திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

932 திருவாசக ஆராய்ச்சியுரை பின்னர் என்னைக் கைவிட்டுப் போவதற்குரிய ஒரு முறைமை யாது? அதனை எனக்கு அருளிச் செய்க என்பதாம். இறைவன் கொள்ளும் உருவத் திருமேனி இயற்கை மேனியுடை மையின் 'சோதியாய்த் தோன்றும் உருவமே' என்றார். 'சொல்லுதற் கரிய' என்னும் அடைமொழி ஆதியே நடுவே அந்தமே என்பதனாற் குறிக்கப்படும் இறைவனோடு இயையும். ஆதியே நடுவே அந்தமே என் பதற்கு உலகப் பொருள்களுக்குத் தோற்றத்தினைச் செய்பவனே நிலைபேற்றினைச் செய்பவனே, இறுதியைச் செய்பவனே என்பது கருத் தாகக் கொள்க. 'உலகுயிர்களின் தோற்றமும் நிலைபேறும் ஒடுக்கமும் நின் கண்ண என்றவாறாம்' என்ற பரிபாடலுரையும் (பரி 4-33-5 வி. உரை) ஈண்டறியற்பாலது. பந்தம் - உயிர்களைப் பந்திப்பது; பாசம். உயிர்களுக்குக் குற்றமற்ற நன்மையைச் செய்யும் திருவருளுடைய இறைவன் எங்கும் வியாபகனாய்ப் பெயர்ச்சியின்றியிருத்தலின் 'குன்றே' என்றார். இதன் கண், திருவடியை எனக்குத் தந்த நீ என்னைக் கைவிட்டுப் போவதற்குரிய முறை யாது உள்ளது? அதனைச் சொல்லுதி என்றத னால் அடியைப்பற்றிய என்னை விட்டுப் பிரிய முடியாது என்பது கருத் தாகும். இதனாலே அனுபவ இலக்கணம் பெறப்படும். 9 3:5 தந்ததுன் றன்னைக் கொண்ட தென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்டவெம் பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே பீசா உடலிடங் கொண்டாய் யானிதற் கிலனொக்கைம் மாறே. DD எழுந்தருளியி சிவனே - திருப் ப - ரை சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் - எனது உள்ளத்தையே நினது திருக்கோயிலாகக் கொண்டு ருக்கும் எம்பெருமானே, திருப்பெருந்துறை உறை பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.எந்தையே - எனது அப்பனே, ஈசா - என்னை உடையவனே, சங்கரா - சுகத்தைச் செய்பவனே, தந்தது உன் தன்னை - எனக்கு நீ தந்தது கிடைத்தற் கரிய பொருளாகிய நின்னையாகும் கொண்டது என் தன்னை - அதற்கு விலையாக ஏற்றுக்கொண்டது அற்பபொருளாகிய என்னையாகும். ஆர் கொலோ சதுரர் - எம்மிருவரில் யாவர் திறமைப்பாடுடையர். அந் தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் - நின்னைத் தந்தமையால் முடிவொன்றும் இல்லாத பேரின்பத்தை யான் பெற்றுக்கொண்
932 திருவாசக ஆராய்ச்சியுரை பின்னர் என்னைக் கைவிட்டுப் போவதற்குரிய ஒரு முறைமை யாது ? அதனை எனக்கு அருளிச் செய்க என்பதாம் . இறைவன் கொள்ளும் உருவத் திருமேனி இயற்கை மேனியுடை மையின் ' சோதியாய்த் தோன்றும் உருவமே ' என்றார் . ' சொல்லுதற் கரிய ' என்னும் அடைமொழி ஆதியே நடுவே அந்தமே என்பதனாற் குறிக்கப்படும் இறைவனோடு இயையும் . ஆதியே நடுவே அந்தமே என் பதற்கு உலகப் பொருள்களுக்குத் தோற்றத்தினைச் செய்பவனே நிலைபேற்றினைச் செய்பவனே இறுதியைச் செய்பவனே என்பது கருத் தாகக் கொள்க . ' உலகுயிர்களின் தோற்றமும் நிலைபேறும் ஒடுக்கமும் நின் கண்ண என்றவாறாம் ' என்ற பரிபாடலுரையும் ( பரி 4-33-5 வி . உரை ) ஈண்டறியற்பாலது . பந்தம் - உயிர்களைப் பந்திப்பது ; பாசம் . உயிர்களுக்குக் குற்றமற்ற நன்மையைச் செய்யும் திருவருளுடைய இறைவன் எங்கும் வியாபகனாய்ப் பெயர்ச்சியின்றியிருத்தலின் ' குன்றே ' என்றார் . இதன் கண் திருவடியை எனக்குத் தந்த நீ என்னைக் கைவிட்டுப் போவதற்குரிய முறை யாது உள்ளது ? அதனைச் சொல்லுதி என்றத னால் அடியைப்பற்றிய என்னை விட்டுப் பிரிய முடியாது என்பது கருத் தாகும் . இதனாலே அனுபவ இலக்கணம் பெறப்படும் . 9 3 : 5 தந்ததுன் றன்னைக் கொண்ட தென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்டவெம் பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே பீசா உடலிடங் கொண்டாய் யானிதற் கிலனொக்கைம் மாறே . DD எழுந்தருளியி சிவனே - திருப் - ரை சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் - எனது உள்ளத்தையே நினது திருக்கோயிலாகக் கொண்டு ருக்கும் எம்பெருமானே திருப்பெருந்துறை உறை பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.எந்தையே - எனது அப்பனே ஈசா - என்னை உடையவனே சங்கரா - சுகத்தைச் செய்பவனே தந்தது உன் தன்னை - எனக்கு நீ தந்தது கிடைத்தற் கரிய பொருளாகிய நின்னையாகும் கொண்டது என் தன்னை - அதற்கு விலையாக ஏற்றுக்கொண்டது அற்பபொருளாகிய என்னையாகும் . ஆர் கொலோ சதுரர் - எம்மிருவரில் யாவர் திறமைப்பாடுடையர் . அந் தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் - நின்னைத் தந்தமையால் முடிவொன்றும் இல்லாத பேரின்பத்தை யான் பெற்றுக்கொண்