திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

896 திருவாசக ஆராய்ச்சியுரை (கலி. 54:9) என்புழிப்போல: பந்தணை விரலியும் நீயும் எழுந்தருளி என்றது திருவருட் சத்தி முன்னர் வந்து பதிய இறைவன் பின்னர் வந்து ஆட்கொள்ளும் முறைமையைக் குறித்தது. அணுக்கன் தொண்டர் வாழுமிடங்கள் இறையருள் விளக்கம் பயின்ற பழமையுடையனவென்பார் "பழங்குடில்" என்றார். குடில் தொறும் எழுந்தருளி - குடில்தொறும் அருள் செய்யுமாறு எழுந்தருளி. 'இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற் பாதந் தந்தருளுஞ் சேவகனை" (திருவெம்பா. 17) என வருதல் காண்க. குடில் அடியாரின் இதயகமலத்துள்ள சிதாகாயத்தையும் குறிக்கும். செந்தழல்புரை திருமேனி - செந்தழலையொத்த சிவந்த மேனி. (திருவெம்பா.11) ஆரழல் போற் செய்யா" 'செந்தழல் போல் திருமேனித் தேவர்பிரான்' (குயிற். 10) "தீ மேனியானுக்கே" (கோத். 20) என அடிகள் பிறவிடங்களிலும் கூறுவன காண்க.திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி என்றது திருப்பெருந்துறையில் தாம் எழுந் தருளியிருந்த கோயிலையும் காட்டி என்றவாறு. அந்தணனாவதும் காட்டி என்றது அந்தண வடிவப் பரமாசாரியனாய் எழுந்தருளி வந்து ஆட்கொண்டமையைக் குறித்தது. "மறைபயில் அந்தணனாய் ஆட்கொண்ட திருவான தேவர்க்கே" (கோத் 4) உருநா மறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்" (தெள். 1) அந்தண னாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி எந்தம ராமிவ னென்றிங் கென்னையு மாட்கொண்டருளும்" (குயிற்.10) என வருவன காண்க. இதன் கண் ‘ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே" என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. 8 374 விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்டிருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாயுல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.
896 திருவாசக ஆராய்ச்சியுரை ( கலி . 54 : 9 ) என்புழிப்போல : பந்தணை விரலியும் நீயும் எழுந்தருளி என்றது திருவருட் சத்தி முன்னர் வந்து பதிய இறைவன் பின்னர் வந்து ஆட்கொள்ளும் முறைமையைக் குறித்தது . அணுக்கன் தொண்டர் வாழுமிடங்கள் இறையருள் விளக்கம் பயின்ற பழமையுடையனவென்பார் பழங்குடில் என்றார் . குடில் தொறும் எழுந்தருளி - குடில்தொறும் அருள் செய்யுமாறு எழுந்தருளி . ' இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற் பாதந் தந்தருளுஞ் சேவகனை ( திருவெம்பா . 17 ) என வருதல் காண்க . குடில் அடியாரின் இதயகமலத்துள்ள சிதாகாயத்தையும் குறிக்கும் . செந்தழல்புரை திருமேனி - செந்தழலையொத்த சிவந்த மேனி . ( திருவெம்பா .11 ) ஆரழல் போற் செய்யா ' செந்தழல் போல் திருமேனித் தேவர்பிரான் ' ( குயிற் . 10 ) தீ மேனியானுக்கே ( கோத் . 20 ) என அடிகள் பிறவிடங்களிலும் கூறுவன காண்க.திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி என்றது திருப்பெருந்துறையில் தாம் எழுந் தருளியிருந்த கோயிலையும் காட்டி என்றவாறு . அந்தணனாவதும் காட்டி என்றது அந்தண வடிவப் பரமாசாரியனாய் எழுந்தருளி வந்து ஆட்கொண்டமையைக் குறித்தது . மறைபயில் அந்தணனாய் ஆட்கொண்ட திருவான தேவர்க்கே ( கோத் 4 ) உருநா மறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ( தெள் . 1 ) அந்தண னாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி எந்தம ராமிவ னென்றிங் கென்னையு மாட்கொண்டருளும் ( குயிற் .10 ) என வருவன காண்க . இதன் கண் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . 8 374 விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்டிருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாயுல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே .