திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

920 387 திருவாசக ஆராய்ச்சியுரை அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம் மாறு முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே சீருடைச் சிவபுரத் தரைசே. ப - ரை : முன்பும் ஆய் - சராசரப் பிரபஞ்சங்கள் தோன்றுவ தற்கு முன் உள்ளவனுமாய், பின்பு முழுதுமாய் பரந்த - அவைகள் தோன்றிய பின்னர் அவைகள் எல்லாவற்றிலும் வியாபித்த. முத் தனே - இயல்பாகவே பாசங்களினீங்கி உயிர்களின் பாசங்களை நீக்கு பவனே, முடிவு இலா முதலே - அழிவற்ற முதற் பொருளே, தென் பெருந் துறையாய் - தெற்கின் கணுள்ள திருப்பெருந்துறையையுடை யவனே, சிவபெருமானே - சிவபெருமானே, சீர் உடை சிவபுரத்து அரைசே - சிறப்பினையுடைய சிவலோகத்துக்கு நாதனே, அடியேன் அன்பினால் - அடியேன் நின்மேற் கொண்ட அன்பினால், ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக - எனது உயிரும் உடலும் இன்ப வடிவமாய் இளகி உருகும்படியாக, என்பாம் அல்லா இன் அருள் தந்தாய் - என் தகுதிக்கு மேற்பட்ட இனிய அருளினைத் தந்தருளினை. யான் இதற்கு ஓர் கைம்மாறு இலன் - யான் இதற்காக உனக்குத் தரத்தக்க பிரதியுபகாரத்தினையும் உடையேனல்லேன். மூன்புமாய் பின்பு முழுதுமாய் வியாபித்த முத்தனே. முடிவிலா முதலே, திருப்பெருந்துறையையுடையவனே, சிவபுரத்தரசே, உன் பெருங் கருணையால் அடியேன் அன்பினால் உயிரும் உடம்பும் ஆனந்த மாய்க் கசிந்து உருகும்படி என் தகுதிக்கு மேற்பட்ட இனிய அரு ளைத் தந்தருளினை, யான் இதற்காகத் தரத்தக்க கைம்மாறு உடை யேனல்லேன் என்பதாம். அன்பினால் கசிந்துருக என இயையும், ஆவி - உயிர். ஆக்கை- உடம்பு.பரம் - தகுதி. என் பரம் அல்லா- என் தகுதிக்குப் பொருத்த மில்லாத தகுதிக்கு மேற்பட்ட திருவருளைச் செய்தமையின் இவ்வாறு கூறினார். அல்லாத என்றது அல்லா என ஈறு கெட்டது. யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறு என்றது கைம்மாறு வேண் டாத குறைவிலா நிறைவினையுடைய நினக்கு யான் பிரதியுபகார மாகச் செய்யத்தக்கது ஒன்றினையும் உடையேனல்லேன் என்றவாறு. இக்கருத்தினை 'சைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு, என் ஆற்றுங் கொல்லோ உலகு" (211; என்னும் திருச்குறளினாங் காண்க.
920 387 திருவாசக ஆராய்ச்சியுரை அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம் மாறு முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே சீருடைச் சிவபுரத் தரைசே . - ரை : முன்பும் ஆய் - சராசரப் பிரபஞ்சங்கள் தோன்றுவ தற்கு முன் உள்ளவனுமாய் பின்பு முழுதுமாய் பரந்த - அவைகள் தோன்றிய பின்னர் அவைகள் எல்லாவற்றிலும் வியாபித்த . முத் தனே - இயல்பாகவே பாசங்களினீங்கி உயிர்களின் பாசங்களை நீக்கு பவனே முடிவு இலா முதலே - அழிவற்ற முதற் பொருளே தென் பெருந் துறையாய் - தெற்கின் கணுள்ள திருப்பெருந்துறையையுடை யவனே சிவபெருமானே - சிவபெருமானே சீர் உடை சிவபுரத்து அரைசே - சிறப்பினையுடைய சிவலோகத்துக்கு நாதனே அடியேன் அன்பினால் - அடியேன் நின்மேற் கொண்ட அன்பினால் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக - எனது உயிரும் உடலும் இன்ப வடிவமாய் இளகி உருகும்படியாக என்பாம் அல்லா இன் அருள் தந்தாய் - என் தகுதிக்கு மேற்பட்ட இனிய அருளினைத் தந்தருளினை . யான் இதற்கு ஓர் கைம்மாறு இலன் - யான் இதற்காக உனக்குத் தரத்தக்க பிரதியுபகாரத்தினையும் உடையேனல்லேன் . மூன்புமாய் பின்பு முழுதுமாய் வியாபித்த முத்தனே . முடிவிலா முதலே திருப்பெருந்துறையையுடையவனே சிவபுரத்தரசே உன் பெருங் கருணையால் அடியேன் அன்பினால் உயிரும் உடம்பும் ஆனந்த மாய்க் கசிந்து உருகும்படி என் தகுதிக்கு மேற்பட்ட இனிய அரு ளைத் தந்தருளினை யான் இதற்காகத் தரத்தக்க கைம்மாறு உடை யேனல்லேன் என்பதாம் . அன்பினால் கசிந்துருக என இயையும் ஆவி - உயிர் . ஆக்கை உடம்பு.பரம் - தகுதி . என் பரம் அல்லா- என் தகுதிக்குப் பொருத்த மில்லாத தகுதிக்கு மேற்பட்ட திருவருளைச் செய்தமையின் இவ்வாறு கூறினார் . அல்லாத என்றது அல்லா என ஈறு கெட்டது . யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறு என்றது கைம்மாறு வேண் டாத குறைவிலா நிறைவினையுடைய நினக்கு யான் பிரதியுபகார மாகச் செய்யத்தக்கது ஒன்றினையும் உடையேனல்லேன் என்றவாறு . இக்கருத்தினை ' சைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு ( 211 ; என்னும் திருச்குறளினாங் காண்க .