திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பள்ளியெழுச்சி 891 உன்னுடைய அடியவர்கள் உன்னை எய்தி, பந்தனை அறுத்தார் - தங் கள் பாசபந்தத்தினை நீக்கிக் கொண்டனர். அவர் பலரும்-அவர் கள் எல்லோரும், மானுடத்து மைப்பு உறு கண்ணியர் இயல்பின் வணங்குகின்றார் - மானுட மகளிரான அஞ்சனம் எழுதிய கண்களை யுடைய பெண்கள் தம் நாயகரை வணங்கும் தன்மைபோல நின் னைத் தம் நாயகனாகக்கொண்டு நாயக நாயகி பாவகமாக வழிபடு கின்றனர்; அவ்வழிபாட்டையே யாங்களும் விரும்புகின்றோம். ஆத லால், அணங்கின் மணவாளா - உமையம்மைக்கு நாயகனே, செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே - சிமிழின் தன்மைபொருந்திய தாமரைப் பேரரும்புகள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் - எடுத்த இந்தப் பிறவியை நீக்கி அடியோங்களை ஆட்கொண்டு அருள்செய்த எங்கள் தலைவனே, பள்ளி எழுந்தருளாய் - திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. உன்னடியார் உன்னை எய்திப் பாசபந்தத்தினை நீக்கிக்கொண்ட னர். அவர் பலரும் மானுடத்தலைவியர் தம் நாயகரை வணங்குமாறு போல நின்னைத் தம் நாயகனாகக்கொண்டு வழிபடுகின்றனர், அவ் வழிபாட்டையே நாங்களும் விரும்புகின்றோம். ஆதலால் அணங் கின் மணவாளா, திருப்பெருந்துறையுறை சிவபெருமானே, எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமானே, திருப்பள்ளியினின்றும் எழுந் தருள்வாயாக என்பதாம். பப்பு - பரப்பு 'பப்போதிப்பவணனாய்" (தே.நா.5-6) பப்பு அற - மனவிரிவு நீங்க என்றது மனம் ஒருவழிப்பட என்றவாறு. வீட்டிருந்துணர்தல் - சீவன் முத்தநிலையிலிருந்து உண்மை தெளிந்து உணர்தல். வந்து - நின்னிடத்து வந்து என முன்னிலைக்கண் வந் தது. பந்தனை -பாசக்கட்டு, "பந்தனை அறுப்பானை" (சத. 32) பந்தமறுத்தெனை யாண்டு" (அச்சோ 6) என வருவன காண்க. மானுடத்து மைப்புறு கண்ணியர் இயல்பின் வணங்குகின்றார் என இயைத்துப் பொருள் கொள்க. மைப்புறுசண் - அஞ்சனந் தீட்டிய கண். "தடமுலையார் தங்கள் மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு'' (அற்புத.7) என்பதிலும் இப்பொருட்டாதல் காண்க. மைப்பு - கறுப்பு 'மைப்பு றுத்தகண் அரம்பைமார்" (காஞ்சிப்புராண, அரிசாப: 2.) மானுடத் தியல்பின் வணங்குகின்றார் - மானுடப்பெண்டிர் தம் நாயகரை வணங் குந் தன்மை போல நின்னைத் தம் நாயகராகக் கொண்டு வழிபடுகின் றனர் என்றவாறு. இறைவனை நாயகனாகவும் ஆன்மாவை நாயகி யாகவும் பாவித்து வழிபடும் மரபு, ''வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்'' 12 10 எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும்,
திருப்பள்ளியெழுச்சி 891 உன்னுடைய அடியவர்கள் உன்னை எய்தி பந்தனை அறுத்தார் - தங் கள் பாசபந்தத்தினை நீக்கிக் கொண்டனர் . அவர் பலரும் - அவர் கள் எல்லோரும் மானுடத்து மைப்பு உறு கண்ணியர் இயல்பின் வணங்குகின்றார் - மானுட மகளிரான அஞ்சனம் எழுதிய கண்களை யுடைய பெண்கள் தம் நாயகரை வணங்கும் தன்மைபோல நின் னைத் தம் நாயகனாகக்கொண்டு நாயக நாயகி பாவகமாக வழிபடு கின்றனர் ; அவ்வழிபாட்டையே யாங்களும் விரும்புகின்றோம் . ஆத லால் அணங்கின் மணவாளா - உமையம்மைக்கு நாயகனே செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே - சிமிழின் தன்மைபொருந்திய தாமரைப் பேரரும்புகள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் - எடுத்த இந்தப் பிறவியை நீக்கி அடியோங்களை ஆட்கொண்டு அருள்செய்த எங்கள் தலைவனே பள்ளி எழுந்தருளாய் - திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக . உன்னடியார் உன்னை எய்திப் பாசபந்தத்தினை நீக்கிக்கொண்ட னர் . அவர் பலரும் மானுடத்தலைவியர் தம் நாயகரை வணங்குமாறு போல நின்னைத் தம் நாயகனாகக்கொண்டு வழிபடுகின்றனர் அவ் வழிபாட்டையே நாங்களும் விரும்புகின்றோம் . ஆதலால் அணங் கின் மணவாளா திருப்பெருந்துறையுறை சிவபெருமானே எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமானே திருப்பள்ளியினின்றும் எழுந் தருள்வாயாக என்பதாம் . பப்பு - பரப்பு ' பப்போதிப்பவணனாய் ( தே.நா.5-6 ) பப்பு அற - மனவிரிவு நீங்க என்றது மனம் ஒருவழிப்பட என்றவாறு . வீட்டிருந்துணர்தல் - சீவன் முத்தநிலையிலிருந்து உண்மை தெளிந்து உணர்தல் . வந்து - நின்னிடத்து வந்து என முன்னிலைக்கண் வந் தது . பந்தனை -பாசக்கட்டு பந்தனை அறுப்பானை ( சத . 32 ) பந்தமறுத்தெனை யாண்டு ( அச்சோ 6 ) என வருவன காண்க . மானுடத்து மைப்புறு கண்ணியர் இயல்பின் வணங்குகின்றார் என இயைத்துப் பொருள் கொள்க . மைப்புறுசண் - அஞ்சனந் தீட்டிய கண் . தடமுலையார் தங்கள் மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு ' ' ( அற்புத .7 ) என்பதிலும் இப்பொருட்டாதல் காண்க . மைப்பு - கறுப்பு ' மைப்பு றுத்தகண் அரம்பைமார் ( காஞ்சிப்புராண அரிசாப : 2. ) மானுடத் தியல்பின் வணங்குகின்றார் - மானுடப்பெண்டிர் தம் நாயகரை வணங் குந் தன்மை போல நின்னைத் தம் நாயகராகக் கொண்டு வழிபடுகின் றனர் என்றவாறு . இறைவனை நாயகனாகவும் ஆன்மாவை நாயகி யாகவும் பாவித்து வழிபடும் மரபு ' ' வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் ' ' 12 10 எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும்