திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பள்ளியெழுச்சி இதன்கண் "பள்ளி எழுந்தருளாய்" என்பதினால் திரோதானசுத்தி என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. 369 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திர மியம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகைய ரழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியி லஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. 887 3 ப -ரை. இன் இசை வீ ணையர் யாழினர் ஒருபால் - இனிய ஓசையையுடைய வீணையை வாசிப்பவரும் யாழினை வாசிப்பவரும் ஒரு பால் வந்துள்ளனர்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்- வேதங்களை ஓதுகின்றவர்களும் துதிப்பாடல்களை ஓதுகின்றவர்களும் ஒருபால் வந்துள்ளனர்; துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்- நெருங்கிய பிணைப்பினையுடைய பூமாலையை ஏந்திய கையையுடையவர் கள் ஒருபால் வந்துள்ளனர்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் - வணங்குதலையுடையவர்களும் அன்பினால் அழுதலையுடைய வர்களும் கைகூப்பி மெய்கோட்டி நிற்பவர்களும் ஒருபக்கலின் வந்துள் ளனர்; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் - தலையின்மேல் அஞ் சலியாகக் கைகளைக் கூப்பினவர்கள் ஒருபால் வந்துள்ளனர்; திருப் பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் எழுந் தருளியிருக்கின்ற சிவபெருமானே, என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் - ஒரு பொருளல்லாத இழிவுடைய என் னையும் அடிமை கொண்டு இனிய அருளைச் செய்த எங்கள் தலை வனே. பள்ளி எழுந்தருளாய் - திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும். வீணையர் யாழினர் ஒருபாலும், இருக்கோடு தோத்திரம் ஓதுகின் றவர் ஒருபாலும், பூமாலை ஏந்திய கையையுடையவர்கள் ஒருபாலும், தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபாலும், சென்னியில் அஞ் சலியாகக்கைகளைக்கூப்பினவர் ஒருபாலும் வந்துள்ளனர். திருப்பெருந் துறையுறை சிவபெருமானே, என்னையும் அடிமைகொண்டு அருள்புரி யும் எம்பெருமானே, திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம். இன்னிசை வீணையர் இன்னிசை யாழினர் என இன்னிசையை ஈரிடத்தும் சுட்டுக. "இன்னிசை வீணையை வாங்கி இமையவர் தம், அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே, பாடல்தொடங்கும்
திருப்பள்ளியெழுச்சி இதன்கண் பள்ளி எழுந்தருளாய் என்பதினால் திரோதானசுத்தி என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . 369 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திர மியம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகைய ரழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியி லஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே . 887 3 -ரை . இன் இசை வீ ணையர் யாழினர் ஒருபால் - இனிய ஓசையையுடைய வீணையை வாசிப்பவரும் யாழினை வாசிப்பவரும் ஒரு பால் வந்துள்ளனர் ; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் வேதங்களை ஓதுகின்றவர்களும் துதிப்பாடல்களை ஓதுகின்றவர்களும் ஒருபால் வந்துள்ளனர் ; துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால் நெருங்கிய பிணைப்பினையுடைய பூமாலையை ஏந்திய கையையுடையவர் கள் ஒருபால் வந்துள்ளனர் ; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் - வணங்குதலையுடையவர்களும் அன்பினால் அழுதலையுடைய வர்களும் கைகூப்பி மெய்கோட்டி நிற்பவர்களும் ஒருபக்கலின் வந்துள் ளனர் ; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் - தலையின்மேல் அஞ் சலியாகக் கைகளைக் கூப்பினவர்கள் ஒருபால் வந்துள்ளனர் ; திருப் பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் எழுந் தருளியிருக்கின்ற சிவபெருமானே என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் - ஒரு பொருளல்லாத இழிவுடைய என் னையும் அடிமை கொண்டு இனிய அருளைச் செய்த எங்கள் தலை வனே . பள்ளி எழுந்தருளாய் - திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் . வீணையர் யாழினர் ஒருபாலும் இருக்கோடு தோத்திரம் ஓதுகின் றவர் ஒருபாலும் பூமாலை ஏந்திய கையையுடையவர்கள் ஒருபாலும் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபாலும் சென்னியில் அஞ் சலியாகக்கைகளைக்கூப்பினவர் ஒருபாலும் வந்துள்ளனர் . திருப்பெருந் துறையுறை சிவபெருமானே என்னையும் அடிமைகொண்டு அருள்புரி யும் எம்பெருமானே திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம் . இன்னிசை வீணையர் இன்னிசை யாழினர் என இன்னிசையை ஈரிடத்தும் சுட்டுக . இன்னிசை வீணையை வாங்கி இமையவர் தம் அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே பாடல்தொடங்கும்