திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

கோயிற் றிருப்பதிகம் டேன். நீ என்பால் பெற்றது ஒன்று யாது - நீ என்னை ஏற்றுக்கொண்ட தனால் என்னிடத்தில் பெற்றுக்கொண்ட பயன் ஒன்று யாது உளது? ஒன்றுமில்லையே. உடல் இடம் கொண்டாய் - என்னுடைய உடலின் உள்ளத்தை இடமாகக் கொண்டவனே, இதற்கு யான் ஓர் கைம்மாறு இலன் - நீ செய்த இந்த அருட்செயலுக்கு யான் உனக்கு அளித்தற் சூரிய பிரதியுபகாரம் ஒன்றனையும் உடையேனல்லேன். 933 என் உள்ளத்தையே இடமாகக் கொண்ட பெருமானே, திருப் பெருந்துறையுறை சிவனே, என் தந்தையே, ஈசனே, சங்கரனே, நீ நின்னைத் தந்து என்னைக் கொண்டனை. எம்மிருவரில் யார் சது ரர்? நின்பால் நான் முடிவொன்றும் இல்லாத பேரின்பத்தைப் பெற்றேன். நீ என்னிடத்தில் பெற்றுக்கொண்ட பயன் யாது? ஒன்று மில்லையே. என் உடலிடங் கொண்டவனே, நீ செய்த இவ்வருட் செய லுக்கு யான் செய்யுங் கைம்மாறு ஒன்றனையும் உடையேனல்லேன் என்பதாம். உலகமும் உயிருமாகிய எல்லாப் பொருள்களையுமுடையவனாய் அவற்றினெல்லாம் வியாபகனாய் இருக்கின்ற இறைவன் தன்னைக் கொடுத்து என்னை ஏற்றுக்கொண்டான் என்பது, இயல்பாக அமைந்த உண்மை நிலையினைத் திருவருளால் அநுபவ வாயிலாக அடிகள் அறியுமாறு செய்ததனைக் குறிப்பதாகும். யார் கொலோ சதுரர் என்றது இந்தத் தருதல் கொள்ளுதலாகிய வியாபாரத்தில் லாபம் அடைந்த திறமைப்பாடுடையார் யாவர் என்றவாறு.நின்னை எனக்குத் தந்தமையால் யான் முடிவடையாத பேரின்பத்தைப் பெற் றேன். நீ என்னை ஏற்றுக்கொண்டமையால் என்ன பயனைப் பெற் றனை? பயன் பெற்றிருப்பையாயின் முன்னர் அஃதின்மையின் குறை யினையுடையை யாகுவை. ஆதலால் நீ பெற்றது யாதுமில்லை என்ற படி. கடவுளிலும் தாம் சதுரராகக் குறிப்பால் உணருமாறு அடிகள் அருளியது இறைவனது பேரருட்டிறத்தை விளக்கி நிற்றலின் பழிப் பதுபோலப் புகழ்தலாகும். சிந்தையே கோயில் கொண்ட எம்பெரு மான் என்றது இடைவீடாத் தியானத்தினால் இறைவன் உள்ளத் தில் எழுந்தருளியிருத்தலைக் குறிப்பதாகும். 'கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி' (நாவு: 208 10). உடலிடங் கொண்டாய் என் பது சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் என்பதை அநுவ தித்துக் கூறியதாகும். அநுவதித்தல் - வழிமொழிதல். இத் திருப்பாடல் முழுவதும் அனுபவ இலக்கணம் விளக்குவ! தாகும். 10
கோயிற் றிருப்பதிகம் டேன் . நீ என்பால் பெற்றது ஒன்று யாது - நீ என்னை ஏற்றுக்கொண்ட தனால் என்னிடத்தில் பெற்றுக்கொண்ட பயன் ஒன்று யாது உளது ? ஒன்றுமில்லையே . உடல் இடம் கொண்டாய் - என்னுடைய உடலின் உள்ளத்தை இடமாகக் கொண்டவனே இதற்கு யான் ஓர் கைம்மாறு இலன் - நீ செய்த இந்த அருட்செயலுக்கு யான் உனக்கு அளித்தற் சூரிய பிரதியுபகாரம் ஒன்றனையும் உடையேனல்லேன் . 933 என் உள்ளத்தையே இடமாகக் கொண்ட பெருமானே திருப் பெருந்துறையுறை சிவனே என் தந்தையே ஈசனே சங்கரனே நீ நின்னைத் தந்து என்னைக் கொண்டனை . எம்மிருவரில் யார் சது ரர் ? நின்பால் நான் முடிவொன்றும் இல்லாத பேரின்பத்தைப் பெற்றேன் . நீ என்னிடத்தில் பெற்றுக்கொண்ட பயன் யாது ? ஒன்று மில்லையே . என் உடலிடங் கொண்டவனே நீ செய்த இவ்வருட் செய லுக்கு யான் செய்யுங் கைம்மாறு ஒன்றனையும் உடையேனல்லேன் என்பதாம் . உலகமும் உயிருமாகிய எல்லாப் பொருள்களையுமுடையவனாய் அவற்றினெல்லாம் வியாபகனாய் இருக்கின்ற இறைவன் தன்னைக் கொடுத்து என்னை ஏற்றுக்கொண்டான் என்பது இயல்பாக அமைந்த உண்மை நிலையினைத் திருவருளால் அநுபவ வாயிலாக அடிகள் அறியுமாறு செய்ததனைக் குறிப்பதாகும் . யார் கொலோ சதுரர் என்றது இந்தத் தருதல் கொள்ளுதலாகிய வியாபாரத்தில் லாபம் அடைந்த திறமைப்பாடுடையார் யாவர் என்றவாறு.நின்னை எனக்குத் தந்தமையால் யான் முடிவடையாத பேரின்பத்தைப் பெற் றேன் . நீ என்னை ஏற்றுக்கொண்டமையால் என்ன பயனைப் பெற் றனை ? பயன் பெற்றிருப்பையாயின் முன்னர் அஃதின்மையின் குறை யினையுடையை யாகுவை . ஆதலால் நீ பெற்றது யாதுமில்லை என்ற படி . கடவுளிலும் தாம் சதுரராகக் குறிப்பால் உணருமாறு அடிகள் அருளியது இறைவனது பேரருட்டிறத்தை விளக்கி நிற்றலின் பழிப் பதுபோலப் புகழ்தலாகும் . சிந்தையே கோயில் கொண்ட எம்பெரு மான் என்றது இடைவீடாத் தியானத்தினால் இறைவன் உள்ளத் தில் எழுந்தருளியிருத்தலைக் குறிப்பதாகும் . ' கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி ' ( நாவு : 208 10 ) . உடலிடங் கொண்டாய் என் பது சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் என்பதை அநுவ தித்துக் கூறியதாகும் . அநுவதித்தல் - வழிமொழிதல் . இத் திருப்பாடல் முழுவதும் அனுபவ இலக்கணம் விளக்குவ ! தாகும் . 10