என்பது ஏற்றியென எதுகை நோக்கித் திரிந்தது. ** எழில் நகை கொண்டு என்றதனால் இறைவனின் இன்முகமாகிய புன்முறுவலைப் பெறுதலால் அவன் வழிபாட்டிற்கு விருப்புடன் இருத் தல் கூறப்பட்டது. தொழுகோம் - தொழுதலை விரும்புகின்றோம். தொழுகோம் எழுந்தருளாய் என இயையும். சேற்று இதழ் கமலங் கள் - சேற்றையுடைய நீரின்கணுண்டாகும் கமலங்கள். இது பங்கஜம் என்னும் வடமொழிப்பொருளை விளக்குவதாகும். ஏற்றுயர் கொடி எனக்கூட்டி ஏறு எழுதப்பட்டமையால் உயர்ந்த கொடி எனினுமாம். ஏறு - தருமவடிவாகிய இடபம் (கோவை.113 உரை). எனையுடை யாய் என்பது ஏற்றுயர் கொடியுடையையாயினும் கீழ்ப்பட்ட என்னை யும் உடையாய் என்பதுபட நின்றது. பள்ளி - படுக்கை; துயில்.
882 துறைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே ; உயர் ஏற்று கொடியுடையாய் - உயர்ந்த இடபக்கொடியையுடைய வனே ; எனை உடையாய் -எளியேனை அடிமையாக உடையவனே ; எம்பெருமான் - எங்கள் தலைவனே ; பள்ளி எழுந்தருளாய் - துயில் நீங்கி அமளியினின்றும் எழுந்தருளவேண்டும் . திருவாசக ஆராய்ச்சியுரை என் வாழ் முதலாகிய பொருளே பொழுது புலர்ந்தது ; இணை து துணை மலர் கொண்டு துதித்து நின்திருமுகத்தின் எழில் நகை கொண்டு நின்திருவடிகளில் அம்மலர்களைச் சொரிந்து வணங்க விரும்புகின்றோம் . ஆதலால் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ; ஏற்றுக்கொடியையுடையவனே ; எனை உடையவனே ; எம்பெருமானே நீ திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம் . வாழ்விற்கு என நான்காவது விரிக்க . முதலாகிய பொருள் முதன்மையாகிய பொருள் . உயிரின் வாழ்வாகிய காரியத்திற்கு முதல் துணை நிமித்தம் எனக் காரணங்கள் மூன்று உண்டு . முதற்காரணம் - மாயை ; துணைக்காரணம் - திருவருட் சத்தி ; நிமித்தகாரணம் - இறை வன் . இம் மூன்றனுள் நிமித்தகாரணமே மற்றைக்காரணங்கள் தொழிற்படுதற்கு ஏதுவாதலால் நிமித்தகாரணமாயுள்ள பரம் பொருள் என உரைக்கப்பட்டது . புலர்ந்தது என்பது பள்ளியெழுதற் குரிய காலம் வந்துவிட்டதை உணர்த்தியதாகும் . இணைதுணைமலர் என்றது ஒப்பாயுள்ளனவும் வழிபாட்டிற்குத் துணையாயுள்ளனவு மாகிய மலர் என்றவாறு . இணைதுணைமலர் - இணைதலமைந்த திரு வடிக்கு ஒத்தமலர் எனினுமமையும் . இணை - இணைதலமைந்த . இணையணை ( நெடுநல் . 133 ) . துணைமலர் -ஒத்தமலர் . ( கோவை 118 உரை ) . துணையூர் - ஒத்தவூர் ( கோவை .372 உரை ) கொண்டு என்பதனைத் திருவடிகளில் சொரிந்து என அவாய்நிலையால் வருவிக் கப்பட்ட சொரிந்து என்னும் வினையொடு முடிக்க . ஏத்தி என்பது ஏற்றியென எதுகை நோக்கித் திரிந்தது . ** எழில் நகை கொண்டு என்றதனால் இறைவனின் இன்முகமாகிய புன்முறுவலைப் பெறுதலால் அவன் வழிபாட்டிற்கு விருப்புடன் இருத் தல் கூறப்பட்டது . தொழுகோம் - தொழுதலை விரும்புகின்றோம் . தொழுகோம் எழுந்தருளாய் என இயையும் . சேற்று இதழ் கமலங் கள் - சேற்றையுடைய நீரின்கணுண்டாகும் கமலங்கள் . இது பங்கஜம் என்னும் வடமொழிப்பொருளை விளக்குவதாகும் . ஏற்றுயர் கொடி எனக்கூட்டி ஏறு எழுதப்பட்டமையால் உயர்ந்த கொடி எனினுமாம் . ஏறு - தருமவடிவாகிய இடபம் ( கோவை .113 உரை ) . எனையுடை யாய் என்பது ஏற்றுயர் கொடியுடையையாயினும் கீழ்ப்பட்ட என்னை யும் உடையாய் என்பதுபட நின்றது . பள்ளி - படுக்கை ; துயில் .