திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பள்ளியெழுச்சி 889 கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா - குளிர்ச்சி பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அரசனே, சிந்தனைக்கும் அரியாய் - நினைத்தற்கும் அரியவனே, எங்கள் முன்வந்து - அடியோங்களுக்கு எதிரில் உருவத்திருமேனி கொண்டு வலிய எழுந் தருளிவந்து, ஏதங்கள் அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெரு மான் - குற்றங்கள் எல்லாவற்றையும் நீக்கி அடியோங்களை அடிமை கொண்டு அருள்புரிந்த எங்கள் தலைவனே, பள்ளி எழுந்தருளாய் - எங்கள் வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளும்பொருட்டுத் திருப்பள்ளியி னின்றும் எழுந்தருளவேண்டும். புலவோர் நின்னைப் பூதங்கள் தோறும் கலந்து நின்றனை என்று கூறினர். அதனை அறிவோம் அன்றி, போக்கிலன் வரவிலன் என்று கூறிக்கொண்டு கீதங்கள் பாடுதலும் அதற்கேற்ப ஆடுதலும் செய்வ தைக் கேட்டும் கண்டும் அறிவோம் அன்றி, உனைக் கண்டறிந்தவரை நாங்கள் கேள்விப்பட்டும் அறியோம். திருப்பெருந்துறை மன்னா, சிந்தனைக்கும் அரியாய், அடியோங்களுக்கு எதிரில் வலிய எழுந்தருளி வந்து குற்றங்கள் எல்லாவற்றையும் நீக்கி அடியோங்களை அடிமை கொண்டு அருள்புரிந்த தலைவனே, எங்கள் வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளும் பொருட்டுத் திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக என்பதாம். புலவோர் நின்னைப் பூதங்கள் தோறும் நின்றாய் என்பர். போக்கி லன் வரவிலன் என்பர். கீதங்கள் பாடுதல் ஆடுதல் செய்வர், இவை களைக் கேட்டும் கண்டும் அறிவோமன்றி உனைக் கண்டறிவாரைக் கேட்டும் அறியோம் என்பது முதல் இரண்டடிகளின் தாற்பரியப் பொருளாகும். பூதங்கள் என்றது ஈண்டு உயிர்ப்பொருள்களையும் உயிரில் பொருள்களாகிய நிலம் நீர் தீ வளி வான் என்னும் ஐம்பூதங் களையும் குறித்தது. அல்லால் இரண்டும் கேட்டறியோம் என்னும் முற்றுவினை கொண்டு முடிந்தன. இறைவன்போக்கிலன் வரவிலனாதல் சர்வவியாபகனாதல் பற்றியாகும். போக்கு வரவு - இறப்புப் பிறப்பு எனினுமாம். ''போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே' (சிவ புராணம்77). புலவோர் எனப் பொதுப்படக்கூறினும் ஈண்டு *தத்துவ ஞானிகளாகிய மெய்யறிவாளரைக் குறித்தது. கீதம் - இசைப்பாடல். ஆடுதல் - ஆனந்தக்கூத்தாடுதல். பாடுதல் ஆடுதல் - மெய்விரவு பேரன்பால் நிகழ்வன. 'மெய்விரவு பேரன்பு மிகுதியினா லாடுதலும், அவ்வியல்பிற் பாடுதலு மாய்நிகழ்வார்" (பெரிய. திருநாளைப்.15) பாடினான் ஆடினான் களித்தான், மற்றவன் பெறும் உவகையின் பெருமையார் வகுப்பார்'" (கந்த - சயந்தன் கனவு. 14). கேட்டும் அறி யோம் என்னும் எச்சவும்மை தொக்கது;. அதனால் கண்டும் அறி *'தத்துவஞானந் தலைப்பட்டவர்கட்கே" திருமந்திரம் 2330.
திருப்பள்ளியெழுச்சி 889 கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா - குளிர்ச்சி பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அரசனே சிந்தனைக்கும் அரியாய் - நினைத்தற்கும் அரியவனே எங்கள் முன்வந்து - அடியோங்களுக்கு எதிரில் உருவத்திருமேனி கொண்டு வலிய எழுந் தருளிவந்து ஏதங்கள் அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெரு மான் - குற்றங்கள் எல்லாவற்றையும் நீக்கி அடியோங்களை அடிமை கொண்டு அருள்புரிந்த எங்கள் தலைவனே பள்ளி எழுந்தருளாய் - எங்கள் வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளும்பொருட்டுத் திருப்பள்ளியி னின்றும் எழுந்தருளவேண்டும் . புலவோர் நின்னைப் பூதங்கள் தோறும் கலந்து நின்றனை என்று கூறினர் . அதனை அறிவோம் அன்றி போக்கிலன் வரவிலன் என்று கூறிக்கொண்டு கீதங்கள் பாடுதலும் அதற்கேற்ப ஆடுதலும் செய்வ தைக் கேட்டும் கண்டும் அறிவோம் அன்றி உனைக் கண்டறிந்தவரை நாங்கள் கேள்விப்பட்டும் அறியோம் . திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் அடியோங்களுக்கு எதிரில் வலிய எழுந்தருளி வந்து குற்றங்கள் எல்லாவற்றையும் நீக்கி அடியோங்களை அடிமை கொண்டு அருள்புரிந்த தலைவனே எங்கள் வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளும் பொருட்டுத் திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக என்பதாம் . புலவோர் நின்னைப் பூதங்கள் தோறும் நின்றாய் என்பர் . போக்கி லன் வரவிலன் என்பர் . கீதங்கள் பாடுதல் ஆடுதல் செய்வர் இவை களைக் கேட்டும் கண்டும் அறிவோமன்றி உனைக் கண்டறிவாரைக் கேட்டும் அறியோம் என்பது முதல் இரண்டடிகளின் தாற்பரியப் பொருளாகும் . பூதங்கள் என்றது ஈண்டு உயிர்ப்பொருள்களையும் உயிரில் பொருள்களாகிய நிலம் நீர் தீ வளி வான் என்னும் ஐம்பூதங் களையும் குறித்தது . அல்லால் இரண்டும் கேட்டறியோம் என்னும் முற்றுவினை கொண்டு முடிந்தன . இறைவன்போக்கிலன் வரவிலனாதல் சர்வவியாபகனாதல் பற்றியாகும் . போக்கு வரவு - இறப்புப் பிறப்பு எனினுமாம் . ' ' போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே ' ( சிவ புராணம் 77 ) . புலவோர் எனப் பொதுப்படக்கூறினும் ஈண்டு * தத்துவ ஞானிகளாகிய மெய்யறிவாளரைக் குறித்தது . கீதம் - இசைப்பாடல் . ஆடுதல் - ஆனந்தக்கூத்தாடுதல் . பாடுதல் ஆடுதல் - மெய்விரவு பேரன்பால் நிகழ்வன . ' மெய்விரவு பேரன்பு மிகுதியினா லாடுதலும் அவ்வியல்பிற் பாடுதலு மாய்நிகழ்வார் ( பெரிய . திருநாளைப் .15 ) பாடினான் ஆடினான் களித்தான் மற்றவன் பெறும் உவகையின் பெருமையார் வகுப்பார் ' ( கந்த - சயந்தன் கனவு . 14 ) . கேட்டும் அறி யோம் என்னும் எச்சவும்மை தொக்கது ;. அதனால் கண்டும் அறி * ' தத்துவஞானந் தலைப்பட்டவர்கட்கே திருமந்திரம் 2330 .