திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
383
கோயின் மூத்த திருப்பதிகம்
அருள தொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆரிங்குப்
பொருளா வென்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ.
ப -ரை. புகுந்து என்னை பொருளா ஆண்ட பொன்னே - என்
பால் வலிய வந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்து ஆட்கொண்ட
பொன்போன்றவனே, பொன்னம்பலக்கூத்தா- பொன்னம்பலத்தில்
ஆனந்தத் தாண்டவஞ் செய்பவனே, அருளாது ஒழிந்தால்-நீ எனக்கு
வீடு பேற்றினைத் தராதுவிடின், அடியேனை இங்கு அஞ்சேல் என்பார்
ஆர்- அடியேனை இவ்வுலகில் அஞ்சற்க என்று அபயந்தர வல்லார்
வேறு யாவருளர், உனைப் பிரிந்து மருள் ஆர் மனத்தோடு வருந்து
வேனை -உன்னைப் பிரிந்ததனால் உளதாகிய மனமயக்கத்தோடு துன்
பப்படுகின்ற என்னை, வா என்று உன் தெருளார் கூட்டம் காட்டாயேல்
இங்கே வருக என்று அழைத்து உன்னுடைய தெளிந்த அறிவினை
யுடைய மெய்யடியார் கூட்டத்தினைக் காட்டாதொழிந்தால், செத்தே
போனால் சிரியாரோ-ஆற்றாமை மிகுதியால் யான் இறந்துபோனால்
உலகினர் நின்னை எள்ளி நகையாடாரோ.
913
எனைப் பொருளா மதித்துப் புகுந்து ஆண்ட பொன்னே, பொன்
னம்பலக் கூத்தனே, நீ எனக்கு வீடுபேற்றினைத் தந்தருளாதொழிந்
தால் அடியேனை இவ்வுலகில் அஞ்சற்கவென்று அபயந்தரவல்லார்
வேறு யாவருளர். உன்னைப் பிரிந்ததனால் மயக்கம் பொருந்திய
மனத்தோடு துன்பப்படுகின்ற என்னை இங்கே வருகவென்று உன்
தெளிந்த அறிவினையுடைய மெய்யடியார் கூட்டத்தினைக்
தொழியின் ஆற்றாமை மிகுதியால் யான் இறந்துபட்டுப்போனால்
உலகினர் நின்னை எள்ளிநகையாடாரோ? ஆதலால் அருளவேண்
டும் என்பதாம்.
காட்டா
அருளல் - வீடுபேற்றினைத் தருதல். இங்கு - இவ்வுலகில் பொருளா
என்னை புகுந்து ஆண்ட - ஒரு பொருளென மதித்து இவ்வுலகிற் புகுந்து
ஆட்கொண்ட என்றவாறு.
'பொய்யவ னேனைப் பொருளென ஆண்டு"
''அறிவிலாத வெனைப் புகுந்து ஆண்டுகொண்டு"
'பொருளாவெனைப் புகுந்தாண்டு''
என அடிகள் அருளியமை காண்க.
நீத்.7
சத. 32
கோவை.73
88
383
கோயின்
மூத்த
திருப்பதிகம்
அருள
தொழிந்தால்
அடியேனை
அஞ்சேல்
என்பார்
ஆரிங்குப்
பொருளா
வென்னைப்
புகுந்தாண்ட
பொன்னே
பொன்னம்
பலக்கூத்தா
மருளார்
மனத்தோ
டுனைப்பிரிந்து
வருந்து
வேனை
வாவென்றுன்
தெருளார்
கூட்டங்
காட்டாயேல்
செத்தே
போனாற்
சிரியாரோ
.
ப
-ரை
.
புகுந்து
என்னை
பொருளா
ஆண்ட
பொன்னே
-
என்
பால்
வலிய
வந்து
புகுந்து
என்னைப்
பொருளாக
மதித்து
ஆட்கொண்ட
பொன்போன்றவனே
பொன்னம்பலக்கூத்தா-
பொன்னம்பலத்தில்
ஆனந்தத்
தாண்டவஞ்
செய்பவனே
அருளாது
ஒழிந்தால்
-
நீ
எனக்கு
வீடு
பேற்றினைத்
தராதுவிடின்
அடியேனை
இங்கு
அஞ்சேல்
என்பார்
ஆர்-
அடியேனை
இவ்வுலகில்
அஞ்சற்க
என்று
அபயந்தர
வல்லார்
வேறு
யாவருளர்
உனைப்
பிரிந்து
மருள்
ஆர்
மனத்தோடு
வருந்து
வேனை
-உன்னைப்
பிரிந்ததனால்
உளதாகிய
மனமயக்கத்தோடு
துன்
பப்படுகின்ற
என்னை
வா
என்று
உன்
தெருளார்
கூட்டம்
காட்டாயேல்
இங்கே
வருக
என்று
அழைத்து
உன்னுடைய
தெளிந்த
அறிவினை
யுடைய
மெய்யடியார்
கூட்டத்தினைக்
காட்டாதொழிந்தால்
செத்தே
போனால்
சிரியாரோ
-
ஆற்றாமை
மிகுதியால்
யான்
இறந்துபோனால்
உலகினர்
நின்னை
எள்ளி
நகையாடாரோ
.
913
எனைப்
பொருளா
மதித்துப்
புகுந்து
ஆண்ட
பொன்னே
பொன்
னம்பலக்
கூத்தனே
நீ
எனக்கு
வீடுபேற்றினைத்
தந்தருளாதொழிந்
தால்
அடியேனை
இவ்வுலகில்
அஞ்சற்கவென்று
அபயந்தரவல்லார்
வேறு
யாவருளர்
.
உன்னைப்
பிரிந்ததனால்
மயக்கம்
பொருந்திய
மனத்தோடு
துன்பப்படுகின்ற
என்னை
இங்கே
வருகவென்று
உன்
தெளிந்த
அறிவினையுடைய
மெய்யடியார்
கூட்டத்தினைக்
தொழியின்
ஆற்றாமை
மிகுதியால்
யான்
இறந்துபட்டுப்போனால்
உலகினர்
நின்னை
எள்ளிநகையாடாரோ
?
ஆதலால்
அருளவேண்
டும்
என்பதாம்
.
காட்டா
அருளல்
-
வீடுபேற்றினைத்
தருதல்
.
இங்கு
-
இவ்வுலகில்
பொருளா
என்னை
புகுந்து
ஆண்ட
-
ஒரு
பொருளென
மதித்து
இவ்வுலகிற்
புகுந்து
ஆட்கொண்ட
என்றவாறு
.
'
பொய்யவ
னேனைப்
பொருளென
ஆண்டு
'
'
அறிவிலாத
வெனைப்
புகுந்து
ஆண்டுகொண்டு
'
பொருளாவெனைப்
புகுந்தாண்டு
'
'
என
அடிகள்
அருளியமை
காண்க
.
நீத்
.7
சத
.
32
கோவை
.73
88