திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

375 திருப்பள்ளியெழுச்சி புவனியிற் போய்ப்பிற வாமையி னாணம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவுநின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே. 899 ப-ரை: திருப்பெருந்துறை உறைவாய் - திருப்பெருந்துறைக் கோயிலுள் எழுந்தருளியிருப்பவனே, நாம் புவனியில் போய் பிறவா மையில் நாள் அவமே போக்குகின்றோம் - நாங்கள் பூமியிற் சென்று பிறவாமையால் எங்கள் உலகங்களிலிருந்து வாழ்நாளை வீணாளாகக் கழிக்கின்றோம், இந்தப் பூமி சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி - இந்தப் பூவுலகம் சிவபெருமான் உயிர்களை வீடு பெறுமாறு ஆட்கொள்கின்ற முறைமையுடையது என்று கருதி, திருமால் ஆம் அவன் விருப்பு எய்தவும் - திருமாலாகிய அந்தப் பழைய பெரியோன் விருப்பம் அடையவும், மலரவன் ஆசைப்படவும் - தாமரைப் பூவில் இருக்கும் பிரமதேவன் ஆசைப்படவும், நின் அலர்ந்த மெய் கருணை யும் நீயும் - நினது விரிந்த சத்தாகிய திருவருட் சத்தியும் நீயும், அவ னியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் - பூமியில் திருவருளால் எழுந்தருளி வந்து எங்களை அடிமை கொள்ள வல்லவனே, ஆர் அமுதே - கிடைத்தற்கரிய அமுதம் போன்றவனே. பள்ளி எழுந்தரு ளாய் - திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே, நாம் பூமியிற் சென்று பிறவாமையால் எங்கள் உலகங்களிலிருந்து வாழ்நாளை வீணே கழிக்கின்றோம். இந்தப் பூமி சிவபெருமான் உயிர்களை வீடுபெறுமாறு ஆட்கொள்கின்ற முறைமையுடையது என்று கருதி திருமால் விருப்பு எய்தவும் பிரமன் ஆசைப்படவும் நின்மெய்க்கருணையும் நீயும் இவ்வுல கில் போந்தருளி எம்மை அடிமை கொள்ள வல்லவனே, ஆரமுதே.நீ திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக என்பதாம். பூமியிற் சென்று பிறந்து பயனைப் பெறாமல் தத்தம் உலகங்களிலி ருந்து வீணே காலத்தைக் கழித்தலின், "புவனியிற் போய்ப் பிறவா மையின் நாம் நாள் அவமே போக்குகின்றோம்" என்றார். "போக பூமியினிற் போகதனுவினாற் பொருந்தலாகாது ஏகமாம் இன்பசித்தி இயம்பிடில் கருமபூமி ஆகமானது கொண்டன்றி"
375 திருப்பள்ளியெழுச்சி புவனியிற் போய்ப்பிற வாமையி னாணம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவுநின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே . 899 - ரை : திருப்பெருந்துறை உறைவாய் - திருப்பெருந்துறைக் கோயிலுள் எழுந்தருளியிருப்பவனே நாம் புவனியில் போய் பிறவா மையில் நாள் அவமே போக்குகின்றோம் - நாங்கள் பூமியிற் சென்று பிறவாமையால் எங்கள் உலகங்களிலிருந்து வாழ்நாளை வீணாளாகக் கழிக்கின்றோம் இந்தப் பூமி சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி - இந்தப் பூவுலகம் சிவபெருமான் உயிர்களை வீடு பெறுமாறு ஆட்கொள்கின்ற முறைமையுடையது என்று கருதி திருமால் ஆம் அவன் விருப்பு எய்தவும் - திருமாலாகிய அந்தப் பழைய பெரியோன் விருப்பம் அடையவும் மலரவன் ஆசைப்படவும் - தாமரைப் பூவில் இருக்கும் பிரமதேவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணை யும் நீயும் - நினது விரிந்த சத்தாகிய திருவருட் சத்தியும் நீயும் அவ னியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் - பூமியில் திருவருளால் எழுந்தருளி வந்து எங்களை அடிமை கொள்ள வல்லவனே ஆர் அமுதே - கிடைத்தற்கரிய அமுதம் போன்றவனே . பள்ளி எழுந்தரு ளாய் - திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக . திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே நாம் பூமியிற் சென்று பிறவாமையால் எங்கள் உலகங்களிலிருந்து வாழ்நாளை வீணே கழிக்கின்றோம் . இந்தப் பூமி சிவபெருமான் உயிர்களை வீடுபெறுமாறு ஆட்கொள்கின்ற முறைமையுடையது என்று கருதி திருமால் விருப்பு எய்தவும் பிரமன் ஆசைப்படவும் நின்மெய்க்கருணையும் நீயும் இவ்வுல கில் போந்தருளி எம்மை அடிமை கொள்ள வல்லவனே ஆரமுதே.நீ திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக என்பதாம் . பூமியிற் சென்று பிறந்து பயனைப் பெறாமல் தத்தம் உலகங்களிலி ருந்து வீணே காலத்தைக் கழித்தலின் புவனியிற் போய்ப் பிறவா மையின் நாம் நாள் அவமே போக்குகின்றோம் என்றார் . போக பூமியினிற் போகதனுவினாற் பொருந்தலாகாது ஏகமாம் இன்பசித்தி இயம்பிடில் கருமபூமி ஆகமானது கொண்டன்றி