திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 900 எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங்காண்க. இன்பதுன்பங்களை அநு பவித்தற்குரிய மேல் கீழ் உலகங்கள் போலல்லாமல் இந்தப் பூவுல கமானது உயிர்கள் வந்து பிறந்து சிவனை வழிபட்டு முத்தியடைதற் குரியவுலகமாதலின் 'இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு' என்றருளிச் செய்தார். ஆறு என்றது ஈண்டு முறைமையை, திருமாலும் பிரமனும் இப்பூமியில் மனிதராய்ப் பிறத்தலை விரும்புதற்கு ஏது இப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற முறைமையை உடைமையாகும். திரு மாலாம் அவன் என்பதில் அவன் என்னும் பண்டறிசுட்டு திருமாலின் பழமையையும் பெருமையையும் உணர்த்திநின்றது. மலரவன் - பிர மன். "மலரவன் அறியா வானவா" (செத்திலா. 10) "மலரவற் கொருமுக மொழித்து" (ஞான. 41 : 7).கருணையும் நீயும் புகுந்து என்றார், இறைவன் எப்பொழுதும் கருணையோடு பிரிவின்றி யிருப்பவ னாதலின். கருணையென்றது திருவருட்சத்தியை. ''உடையாள் உன் தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி" (கோயில் மூத்த.1) என்பதனாலுமறிக. அலர்ந்த கருணை - எல்லாவுயிர் கண்மேலும் செல் லும் கருணை அவனியில் புகுந்து என்றமையால் திருவருளால் வலிய எழுந்தருளி வந்து என்பது வருவிக்கப்பட்டது அவனியில் ஆட்கொண் டமை, 'அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி மருளிய பெருமையை" (போற்றி.75-6) ''சிவனவனி வந்தருளி எந்தரமு மாட்கொண்டு" (அம்மானை.3) வானோர்க் கரிய சிவன் பூதலத்தே வலித்தாண்டு கொண்டான்" (தெள்.7) என வருவனவற்றானுங் காண்க. அந்தமிலின்பத் தழிவில் வீடாகிய பரமுத்தியை அருளும் ஆற்றல் பிற தெய்வங்களுக்கின்மையின் "ஆட்கொள்ள வல்லாய்" என்றார். இதன் கண், 'ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே" என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. agat@ பதி
திருவாசக ஆராய்ச்சியுரை 900 எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங்காண்க . இன்பதுன்பங்களை அநு பவித்தற்குரிய மேல் கீழ் உலகங்கள் போலல்லாமல் இந்தப் பூவுல கமானது உயிர்கள் வந்து பிறந்து சிவனை வழிபட்டு முத்தியடைதற் குரியவுலகமாதலின் ' இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு ' என்றருளிச் செய்தார் . ஆறு என்றது ஈண்டு முறைமையை திருமாலும் பிரமனும் இப்பூமியில் மனிதராய்ப் பிறத்தலை விரும்புதற்கு ஏது இப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற முறைமையை உடைமையாகும் . திரு மாலாம் அவன் என்பதில் அவன் என்னும் பண்டறிசுட்டு திருமாலின் பழமையையும் பெருமையையும் உணர்த்திநின்றது . மலரவன் - பிர மன் . மலரவன் அறியா வானவா ( செத்திலா . 10 ) மலரவற் கொருமுக மொழித்து ( ஞான . 41 : 7 ) .கருணையும் நீயும் புகுந்து என்றார் இறைவன் எப்பொழுதும் கருணையோடு பிரிவின்றி யிருப்பவ னாதலின் . கருணையென்றது திருவருட்சத்தியை . ' ' உடையாள் உன் தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி ( கோயில் மூத்த .1 ) என்பதனாலுமறிக . அலர்ந்த கருணை - எல்லாவுயிர் கண்மேலும் செல் லும் கருணை அவனியில் புகுந்து என்றமையால் திருவருளால் வலிய எழுந்தருளி வந்து என்பது வருவிக்கப்பட்டது அவனியில் ஆட்கொண் டமை ' அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி மருளிய பெருமையை ( போற்றி.75-6 ) ' ' சிவனவனி வந்தருளி எந்தரமு மாட்கொண்டு ( அம்மானை .3 ) வானோர்க் கரிய சிவன் பூதலத்தே வலித்தாண்டு கொண்டான் ( தெள் .7 ) என வருவனவற்றானுங் காண்க . அந்தமிலின்பத் தழிவில் வீடாகிய பரமுத்தியை அருளும் ஆற்றல் பிற தெய்வங்களுக்கின்மையின் ஆட்கொள்ள வல்லாய் என்றார் . இதன் கண் ' ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே என்பதனால் திரோதான சுத்தி என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . agat @ பதி