திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை சோதியிடத்தன்பல்லாமல் இப்பூக்கள் நிறைந்து இப்படுக்கையினி டத்தும் அன்பு வைத்தனையோ? என்று துயிலெழுப்ப வந்தவர் வினா வுதலும், நேரிழையீர்!, சீசி உங்கள் வாயில் இவ்வாறு இகழ்ந்து கூறும் சொற்களும் சிலவுளவோ? விளையாடிக்கொண்டு பழிக்கின்ற காலமும் இதுவோ? என்று துயிலெழுந்தவள் கூற விண்ணோர்கள் ஏத்துதற்கு நாணும் மலர் போன்ற திருவடிகளை அடியோங்களுக்குத் தந்தருளத் தாமே வலிய இந்நிலவுலகில் வந்தருளும் தேசனும் சிவ லோகனும் தில்லைச்சிற்றம்பலத்துள் ஆனந்தக்கூத்து ஆடுபவனு மாகிய ஈசனிடத்து அன்புடைய நின்போன்றவர் எவ்வளவு உயர்வு டையவர், யாம் எவ்வளவு தாழ்வுடையோம். ஆதலால் எம்பிழை பொறுத்தியென்று எழுப்பியவர் நயமொழி கூறி, எம்பாவாய்! இவளை இசுழ்ந்த எம்பிழை பொறுப்பாயாக (என வேண்டுதல் செய்து அவளையும் உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்) என்பதாம். 493 எழுந்தவள் துயிலெழுப்ப வந்தவர்களோடு உரையாடும் பொழு தெல்லாம் இரவும் பகலும் என் அன்பு மேலான ஒளியையுடைய இறைவன் ஒருவனுக்கே என்று கூறினமையின் “பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்" என்றார். பாசம் -பத்தி. பரஞ்சோதி - எல்லாப் பொருட்கும் அப்பாலாகிய சோதி (கோவை 131). உரை பரஞ்சோதிக்கு என்னும் நான்காவது இடப்பொருளில் வந்தது. இராப்பகல் என்புழி எண்ணும்மைகள் தொக்கு நின்றன. நாம் பேசும்போது எப்போது என்றது நாம் நின்னுடன் உரையாடும் இப்பொழுது எப்பொழுது? இரவும் பகலுமல்லாத பொழுதா? இரவும் பகலும் பாசம் பரஞ்சோதிக்கென்ற நீ இராக் காலமாகிய இப்பொழுது இறைவனிடத்துப் பத்தி செய்யாது உறங் குகின்றனையே என்றவாறு. இனி, 'நாம் பேசும்போது எப்போது இராப்பகல் பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்' எனக்கூட்டி, நாம் வார்த்தையாடும் பொழுது எப்போதும் இரவும் பகலும் என் அன்பு மேலான ஒளியையுடைய இறைவன் பொருட்டே நிகழும் என்று கூறுவாய் என்பாருமுளர். அவர், எப்போதும், என்னும் உம்மை கெட்டது என்பர். போது - அலரும் பருவத்தரும்பு. அது அலர்வதனைக் கொண்டு பண்டை மக்கள் பொழுதினை அறிந்தமையின் பொழுது போது எனப்பட்டது. செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத், தவ்வி தழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து" 40 - 41) வருதல் காண்க. நெடுநல்வாடையில் என
திருவெம்பாவை சோதியிடத்தன்பல்லாமல் இப்பூக்கள் நிறைந்து இப்படுக்கையினி டத்தும் அன்பு வைத்தனையோ ? என்று துயிலெழுப்ப வந்தவர் வினா வுதலும் நேரிழையீர் ! சீசி உங்கள் வாயில் இவ்வாறு இகழ்ந்து கூறும் சொற்களும் சிலவுளவோ ? விளையாடிக்கொண்டு பழிக்கின்ற காலமும் இதுவோ ? என்று துயிலெழுந்தவள் கூற விண்ணோர்கள் ஏத்துதற்கு நாணும் மலர் போன்ற திருவடிகளை அடியோங்களுக்குத் தந்தருளத் தாமே வலிய இந்நிலவுலகில் வந்தருளும் தேசனும் சிவ லோகனும் தில்லைச்சிற்றம்பலத்துள் ஆனந்தக்கூத்து ஆடுபவனு மாகிய ஈசனிடத்து அன்புடைய நின்போன்றவர் எவ்வளவு உயர்வு டையவர் யாம் எவ்வளவு தாழ்வுடையோம் . ஆதலால் எம்பிழை பொறுத்தியென்று எழுப்பியவர் நயமொழி கூறி எம்பாவாய் ! இவளை இசுழ்ந்த எம்பிழை பொறுப்பாயாக ( என வேண்டுதல் செய்து அவளையும் உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் ) என்பதாம் . 493 எழுந்தவள் துயிலெழுப்ப வந்தவர்களோடு உரையாடும் பொழு தெல்லாம் இரவும் பகலும் என் அன்பு மேலான ஒளியையுடைய இறைவன் ஒருவனுக்கே என்று கூறினமையின் பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் என்றார் . பாசம் -பத்தி . பரஞ்சோதி - எல்லாப் பொருட்கும் அப்பாலாகிய சோதி ( கோவை 131 ) . உரை பரஞ்சோதிக்கு என்னும் நான்காவது இடப்பொருளில் வந்தது . இராப்பகல் என்புழி எண்ணும்மைகள் தொக்கு நின்றன . நாம் பேசும்போது எப்போது என்றது நாம் நின்னுடன் உரையாடும் இப்பொழுது எப்பொழுது ? இரவும் பகலுமல்லாத பொழுதா ? இரவும் பகலும் பாசம் பரஞ்சோதிக்கென்ற நீ இராக் காலமாகிய இப்பொழுது இறைவனிடத்துப் பத்தி செய்யாது உறங் குகின்றனையே என்றவாறு . இனி ' நாம் பேசும்போது எப்போது இராப்பகல் பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் ' எனக்கூட்டி நாம் வார்த்தையாடும் பொழுது எப்போதும் இரவும் பகலும் என் அன்பு மேலான ஒளியையுடைய இறைவன் பொருட்டே நிகழும் என்று கூறுவாய் என்பாருமுளர் . அவர் எப்போதும் என்னும் உம்மை கெட்டது என்பர் . போது - அலரும் பருவத்தரும்பு . அது அலர்வதனைக் கொண்டு பண்டை மக்கள் பொழுதினை அறிந்தமையின் பொழுது போது எனப்பட்டது . செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத் தவ்வி தழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து 40 - 41 ) வருதல் காண்க . நெடுநல்வாடையில் என