திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வாய் வருவிக்கப்பட்டது. தாளிணை காட்டாய் என்பது தாளிணை காட்டவேண்டும் என வேண்டிக் கோடற்பொருள் தந்து நின்றது. உயிர் பெறும்பேறு அதுவாதலின் "தாளிணை காட்டாய்" என்றார். "ஒண்மலர்ச் சேவடி காட்டாய்" (14-11) எனச் சுந்தரமூர்த்திசுவாமி களும் அருளியமை காண்க. அறக்காலமாகிய புலரிக்காலத்தில் மனம் தெளிவாய் ஒருவழிப்பட்டு இறைவழிபாட்டை விரும்புதலின் 'ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு" என்றார். நல்தாள் என இயையும். "நற்றாள் தொழாரெனின்" எனத் திருவள்ளுவர் வாக் கும் ஈண்டறியற்பாலது. 886 ம யாவருமறிவரியாய் என்றது எவ்வகை மேம்பாட்டினராலும் அறி தற்கரியவன் இறைவன் என்றவாறு, "யாவர்க்கு மறிவரிய வத்தர் பெருமானை'" (சுந். 38-10) எனத் தேவாரத்தாலுமறிக. எமக்கு எளி யாய் என்றது அடியவராகிய எமக்கு எளியாய் என்றவாறு. "முந்தி யென்னுள் புகுந்தனன் யாவரும் சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே" (சத.47) "தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு" (அதி: 3) ஆவா அரியமனிந் திரன் வானோர்க் கரிய சிவன் வாவாவென் நென்னையும் பூதலத்தே... கொண்டான்" (தெள்.7) ''பாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான்" (சென்னி.1) என இத் திருவாசகத்தும், 'என்று மரியானயலவர்க்கு ...எனதுள் நன்றுமொளி யானொளி சிறந்த பொன்முடிக் கடவுள்"(ஞான.387:1) எனத் தேவாரத்தும், "பண்டலரயன் மாற்கரிது மாயடியார்க் கெளியதோர் பவளமால் வரையை'' எனத் தீருவிசைப்பாவிலும், (திருவிசை.48) "திங்களங் கண்ணித் தில்லை வாண அன்பருக் கெளியை யாகலின்" (சிதம்பர மும்மணி. 17:11-12) எனக் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திலும் வருவனவற்றாலுமறிக. காட்டாய் என்னும் முற்றினைக் காட்ட என்னும் எச்சமாகக் கொண்டு அதனை எழுந்தருளாய் என்பதனோடு முடிக்குக.
திருவாசக ஆராய்ச்சியுரை வாய் வருவிக்கப்பட்டது . தாளிணை காட்டாய் என்பது தாளிணை காட்டவேண்டும் என வேண்டிக் கோடற்பொருள் தந்து நின்றது . உயிர் பெறும்பேறு அதுவாதலின் தாளிணை காட்டாய் என்றார் . ஒண்மலர்ச் சேவடி காட்டாய் ( 14-11 ) எனச் சுந்தரமூர்த்திசுவாமி களும் அருளியமை காண்க . அறக்காலமாகிய புலரிக்காலத்தில் மனம் தெளிவாய் ஒருவழிப்பட்டு இறைவழிபாட்டை விரும்புதலின் ' ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு என்றார் . நல்தாள் என இயையும் . நற்றாள் தொழாரெனின் எனத் திருவள்ளுவர் வாக் கும் ஈண்டறியற்பாலது . 886 யாவருமறிவரியாய் என்றது எவ்வகை மேம்பாட்டினராலும் அறி தற்கரியவன் இறைவன் என்றவாறு யாவர்க்கு மறிவரிய வத்தர் பெருமானை ' ( சுந் . 38-10 ) எனத் தேவாரத்தாலுமறிக . எமக்கு எளி யாய் என்றது அடியவராகிய எமக்கு எளியாய் என்றவாறு . முந்தி யென்னுள் புகுந்தனன் யாவரும் சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே ( சத .47 ) தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு ( அதி : 3 ) ஆவா அரியமனிந் திரன் வானோர்க் கரிய சிவன் வாவாவென் நென்னையும் பூதலத்தே ... கொண்டான் ( தெள் .7 ) ' ' பாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான் ( சென்னி .1 ) என இத் திருவாசகத்தும் ' என்று மரியானயலவர்க்கு ... எனதுள் நன்றுமொளி யானொளி சிறந்த பொன்முடிக் கடவுள் ( ஞான .387 : 1 ) எனத் தேவாரத்தும் பண்டலரயன் மாற்கரிது மாயடியார்க் கெளியதோர் பவளமால் வரையை ' ' எனத் தீருவிசைப்பாவிலும் ( திருவிசை .48 ) திங்களங் கண்ணித் தில்லை வாண அன்பருக் கெளியை யாகலின் ( சிதம்பர மும்மணி . 17 : 11-12 ) எனக் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திலும் வருவனவற்றாலுமறிக . காட்டாய் என்னும் முற்றினைக் காட்ட என்னும் எச்சமாகக் கொண்டு அதனை எழுந்தருளாய் என்பதனோடு முடிக்குக .