திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயிற் றிருப்பதிகம் ப -ரை: இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே - நின் திருவருளை வேண்டி வேண்டி அன்பினால் என்மனம் உருக என்மனத்துள்ளே தோன்றுகின்ற சோதிவடிவினனே, இமை யோர் சிரம் தனில் பொலியும் கமல சே அடியாய் - தேவர்களுடைய தலைகளின்மீது விளங்குகின்ற செந்தாமரை மலர்போன்ற சிவந்த திருவடியை உடையவனே, திருப்பெருந் துறை உறை சிவனே திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் - பரந்த ஆகாயமும் நீரும் நிலமும் தீயும் காற்றும் ஆகிய ஐம்பெரும் பூதங்களாகியும், அவை அல்லை யாய் - அப்பூதங்கள் அல்லாய் ஆகியும், ஆங்கே கரந்தது ஓர் உருவே. அவ்வைம் பூதங்களின் தோற்றமாகிய - உலகினிடத்தே மறைந்த ஒப் பற்ற வியாபக் உருவை உடையவனே, உன்னை இன்று கண் உற கண்டு கொண்டு களித்தனன் - திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட நினது திருவருட் குருவடிவினை இப்போது தில்லைச்சிற்றம்பலத்தின் கண்ணே கண்ணாரக்கண்டு கொண்டு களிப்படைந்தேன். 927 நின் திருவருளை வேண்டி வேண்டி உருக என்மனத்துள்ளே எழு கின்ற சோதியே, இமையோர் தலைகளின்மீது பொலியும் சேவடியை உடையவனே, ஆகாயம் நீர் நிலம் தீ காற்று என்னும் ஐம்பூதங்க ளாகியும் அவை அல்லாய் ஆகியும் அப்பூதங்களின் தோற்றமாகிய உலகினிடத்தே மறைந்த ஒப்பற்ற உருவத்தையுடையவனே, உன்னை இப்போது தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே கண்ணாரக் கண்டு களித்தேன் என்பதாம் இரத்தல் - யாசித்தல். இரந்திரந்து என்னும் அடுக்கு பலகாலும் என்னும் பொருட்டு. உருகவென்னும் செயவெனெச்சம் மனத்தி னுள்ளே சோதி தோன்றுதற்கு ஏதுவாகலின் ஏதுப்பொருட்டு. உருக எழுகின்ற சோதி என இயையும். உயர்ந்தோராகலின் தேவரைக் கூறினார். இமையோர் சிரந்தனில் பொலியும் என்றது அவ்விமை யோரும் தம் சிரத்தில் திருவடி பொருந்த வணங்குவர் என்பது. சேவடி என்றமையால் கமலம் செந்தாமரை எனப்பட்டது. நிரத்தல்- நிறைதல். ஆகாயம் மற்றைப் பூதங்களிலெல்லாம் கலந்து நிறைந் திருத்தலின் 'நிரந்த ஆகாயம்" என்றார். இனி மற்றைய பூதங்கள் எல்லாம் தன்பால் கலந்து விரிதற்கு ஏதுவாகிய ஆகாயம் எனினுமாம். இதற்கு ''வானிற் கலப்பு வைத்தோன்' என்பது ஆதாரமாகும். செய்யுளாதலின் ஐம்பெரும் பூதங்களைத் தோற்றமுறை பற்றியாவது ஒடுக்கமுறை பற்றியாவது கூறது முறை பிறழக் கூறினார். ஐம்பெரும் பூதங்களாகியும் அவை அல்லாமலும் இருத்தல் இறைவனது வியா பகத்துள் அவை அடங்குதலினாலாகும் வியாபகப் பொருளான இறை
கோயிற் றிருப்பதிகம் -ரை : இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே - நின் திருவருளை வேண்டி வேண்டி அன்பினால் என்மனம் உருக என்மனத்துள்ளே தோன்றுகின்ற சோதிவடிவினனே இமை யோர் சிரம் தனில் பொலியும் கமல சே அடியாய் - தேவர்களுடைய தலைகளின்மீது விளங்குகின்ற செந்தாமரை மலர்போன்ற சிவந்த திருவடியை உடையவனே திருப்பெருந் துறை உறை சிவனே திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் - பரந்த ஆகாயமும் நீரும் நிலமும் தீயும் காற்றும் ஆகிய ஐம்பெரும் பூதங்களாகியும் அவை அல்லை யாய் - அப்பூதங்கள் அல்லாய் ஆகியும் ஆங்கே கரந்தது ஓர் உருவே . அவ்வைம் பூதங்களின் தோற்றமாகிய - உலகினிடத்தே மறைந்த ஒப் பற்ற வியாபக் உருவை உடையவனே உன்னை இன்று கண் உற கண்டு கொண்டு களித்தனன் - திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட நினது திருவருட் குருவடிவினை இப்போது தில்லைச்சிற்றம்பலத்தின் கண்ணே கண்ணாரக்கண்டு கொண்டு களிப்படைந்தேன் . 927 நின் திருவருளை வேண்டி வேண்டி உருக என்மனத்துள்ளே எழு கின்ற சோதியே இமையோர் தலைகளின்மீது பொலியும் சேவடியை உடையவனே ஆகாயம் நீர் நிலம் தீ காற்று என்னும் ஐம்பூதங்க ளாகியும் அவை அல்லாய் ஆகியும் அப்பூதங்களின் தோற்றமாகிய உலகினிடத்தே மறைந்த ஒப்பற்ற உருவத்தையுடையவனே உன்னை இப்போது தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே கண்ணாரக் கண்டு களித்தேன் என்பதாம் இரத்தல் - யாசித்தல் . இரந்திரந்து என்னும் அடுக்கு பலகாலும் என்னும் பொருட்டு . உருகவென்னும் செயவெனெச்சம் மனத்தி னுள்ளே சோதி தோன்றுதற்கு ஏதுவாகலின் ஏதுப்பொருட்டு . உருக எழுகின்ற சோதி என இயையும் . உயர்ந்தோராகலின் தேவரைக் கூறினார் . இமையோர் சிரந்தனில் பொலியும் என்றது அவ்விமை யோரும் தம் சிரத்தில் திருவடி பொருந்த வணங்குவர் என்பது . சேவடி என்றமையால் கமலம் செந்தாமரை எனப்பட்டது . நிரத்தல் நிறைதல் . ஆகாயம் மற்றைப் பூதங்களிலெல்லாம் கலந்து நிறைந் திருத்தலின் ' நிரந்த ஆகாயம் என்றார் . இனி மற்றைய பூதங்கள் எல்லாம் தன்பால் கலந்து விரிதற்கு ஏதுவாகிய ஆகாயம் எனினுமாம் . இதற்கு ' ' வானிற் கலப்பு வைத்தோன் ' என்பது ஆதாரமாகும் . செய்யுளாதலின் ஐம்பெரும் பூதங்களைத் தோற்றமுறை பற்றியாவது ஒடுக்கமுறை பற்றியாவது கூறது முறை பிறழக் கூறினார் . ஐம்பெரும் பூதங்களாகியும் அவை அல்லாமலும் இருத்தல் இறைவனது வியா பகத்துள் அவை அடங்குதலினாலாகும் வியாபகப் பொருளான இறை