திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயின் மூத்த திருப்பதிகம் ப-ரை. சிரிப்பார் - நின் மெய்யன்பர்கள் நினது ஆனந்தத்தினை அனுபவித்துப் புறத்தே சிரிப்பார்; களிப்பார் - அகத்தே மகிழ்வர்; தேனிப்பார் - தேன் போன்ற இனிய திருவருளை நுகர்வர்; திரண்டு திரண்டு உன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார் - கூடிக் கூடி உன் திருப்புகழ் வரலாறுகளை விரித்துரைப்பார்கள்; அதனை விரும்பிக் கேட்பார்கள்; மெச்சுவார்கள்; வெவ்வேறு இருந்து உன் திருநாமம் தரிப்பார் - தனித்தனியிருந்து உன் திருநாமமாகிய திரு வைந்தெழுத்தை மானசமாக உச்சரிப்பர்; பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் - பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவஞ் செய்யும் தலைவனே என்று அழைப்பர்; அவர் முன்னே - அத்தகைய மேம்பாடுடைய அவர்களுக்கு எதிரில், நரி பாய் நாயேன் இருப் பேனோ - நரியைப் பாய்ந்து பிடிக்கும் நாயாக இருப்பேனோ, நம்பி - நம்பியே, இனித்தான் நல்காயே - இனியேனும் நின் வீடு பேற்றினைத் தந்தருள்வாயாக. 915 நின் மெய்யன்பர்கள் சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்; திரண்டு திரண்டு உன் திருவார்த்தைகளை விரித்துரைப்பார்கள் அதனை விரும் பிக் கேட்பார்கள். மெச்சுவார்கள். வெவ்வேறிருந்து உன் திருநாமத் தைத் தரிப்பார்கள். பொன்னம்பலத்தாடும் தலைவா என்பார்கள்; அவர்களுக்கு எதிரில் நரியைப் பாய்ந்து பிடிக்கும் நாயாக நான் இருப் பேனோ? நம்பி இனியாயினும் வீடு பேற்றினைத் தந்தருள்வாயாக என் பதாம். சிரிப்பார் என்பது முதலாக என்பார் என்பது ஈறாகவுள்ள வினை முற்றுக்களுக்கு நின்மெய்யன்பர்கள் என்னும் எழுவாய் வருவிக்கப்பட் டது. இறைவன் திருவருளின்பத்தினை அனுபவித்தலால் உளதாகும் மகிழ்ச்சி புறத்தே சிரிப்பாகவும் அகத்தே களிப்பாகவும் நிகழ்தலின் சிரிப்பார் களிப்பார் என்றார். தேனிப்பார் - தேன் போன்ற இனிய திருவருளை நுகர்வார்கள். திரண்டு திரண்டு திருவார்த்தை விரிப்பார் என்றார். திருவார்த்தை பேசுவார் அன்பர் பலராகலின் பலராவர். "யாம் பேசத் திருவார்த்தையிற் பெருநீளம் பெருங்கண்களே'' (கோவை. 109) என்புழி, யான் பேசத் திருவார்த்தை யென்னாது யாமென்ற தென்னையெனின், திருவார்த்தை பேசும் அன்பர் பலராக லான் யாமென்று பலராகக் கூறினார் என்று வி - உரை அறியற்பாலது. திருவார்த்தை என்றது இறைவன் புகழ்களைக் கூறும் வரலாறுகளை உணர்த்தியது. விரித்தல் - அவ்வரலாறுகளை விரித்துப் பேசுதல். கேட் பார் மெச்சுவார் என்றது அதனைக் கேட்பார்கள் வியந்து கொண்டாடு வார்கள் என்றவாறு. திருநாமம் தரிப்பார் என்றது இறைவன் திரு நாமமாகிய ஐந்தெழுத்து மந்திரத்தினை மானசமாகச் செபிப்பார் என் றவாறு. தரித்தல் என்ற வினையினால் வாசகமும் உயாஞ்சும் அல்லாத மானசம் கொள்ளப்பட்டது.
கோயின் மூத்த திருப்பதிகம் - ரை . சிரிப்பார் - நின் மெய்யன்பர்கள் நினது ஆனந்தத்தினை அனுபவித்துப் புறத்தே சிரிப்பார் ; களிப்பார் - அகத்தே மகிழ்வர் ; தேனிப்பார் - தேன் போன்ற இனிய திருவருளை நுகர்வர் ; திரண்டு திரண்டு உன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார் - கூடிக் கூடி உன் திருப்புகழ் வரலாறுகளை விரித்துரைப்பார்கள் ; அதனை விரும்பிக் கேட்பார்கள் ; மெச்சுவார்கள் ; வெவ்வேறு இருந்து உன் திருநாமம் தரிப்பார் - தனித்தனியிருந்து உன் திருநாமமாகிய திரு வைந்தெழுத்தை மானசமாக உச்சரிப்பர் ; பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் - பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவஞ் செய்யும் தலைவனே என்று அழைப்பர் ; அவர் முன்னே - அத்தகைய மேம்பாடுடைய அவர்களுக்கு எதிரில் நரி பாய் நாயேன் இருப் பேனோ - நரியைப் பாய்ந்து பிடிக்கும் நாயாக இருப்பேனோ நம்பி - நம்பியே இனித்தான் நல்காயே - இனியேனும் நின் வீடு பேற்றினைத் தந்தருள்வாயாக . 915 நின் மெய்யன்பர்கள் சிரிப்பார் ; களிப்பார் ; தேனிப்பார் ; திரண்டு திரண்டு உன் திருவார்த்தைகளை விரித்துரைப்பார்கள் அதனை விரும் பிக் கேட்பார்கள் . மெச்சுவார்கள் . வெவ்வேறிருந்து உன் திருநாமத் தைத் தரிப்பார்கள் . பொன்னம்பலத்தாடும் தலைவா என்பார்கள் ; அவர்களுக்கு எதிரில் நரியைப் பாய்ந்து பிடிக்கும் நாயாக நான் இருப் பேனோ ? நம்பி இனியாயினும் வீடு பேற்றினைத் தந்தருள்வாயாக என் பதாம் . சிரிப்பார் என்பது முதலாக என்பார் என்பது ஈறாகவுள்ள வினை முற்றுக்களுக்கு நின்மெய்யன்பர்கள் என்னும் எழுவாய் வருவிக்கப்பட் டது . இறைவன் திருவருளின்பத்தினை அனுபவித்தலால் உளதாகும் மகிழ்ச்சி புறத்தே சிரிப்பாகவும் அகத்தே களிப்பாகவும் நிகழ்தலின் சிரிப்பார் களிப்பார் என்றார் . தேனிப்பார் - தேன் போன்ற இனிய திருவருளை நுகர்வார்கள் . திரண்டு திரண்டு திருவார்த்தை விரிப்பார் என்றார் . திருவார்த்தை பேசுவார் அன்பர் பலராகலின் பலராவர் . யாம் பேசத் திருவார்த்தையிற் பெருநீளம் பெருங்கண்களே ' ' ( கோவை . 109 ) என்புழி யான் பேசத் திருவார்த்தை யென்னாது யாமென்ற தென்னையெனின் திருவார்த்தை பேசும் அன்பர் பலராக லான் யாமென்று பலராகக் கூறினார் என்று வி - உரை அறியற்பாலது . திருவார்த்தை என்றது இறைவன் புகழ்களைக் கூறும் வரலாறுகளை உணர்த்தியது . விரித்தல் - அவ்வரலாறுகளை விரித்துப் பேசுதல் . கேட் பார் மெச்சுவார் என்றது அதனைக் கேட்பார்கள் வியந்து கொண்டாடு வார்கள் என்றவாறு . திருநாமம் தரிப்பார் என்றது இறைவன் திரு நாமமாகிய ஐந்தெழுத்து மந்திரத்தினை மானசமாகச் செபிப்பார் என் றவாறு . தரித்தல் என்ற வினையினால் வாசகமும் உயாஞ்சும் அல்லாத மானசம் கொள்ளப்பட்டது .