திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பொழுதில் (திருக்கைலாய. 141-3) என்பது காண்க. மற்றெல்லா இசைக் கருவிகளிலும் வீணையும் யாழும் சிறந்தனவாதலின் அவற்றை எடுத்துக்கூறினார்.வீணையும் யாழும் அமைப்பினாலும் நரம்புகளினாலும் சிறிது வேறுபாடுடையன. "புகலுமிசை, நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும்" (பெரிய. திருநாளை. 14) "யாழ் வீணை கெழுவு கம்பலை செய்கீழ்க் கோட்டூர் மன்னவன்" (திருவிசைப்பா 108) என்பது காண்க. இருக்கு - வேதம். தோத்திரம்-துதிப்பாடல்: இருக்கு மந்திர மாகாதோவெனின் இயம்பினர் என்னும் வினையினால் ஆகாதென்க. துன்னிய பிணைமலர் - நெருக்கமாகக் கட்டிய பூமாலை; மார்பில் அணி யப்படுவது; இது பிணையல் எனவும் படும். துவள்கை - கைகூப்பி மெய்கோட்டி நிற்கும் நிலை. ''குடந்தம்" என்பர். "குடந்தங்கூப்பி மெய்கோட்டி நிற்றல்" (திவாகரம்: செயல்) குடந்தம்பட்டு வழி பட்டு, வணக்கம் பட்டென்று உரைப்பர்; குடவென்பது தடவென் உரிச்சொல்லாதலின் அத பது போல வளைவை உணர்த்துவதோர் னடியாகப் பிறந்த பெயருமாம் என்னும் திருமுருகாற்றுப்படையுரை (229 நச்.) ஈண்டு அறியற்பாலது. ஒருபால் என்பவற்றின் ஆற்றலால் வந்துள்ளனர் என்பது வருவிக்கப்பட்டது. எம்பெருமான் - அண்மை விளி. 888 இதன் கண், ''பள்ளி எழுந்தருளாயே" என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிசுப்பொருள் புலப்படுதல் காண்க. 4 370 பூதங்க டோறுநின் றாயெனி னல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுத லல்லால் கேட்டறி யோமுனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்மரி யாயெங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெம்மை யாண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே, ப-ரை. புலவோர் உண்மை அறிவினர், நினை பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் - நின்னைப் பூதப்பொருள்களான உயிர்ப்பொருள் உயிரில்பொருள் ஒவ்வொன்றிலும் கலந்து நின்றனை என்று கூறின் அதனை அறிவோம் அன்றி, போக்கு இலன் வரவு இலன் என - எங்கும் உள்ளாயாதலால் போதல் இல்லாதவன் வருதல் இல் லாதவன் என்று கூறிக்கொண்டு, கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்- இசைப்பாடல்களைப் பாடுதலும் அதற்கேற்ப ஆனந்தக்கூத்து ஆடுத லும் செய்வதைக்கேட்டும் கண்டும் அறிவோம் அன்றி, உனை கண்டு அறிவாரை கேட்டறியோம் - உன்னைத் தமது பசுஞானத்தால் நேரில் சீதம் பார்த்தறிந்தவரை நாங்கள் கேள்விப்பட்டும் அறியோம்.
திருவாசக ஆராய்ச்சியுரை பொழுதில் ( திருக்கைலாய . 141-3 ) என்பது காண்க . மற்றெல்லா இசைக் கருவிகளிலும் வீணையும் யாழும் சிறந்தனவாதலின் அவற்றை எடுத்துக்கூறினார்.வீணையும் யாழும் அமைப்பினாலும் நரம்புகளினாலும் சிறிது வேறுபாடுடையன . புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் ( பெரிய . திருநாளை . 14 ) யாழ் வீணை கெழுவு கம்பலை செய்கீழ்க் கோட்டூர் மன்னவன் ( திருவிசைப்பா 108 ) என்பது காண்க . இருக்கு - வேதம் . தோத்திரம் - துதிப்பாடல் : இருக்கு மந்திர மாகாதோவெனின் இயம்பினர் என்னும் வினையினால் ஆகாதென்க . துன்னிய பிணைமலர் - நெருக்கமாகக் கட்டிய பூமாலை ; மார்பில் அணி யப்படுவது ; இது பிணையல் எனவும் படும் . துவள்கை - கைகூப்பி மெய்கோட்டி நிற்கும் நிலை . ' ' குடந்தம் என்பர் . குடந்தங்கூப்பி மெய்கோட்டி நிற்றல் ( திவாகரம் : செயல் ) குடந்தம்பட்டு வழி பட்டு வணக்கம் பட்டென்று உரைப்பர் ; குடவென்பது தடவென் உரிச்சொல்லாதலின் அத பது போல வளைவை உணர்த்துவதோர் னடியாகப் பிறந்த பெயருமாம் என்னும் திருமுருகாற்றுப்படையுரை ( 229 நச் . ) ஈண்டு அறியற்பாலது . ஒருபால் என்பவற்றின் ஆற்றலால் வந்துள்ளனர் என்பது வருவிக்கப்பட்டது . எம்பெருமான் - அண்மை விளி . 888 இதன் கண் ' ' பள்ளி எழுந்தருளாயே என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிசுப்பொருள் புலப்படுதல் காண்க . 4 370 பூதங்க டோறுநின் றாயெனி னல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுத லல்லால் கேட்டறி யோமுனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்மரி யாயெங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெம்மை யாண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே - ரை . புலவோர் உண்மை அறிவினர் நினை பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் - நின்னைப் பூதப்பொருள்களான உயிர்ப்பொருள் உயிரில்பொருள் ஒவ்வொன்றிலும் கலந்து நின்றனை என்று கூறின் அதனை அறிவோம் அன்றி போக்கு இலன் வரவு இலன் என - எங்கும் உள்ளாயாதலால் போதல் இல்லாதவன் வருதல் இல் லாதவன் என்று கூறிக்கொண்டு கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் இசைப்பாடல்களைப் பாடுதலும் அதற்கேற்ப ஆனந்தக்கூத்து ஆடுத லும் செய்வதைக்கேட்டும் கண்டும் அறிவோம் அன்றி உனை கண்டு அறிவாரை கேட்டறியோம் - உன்னைத் தமது பசுஞானத்தால் நேரில் சீதம் பார்த்தறிந்தவரை நாங்கள் கேள்விப்பட்டும் அறியோம் .