திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

செத்திலாப்பத்து 935 விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன் -விழித்திருந்தும் என் மனக் கருத்தை இழந்துவிட்டேன், செய்வகை அறியேன் - இனி அவ் வுள்ளக் கருத்தினை அடைதற்குச் செய்யவேண்டிய முறைமையை இன் னதென்று அறிகின்றிலேன். ஐயனே, அரசே, அருட்பெருங் கடலே, அத்தனே, அயன்மாற்கு அறியமுடியாத சிவந்த திருமேனியையுடையவனே, திருப்பெருந் துறையில் எழுந்தருளிய சிவபெருமானே, பொய்யனேனது மனம் நெகிழும்படி புகுந்து ஞானமாகிய அமுது சுரத்தற்கேதுவாகிய உன் இணையடியைப் பிரிந்தும் பிரிவாற்றாமையால் சிறுமையுடைய யான் இன்னும் செத்திலேன், விழித்திருந்தும் மனக் கருத்தினை இழந்தேன். இனிச் செய்யும் வகை இன்னதென அறிகின்றிலேன் என்பதாம். பொய்யனேன் - நிலையில்லாமையாற் பொய்யாய் உடம்பினை யுடையேன். அகம் - மனம். இறைவன் அகநெகப் புகுந்தமை. "அகநெகவே புகுந்தருளி ஆட்கொண்டது" ஏசறவு 7 'கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி" தோணோ.4 ‘‘எனதகம் புகுந்தாண்டதோர் அற்புதம்" அற்புதம் 5 என வருவனவற்றாலுமறிக. அமுதூறு அடி - அமுதம் ஊறுதற்கேது வாகிய திருவடி. "அளிபவருள்ளத் தமுதே போற்றி" (போற்றி 142) என வருதல் காண்க. புதுமலர் அடி என இயையும். "கமல்பா தனே" (சத. 93) 'தாமரைத் தாள் " (சத. 45) 'அப்பன் தாளதா மரைகள் ஏந்தி " (அச்ச. 6) எனப் பிறாண்டும் வருவன காண்க. கை- சிறுமை.இதனை "ஓப்பனை படையுறுப் பொழுக்கஞ் சிறுமை, கரமும் பின் பிறந் தாளுங் கையே" என்னும் பிங்கலந்தை (10-399) யாலும் அறிக. செத்திலேன் என்றது இறைவன் திருவடியைப் பிரிந்த ஆற் றாமையால் இறந்திருக்க வேண்டிய யான் இறவாதிருக்கின்றேன் என்ற வாறு. விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன் என்றது உறக்க நிலையை யடையாது (சாக்கிராவத்தை நிலையில்) விழிப்பு நிலையில் இருந்தும் எனது உள்ளக் கருத்தாகிய திருவடிப்பேற்றினை இழந்துவிட் டேன் என்றவாறு. விழித்திருந்தும் என்ற உம்மை தொக்கது. செய் வகை அறியேன் - இனி அத் திருவடிப் பேற்றினை அடைதற்குச் செய் யும் முறைமையையும் அறிகின்றிலேன். யாது செய்வேன் என்பது சொல் எச்சம். இதன்கண் பொய்யனேன் அகதெகப் புகுந்தமு தூறும் புதும லர்க் கழலிணையடி" என்பதனால் சிவானந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 1
செத்திலாப்பத்து 935 விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன் -விழித்திருந்தும் என் மனக் கருத்தை இழந்துவிட்டேன் செய்வகை அறியேன் - இனி அவ் வுள்ளக் கருத்தினை அடைதற்குச் செய்யவேண்டிய முறைமையை இன் னதென்று அறிகின்றிலேன் . ஐயனே அரசே அருட்பெருங் கடலே அத்தனே அயன்மாற்கு அறியமுடியாத சிவந்த திருமேனியையுடையவனே திருப்பெருந் துறையில் எழுந்தருளிய சிவபெருமானே பொய்யனேனது மனம் நெகிழும்படி புகுந்து ஞானமாகிய அமுது சுரத்தற்கேதுவாகிய உன் இணையடியைப் பிரிந்தும் பிரிவாற்றாமையால் சிறுமையுடைய யான் இன்னும் செத்திலேன் விழித்திருந்தும் மனக் கருத்தினை இழந்தேன் . இனிச் செய்யும் வகை இன்னதென அறிகின்றிலேன் என்பதாம் . பொய்யனேன் - நிலையில்லாமையாற் பொய்யாய் உடம்பினை யுடையேன் . அகம் - மனம் . இறைவன் அகநெகப் புகுந்தமை . அகநெகவே புகுந்தருளி ஆட்கொண்டது ஏசறவு 7 ' கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி தோணோ .4 எனதகம் புகுந்தாண்டதோர் அற்புதம் அற்புதம் 5 என வருவனவற்றாலுமறிக . அமுதூறு அடி - அமுதம் ஊறுதற்கேது வாகிய திருவடி . அளிபவருள்ளத் தமுதே போற்றி ( போற்றி 142 ) என வருதல் காண்க . புதுமலர் அடி என இயையும் . கமல்பா தனே ( சத . 93 ) ' தாமரைத் தாள் ( சத . 45 ) ' அப்பன் தாளதா மரைகள் ஏந்தி ( அச்ச . 6 ) எனப் பிறாண்டும் வருவன காண்க . கை சிறுமை.இதனை ஓப்பனை படையுறுப் பொழுக்கஞ் சிறுமை கரமும் பின் பிறந் தாளுங் கையே என்னும் பிங்கலந்தை ( 10-399 ) யாலும் அறிக . செத்திலேன் என்றது இறைவன் திருவடியைப் பிரிந்த ஆற் றாமையால் இறந்திருக்க வேண்டிய யான் இறவாதிருக்கின்றேன் என்ற வாறு . விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன் என்றது உறக்க நிலையை யடையாது ( சாக்கிராவத்தை நிலையில் ) விழிப்பு நிலையில் இருந்தும் எனது உள்ளக் கருத்தாகிய திருவடிப்பேற்றினை இழந்துவிட் டேன் என்றவாறு . விழித்திருந்தும் என்ற உம்மை தொக்கது . செய் வகை அறியேன் - இனி அத் திருவடிப் பேற்றினை அடைதற்குச் செய் யும் முறைமையையும் அறிகின்றிலேன் . யாது செய்வேன் என்பது சொல் எச்சம் . இதன்கண் பொய்யனேன் அகதெகப் புகுந்தமு தூறும் புதும லர்க் கழலிணையடி என்பதனால் சிவானந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 1