திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

908 திருவாசக ஆராய்ச்சியுரை anna அருள் தந்திருக்க இரங்குங் கொல்லோ என்றது பழவடியார் திரள் சென்று சேர்ந்து பொருந்தும் பரவெளிக் கண்ணே யானும் சென்று பொருந்தும் வண்ணம் அருளினைத் தந்து இரங்குவை கொல்லோ என்றவாறு. அடிகள், பொன்னம்பலத்தரசே, வழிமுதலே கெழு முதலே என விளித்தமைக்கு இயைய இரங்குவை கொல்லோ என்னாது இரங்குங் கொல்லோ எனச் செய்யுமென்னும் முற்றாற் கூறியது முன்னிலைக்கண் படர்க்கை வினை மயக்கமாகும். ஆகவே இரங்குங்கொல்லோ என்ப தற்கு இரங்கி அருள்வாயோ என்பது பொருளாகக் கொள்க. இரங்குங் கொல்லோ வென்று அழுமது வேயன்றி மற்றென் செய் கேன் என்றதனால் வீடடைதற்கு நிமித்தகாரணன் இறைவன் என்பது கூறினார். இதன்கண், "அருள் தந்திருக்க இரங்குங்கொல்லோ வென்று அழு மதுவேயன்றி மற்றென் செய்கேன்" என்றதனால் அநாதியாகிய சற்காரி யம் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. 4 380 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே யென்றுன் அருணோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன் கூரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பாற் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. ஆடும் ப - ரை. அரைசே - அரசனே, பொன்னம்பலத்து அமுதே என்று - பொன்னம்பலத்தின்கண் ஆனந்த நிருத்தம் செய் கின்ற அமுதம் போன்றவனே என்று எண்ணித் துதித்து, உன் அருள் நோக்கி - உன் திருவருளை எதிர்பார்த்து, இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்து வேசற்றேன் - இரையினைத் தேடுகின்ற கொக்கினைப் போல இரவும் பகலும் விரும்பியிருந்து வருந்தினேன், கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து - முத்திக்கரையை அடைதற்குரிய மெய்யடியார்கள் மகிழ்ச்சி மிக அவர்களுக்கு நினது திருவருட் காட்சியைக் கொடுத்து, உன் அடியேன் பால் - உன் அடிய வனாகிய என்னிடத்து, பிரை சேர் பாலின் நெய்போல பேசாதிருந் தால் - பிரை சேர்ந்து உறையப் பெறாத பாலின்கண் முழுவதும் புலப் படாது அடங்கியிருக்கும் நெய்யினைப் போல வெளிப்படாதும் என் னோடு உரையாடாதும் இருந்தால், ஏசாரோ - உலகினர் என்னையும் நின்னையும் இகழ்ந்துரையாரோ?
908 திருவாசக ஆராய்ச்சியுரை anna அருள் தந்திருக்க இரங்குங் கொல்லோ என்றது பழவடியார் திரள் சென்று சேர்ந்து பொருந்தும் பரவெளிக் கண்ணே யானும் சென்று பொருந்தும் வண்ணம் அருளினைத் தந்து இரங்குவை கொல்லோ என்றவாறு . அடிகள் பொன்னம்பலத்தரசே வழிமுதலே கெழு முதலே என விளித்தமைக்கு இயைய இரங்குவை கொல்லோ என்னாது இரங்குங் கொல்லோ எனச் செய்யுமென்னும் முற்றாற் கூறியது முன்னிலைக்கண் படர்க்கை வினை மயக்கமாகும் . ஆகவே இரங்குங்கொல்லோ என்ப தற்கு இரங்கி அருள்வாயோ என்பது பொருளாகக் கொள்க . இரங்குங் கொல்லோ வென்று அழுமது வேயன்றி மற்றென் செய் கேன் என்றதனால் வீடடைதற்கு நிமித்தகாரணன் இறைவன் என்பது கூறினார் . இதன்கண் அருள் தந்திருக்க இரங்குங்கொல்லோ வென்று அழு மதுவேயன்றி மற்றென் செய்கேன் என்றதனால் அநாதியாகிய சற்காரி யம் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . 4 380 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே யென்றுன் அருணோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன் கூரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பாற் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ . ஆடும் - ரை . அரைசே - அரசனே பொன்னம்பலத்து அமுதே என்று - பொன்னம்பலத்தின்கண் ஆனந்த நிருத்தம் செய் கின்ற அமுதம் போன்றவனே என்று எண்ணித் துதித்து உன் அருள் நோக்கி - உன் திருவருளை எதிர்பார்த்து இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்து வேசற்றேன் - இரையினைத் தேடுகின்ற கொக்கினைப் போல இரவும் பகலும் விரும்பியிருந்து வருந்தினேன் கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து - முத்திக்கரையை அடைதற்குரிய மெய்யடியார்கள் மகிழ்ச்சி மிக அவர்களுக்கு நினது திருவருட் காட்சியைக் கொடுத்து உன் அடியேன் பால் - உன் அடிய வனாகிய என்னிடத்து பிரை சேர் பாலின் நெய்போல பேசாதிருந் தால் - பிரை சேர்ந்து உறையப் பெறாத பாலின்கண் முழுவதும் புலப் படாது அடங்கியிருக்கும் நெய்யினைப் போல வெளிப்படாதும் என் னோடு உரையாடாதும் இருந்தால் ஏசாரோ - உலகினர் என்னையும் நின்னையும் இகழ்ந்துரையாரோ ?