திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயின் மூத்த திருப்பதிகம் ப -ரை. பொன்னம்பலத்து அரைசே - பொன்னம்பலத்தின் கண் ஆனந்தத்தாண்டவஞ் செய்தருளுகின்ற கூத்தப் பெருமானே. முழுமுதலே சிதசித்துப் பிரபஞ்சங்கள் எல்லாவற்றுக்கும் முதற் பொருளாயுள்ளவனே, ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் வழி முதலே - ஐம்புலன்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் உயிராகிய எனக்கும் வழிநடத்தும் நிமித்த காரணனாயிருப்பவனே, நின் பழ அடியார் திரள் வான் குழுமி கெழுமுதலே - நினது பழமையான மெய்யடியார் கூட்டம் சிதாகாயத்திலே கூடிப் பொருந்துவதற்குக் காரணமாய முதல்வனாயிருப்பவனே, அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ என்று அழும் அதுவே அன்றி - அந்த அருளினை எனக்குத் தந்து சிதா காயத்தின் கண்ணே சென்றிருக்க இரங்கியருள் செய்குவை கொல்லோ என்று ஏசற்றிருந்து அழுமதுவே யன்றி, மற்று என் செய் கேன் - யான் வேறு யாது செய்வேன்? . 907 பொன்னம்பலத்தரசே, சிதசித்துப் பிரபஞ்சங்கள் எல்லாவற்றிற் கும் முதற்பொருளாயுள்ளவனே, ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்தனக் கும் வழிமுதலாயுள்ளவனே, நின் பழவடியார் கூட்டம் சிதாகாயத் தின்கண் கூடிப்பொருந்து தற்குக் காரணமான முதல்வனே. அவ்வரு ளினை எனக்கும் தந்து சிதாகாயத்தின் கண்ணே சென்றிருக்க இரங் குவைகொல்லோ என்று அழுதலேயன்றி யான் வேறு யாது செய் வேன்? என்பதாம். முழுமுதலே என்றது இறைவனது சர்வவியாபகத்துள் சிதசித்துப் பிரபஞ்சமெல்லாம் அடங்குதல் பற்றியாகும். 'சீர்த்த திண்புவன முழுவது மேனைத் திசைகளோ டண்டங்க ளனைத்தும் போர்த்த தம்பெருமை' எனக் கருவூர்த் தேவர் திருவிசைப்பாவிலும் வருதல் காண்க. (கோயில்.8) ஐம்புலன் - ஐம்பொறிகளால் அறியப்படும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. மூவர்க்கும் - அயன் அரி அரன் என்னும் மூவர்க்கும். என்றனக்கும் என்றது உயிருக்கும் என்றவாறு. ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்றனக்கும் வழிமுதலே என்றமையால் ஐம்பொறியறி விற்கும் மும்மூர்த்திகளுக்கும் உயிருக்கும் நல்வழிப்படுத்தும் நிமித்த காரணன் இறைவன் என்பது கூறப்பட்டது. நின் பழலடியார் கூட்டம் நினது பரவெளியின் கண்ணே கூடிப் பொருந்துவதற்கு நிமித்த காரணனே என்பார் 'பழவடியார் திரள் வான் குழுமிக் கெழு முதலே" என்றார். கெழுவும் முதலே - கெழு முதலே என ஈறு கெட்டது.
கோயின் மூத்த திருப்பதிகம் -ரை . பொன்னம்பலத்து அரைசே - பொன்னம்பலத்தின் கண் ஆனந்தத்தாண்டவஞ் செய்தருளுகின்ற கூத்தப் பெருமானே . முழுமுதலே சிதசித்துப் பிரபஞ்சங்கள் எல்லாவற்றுக்கும் முதற் பொருளாயுள்ளவனே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் வழி முதலே - ஐம்புலன்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் உயிராகிய எனக்கும் வழிநடத்தும் நிமித்த காரணனாயிருப்பவனே நின் பழ அடியார் திரள் வான் குழுமி கெழுமுதலே - நினது பழமையான மெய்யடியார் கூட்டம் சிதாகாயத்திலே கூடிப் பொருந்துவதற்குக் காரணமாய முதல்வனாயிருப்பவனே அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ என்று அழும் அதுவே அன்றி - அந்த அருளினை எனக்குத் தந்து சிதா காயத்தின் கண்ணே சென்றிருக்க இரங்கியருள் செய்குவை கொல்லோ என்று ஏசற்றிருந்து அழுமதுவே யன்றி மற்று என் செய் கேன் - யான் வேறு யாது செய்வேன் ? . 907 பொன்னம்பலத்தரசே சிதசித்துப் பிரபஞ்சங்கள் எல்லாவற்றிற் கும் முதற்பொருளாயுள்ளவனே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்தனக் கும் வழிமுதலாயுள்ளவனே நின் பழவடியார் கூட்டம் சிதாகாயத் தின்கண் கூடிப்பொருந்து தற்குக் காரணமான முதல்வனே . அவ்வரு ளினை எனக்கும் தந்து சிதாகாயத்தின் கண்ணே சென்றிருக்க இரங் குவைகொல்லோ என்று அழுதலேயன்றி யான் வேறு யாது செய் வேன் ? என்பதாம் . முழுமுதலே என்றது இறைவனது சர்வவியாபகத்துள் சிதசித்துப் பிரபஞ்சமெல்லாம் அடங்குதல் பற்றியாகும் . ' சீர்த்த திண்புவன முழுவது மேனைத் திசைகளோ டண்டங்க ளனைத்தும் போர்த்த தம்பெருமை ' எனக் கருவூர்த் தேவர் திருவிசைப்பாவிலும் வருதல் காண்க . ( கோயில் .8 ) ஐம்புலன் - ஐம்பொறிகளால் அறியப்படும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன . மூவர்க்கும் - அயன் அரி அரன் என்னும் மூவர்க்கும் . என்றனக்கும் என்றது உயிருக்கும் என்றவாறு . ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்றனக்கும் வழிமுதலே என்றமையால் ஐம்பொறியறி விற்கும் மும்மூர்த்திகளுக்கும் உயிருக்கும் நல்வழிப்படுத்தும் நிமித்த காரணன் இறைவன் என்பது கூறப்பட்டது . நின் பழலடியார் கூட்டம் நினது பரவெளியின் கண்ணே கூடிப் பொருந்துவதற்கு நிமித்த காரணனே என்பார் ' பழவடியார் திரள் வான் குழுமிக் கெழு முதலே என்றார் . கெழுவும் முதலே - கெழு முதலே என ஈறு கெட்டது .