திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஏசாரோ - எள்ளாரோ. எள்ளாமைப் பொருட்டு அருள் செய்ய வேண்டுமென்பது குறிப்பெச்சம். 910 இதன்கண் "உன்னடியேன்பாற் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசாதிருந்தால் ஏசாரோ" என்பதனால் அநாதியாகிய சற்காரியம் என் னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 5 381 ஏசா நிற்ப ரென்னையுனக் கடியா னென்று பேசா நிற்ப ரியான்றானும் பிறரெல்லாம் பேணா நிற்பேன் நின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. ப-ரை. தேசா -ஒளியுருவனே; ஈசா - என்னை ஆளாகவுடைய வனே; பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் - பொன்னம்பலத்தின் கண் திருநடனஞ் செய்கின்ற எந்தையே, என்னை ஏசாநிற்பர் - உலகினர் என்னைப்பித்தன் என்று ஏசுகின்றனர். பிறர் எல்லாம் உனக்கு அடி யான் என்று பேசா நிற்பர் - மற்றைய அடியவர்கள் எல்லாரும் என்னை உனக்கு அடியவன் என்று சொல்லுகின்றனர். யான் தானும் நின் அருளே பேணா நிற்பேன் - யானும் நினது திருவருட் பேற்றை விரும்புகின்றேன். நேசர் சூழ்ந்து இருக்கும் திரு ஓலக்கம் சேவிக்க- மெய்யன்பர்கள் புடைசூழ்ந்திருக்கின்ற நினது சபாமண்டபத் திருக் காட்சியைத் தரிசித்து வணங்க. இனித்தான் இரங்காயே - இனியா யாவது இரங்கி அருள்செய்வாயே. தேசா, ஈசா, பொன்னம்பலத்தாடும் எந்தாய், உலகினர் என் னைப்பித்தனென்று ஏசாநிற்பர். மற்றைய அடியவர்கள் எல்லோரும் என்னை உனக்கு அடியான் என்று பேசாநிற்பர். அதனால் தகுதியில் லாத யானும் நின் திருவருட்பேற்றை விரும்பாநிற்பேன். மெய்யன் பர்கள் சூழ்ந்திருக்கும் திருவோலக்கத்தைச் சேவிக்க இனியேனும் இரங்கி அருள்செய்வாயாக என்பதாம். ஏசாநிற்பர் என்னும் பயனிலைக்கு உலகினர் என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. "பித்தனென் றெனையுலகவர் பகர்வதோர் கார ணம் இது கேளிர்'. (அதிசய. 4) என வருதல் காண்க. பிறர் என்றது உலகினரல்லாத பிற அடியவரை. அவர்கள் எல்லோ ரும் ஒரே தன்மைத்தாக அடியவன் என்று கூறுதலின் 'பிறரெல்லாம்' என்றார்.
திருவாசக ஆராய்ச்சியுரை ஏசாரோ - எள்ளாரோ . எள்ளாமைப் பொருட்டு அருள் செய்ய வேண்டுமென்பது குறிப்பெச்சம் . 910 இதன்கண் உன்னடியேன்பாற் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசாதிருந்தால் ஏசாரோ என்பதனால் அநாதியாகிய சற்காரியம் என் னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 5 381 ஏசா நிற்ப ரென்னையுனக் கடியா னென்று பேசா நிற்ப ரியான்றானும் பிறரெல்லாம் பேணா நிற்பேன் நின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே . - ரை . தேசா -ஒளியுருவனே ; ஈசா - என்னை ஆளாகவுடைய வனே ; பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் - பொன்னம்பலத்தின் கண் திருநடனஞ் செய்கின்ற எந்தையே என்னை ஏசாநிற்பர் - உலகினர் என்னைப்பித்தன் என்று ஏசுகின்றனர் . பிறர் எல்லாம் உனக்கு அடி யான் என்று பேசா நிற்பர் - மற்றைய அடியவர்கள் எல்லாரும் என்னை உனக்கு அடியவன் என்று சொல்லுகின்றனர் . யான் தானும் நின் அருளே பேணா நிற்பேன் - யானும் நினது திருவருட் பேற்றை விரும்புகின்றேன் . நேசர் சூழ்ந்து இருக்கும் திரு ஓலக்கம் சேவிக்க மெய்யன்பர்கள் புடைசூழ்ந்திருக்கின்ற நினது சபாமண்டபத் திருக் காட்சியைத் தரிசித்து வணங்க . இனித்தான் இரங்காயே - இனியா யாவது இரங்கி அருள்செய்வாயே . தேசா ஈசா பொன்னம்பலத்தாடும் எந்தாய் உலகினர் என் னைப்பித்தனென்று ஏசாநிற்பர் . மற்றைய அடியவர்கள் எல்லோரும் என்னை உனக்கு அடியான் என்று பேசாநிற்பர் . அதனால் தகுதியில் லாத யானும் நின் திருவருட்பேற்றை விரும்பாநிற்பேன் . மெய்யன் பர்கள் சூழ்ந்திருக்கும் திருவோலக்கத்தைச் சேவிக்க இனியேனும் இரங்கி அருள்செய்வாயாக என்பதாம் . ஏசாநிற்பர் என்னும் பயனிலைக்கு உலகினர் என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது . பித்தனென் றெனையுலகவர் பகர்வதோர் கார ணம் இது கேளிர் ' . ( அதிசய . 4 ) என வருதல் காண்க . பிறர் என்றது உலகினரல்லாத பிற அடியவரை . அவர்கள் எல்லோ ரும் ஒரே தன்மைத்தாக அடியவன் என்று கூறுதலின் ' பிறரெல்லாம் ' என்றார் .