திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 497 ாமருக மாட்கொண்டான்" என்றார். அத்தன் - தந்தை. 'என் அத்தன்' என்றார், தமக்குரிய சிறப் புரிமை தோன்ற; என்னத்தன் என்னையு (பொன்னூசல் 7) எனப் பிறாண்டும் வருதல் காண்க. என் என் பதனை ஆனந்தன் அமுதன் என்பவற்றோடும் தனித்தனி கூட்டுக. ஆனந்தன் என்றார், இறைவன் இன்பவடிவினனாதலின் அத்தர் ஆனந்தரால்' ( அன்னைப். 3) -"அன்பனமுதளித்தூறும் ஆனந்தன்' (குயிற்.6) எனவருவன காண்க. இறைவன் தன் அன்பர்க்கு இறப்பினை நீக்கும் அமுதம் போன்ற வனாதலின் அமுதன் என்றார். அப்பனே எனக்கமுதனே' (சத.98) ''அடியார்க் கமுதன் (வார்த்.10) என அடிகள் அருளியவாறுங் காண்க. அள்ளூறி - வாயூறி. கேட்பார் செவிக்கு இனிமையுண்டாகப் பேசுதலின் ' தித்திக்கப் பேசுவாய்' என்பதாம். முன் வந்தெதிரெழுந்து அத்தன் ஆனந்தன் அமுதனென்று அள்ளூறித் தித்திக்கப் பேசும் நீ இன்று யாங்கள் உன் வீட்டுப்புற வாயில் வந்து துயிலெழுப்ப எழாமலும் வாயிற் கதவைத் திறவாம லும் இருக்கின்றனை என்பார், தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்" என்றார். கடை - வாயில் நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி" (கலி. 79 - 21) என்புழி நெடுங்கடை. பெரியவாயில் என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க. கடை தடம் அருநெறி தூம்பு சிதமனைவாயிலாகும் என (பிங்கலந்தையில் 4 - 234 ) வருதலுங் காண்க. கடையும் திறவாய் என்றது உம்மை தொக்கது. அது எழாமையேயன்றி என இறந்தது தழீஇய எச்சவும்மை. “ 66 €6 பத்துடையீர் என்பது முதலாகப் பொல்லாதோ என்பது ஈறாக வுள்ள பகுதி துயிலெழுந்தவள் கூற்றாகும். பத்து - பத்தி: அன்பு. "பத்துடையார்க் கெளியவன் ' (திவ்-திருவாய் (1) - 3-1) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, பத்துடையீர் என்பதற்கு அடியார் புற இலக்கணம் பத்துடையீர் எனினுமாம். "பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் (தே. நாவு.228-2) "பத்துக் கொலாமடியார் செய்கை தானே " (நாவு. 18 - 10) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க. பழவடியீர் - இறைவனுக்குத் தொண்டு செய்யும் பரம்பரைக் குடியிற் பிறந்த அடியீர். இனி,நெடுங்காலமாகத் தொண்டு பூண் டொழுகும் அடியீர் எனினுமாம். பாங்கு - தோழமை, உரிமை எனினுமாம். எழுந்தவள் தன் போன்றாரையும் உளப்படுத்திப் புத்தடி யோம் எனப்பன்மை கூறினாள். புன்மை தீர்த்து - அறியாது உள தாகும் குற்றத்தை நீக்கி, ஆட்கொள்ளல் - அடியார் கூட்டத்தில் 62
திருவெம்பாவை 497 ாமருக மாட்கொண்டான் என்றார் . அத்தன் - தந்தை . ' என் அத்தன் ' என்றார் தமக்குரிய சிறப் புரிமை தோன்ற ; என்னத்தன் என்னையு ( பொன்னூசல் 7 ) எனப் பிறாண்டும் வருதல் காண்க . என் என் பதனை ஆனந்தன் அமுதன் என்பவற்றோடும் தனித்தனி கூட்டுக . ஆனந்தன் என்றார் இறைவன் இன்பவடிவினனாதலின் அத்தர் ஆனந்தரால் ' ( அன்னைப் . 3 ) - அன்பனமுதளித்தூறும் ஆனந்தன் ' ( குயிற் .6 ) எனவருவன காண்க . இறைவன் தன் அன்பர்க்கு இறப்பினை நீக்கும் அமுதம் போன்ற வனாதலின் அமுதன் என்றார் . அப்பனே எனக்கமுதனே ' ( சத .98 ) ' ' அடியார்க் கமுதன் ( வார்த் .10 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . அள்ளூறி - வாயூறி . கேட்பார் செவிக்கு இனிமையுண்டாகப் பேசுதலின் ' தித்திக்கப் பேசுவாய் ' என்பதாம் . முன் வந்தெதிரெழுந்து அத்தன் ஆனந்தன் அமுதனென்று அள்ளூறித் தித்திக்கப் பேசும் நீ இன்று யாங்கள் உன் வீட்டுப்புற வாயில் வந்து துயிலெழுப்ப எழாமலும் வாயிற் கதவைத் திறவாம லும் இருக்கின்றனை என்பார் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய் என்றார் . கடை - வாயில் நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ( கலி . 79 - 21 ) என்புழி நெடுங்கடை . பெரியவாயில் என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க . கடை தடம் அருநெறி தூம்பு சிதமனைவாயிலாகும் என ( பிங்கலந்தையில் 4 - 234 ) வருதலுங் காண்க . கடையும் திறவாய் என்றது உம்மை தொக்கது . அது எழாமையேயன்றி என இறந்தது தழீஇய எச்சவும்மை . 66 6 பத்துடையீர் என்பது முதலாகப் பொல்லாதோ என்பது ஈறாக வுள்ள பகுதி துயிலெழுந்தவள் கூற்றாகும் . பத்து - பத்தி : அன்பு . பத்துடையார்க் கெளியவன் ' ( திவ் - திருவாய் ( 1 ) - 3-1 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க பத்துடையீர் என்பதற்கு அடியார் புற இலக்கணம் பத்துடையீர் எனினுமாம் . பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் ( தே . நாவு.228-2 ) பத்துக் கொலாமடியார் செய்கை தானே ( நாவு . 18 - 10 ) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க . பழவடியீர் - இறைவனுக்குத் தொண்டு செய்யும் பரம்பரைக் குடியிற் பிறந்த அடியீர் . இனி நெடுங்காலமாகத் தொண்டு பூண் டொழுகும் அடியீர் எனினுமாம் . பாங்கு - தோழமை உரிமை எனினுமாம் . எழுந்தவள் தன் போன்றாரையும் உளப்படுத்திப் புத்தடி யோம் எனப்பன்மை கூறினாள் . புன்மை தீர்த்து - அறியாது உள தாகும் குற்றத்தை நீக்கி ஆட்கொள்ளல் - அடியார் கூட்டத்தில் 62