திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

செத்திலாப்பத்து வன் கடல் விடத்தையுண்டு தனது நித்திய தன்மையை எவருமறியச் செய்தனன் என்றவாறு. புரமெரித்த சிலை - மேருவில். 939 இதன்கண் "புலையனேனையும்... தலையினால் நடந்தேன்" என்பத னால் சிவானந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிகப் பொருள் புலப் படுதல் காண்க. 3 899 அன்ப ராகிமற் றருந்தவ முயல்வார் அயனு மாலுமற் றழலுறு மெழுகாம் என்ப ராய்நினை வாரெ னைப்பலர் நிற்க இங்கெனை யெற்றினுக் காண்டாய் வன்ப ராய்முரு டொக்குமென் சிந்தை மரக்கண் என்செவி யிரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா திருப்பெருந்துறை மேளிய சிவனே. ப- ரை. தென் பராய்த்துறையாய் - அழகிய திருப்பராய்த் துறை என்னும் தலத்தை யுடையவனே, சிவலோகா - சிவலோக நாதனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் எ ழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, அயனும் மாலும் அன்பர் ஆகி மற்று அரு தவம் முயல்வார் - பிரமனும் திருமாலும் உனக்கன்பு டையவர்களாகி மேலும் நின்னருளைப் பெறும் பொருட்டுச் செயற்கரிய தவங்களை முயன்று செய்வார்கள், மற்று எனை பலர் - வேறு எத் தனையோ பலர், அழல் உறு மெழுகாம் என்பராய் நினைவர் - நெருப் பினைச் சேர்ந்த மெழுகு போன்று உருகுகின்ற என்பினையுடையராய் நின்னைத் தியானிப்பார்கள்; நிற்க - அவரெல்லாம் உளராகவும். இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய் - இவ்வுலகின் கண் அன்பு முதலிய ஒன்றுமில்லாத என்னை யாது காரணமாக ஆட்கொண்டருளினை, என் சிந்தை வன்பராய் முருடு ஒக்கும் - எனது மனம் வலிய பராய் மரத் தின் கட்டை ஒக்கும், மரக்கண் - என் கண் மரக்கணுவை ஒக்கும்; என் செவி இரும்பினும் வலிது - என் செவி இரும்பினும் வலியது. திருப்பராய்த்துறையையுடையவனே, சிவலோகநாதனே, திருப் பெருந்துறை மேவிய சிவனே, அயனும் மாலும் உனக்கன்புடையவர்க ளாகி அரிய தவத்தினை முயன்று செய்வார்கள். வேறு எத்தனையோ பலர் அழலுறு மெழுகு போன்று உருகுகின்ற என்பினையுடையராய் நினைவார்கள்; அவரெல்லாம் உளராகவும் அன்பு முதலிய ஒன்று மிலாத என்னை யாது காரணமாக ஆட்கொண்டருளினை. என் சிந்தை வலிய பராய் மரத்தின் கட்டை ஒக்கும்; என் கண் மரக்கணுவை ஒக் கும்; என் செவி இருப்பினும் வலியது என்பதாம்.
செத்திலாப்பத்து வன் கடல் விடத்தையுண்டு தனது நித்திய தன்மையை எவருமறியச் செய்தனன் என்றவாறு . புரமெரித்த சிலை - மேருவில் . 939 இதன்கண் புலையனேனையும் ... தலையினால் நடந்தேன் என்பத னால் சிவானந்தம் அளவறுக்கொணாமை என்னும் பதிகப் பொருள் புலப் படுதல் காண்க . 3 899 அன்ப ராகிமற் றருந்தவ முயல்வார் அயனு மாலுமற் றழலுறு மெழுகாம் என்ப ராய்நினை வாரெ னைப்பலர் நிற்க இங்கெனை யெற்றினுக் காண்டாய் வன்ப ராய்முரு டொக்குமென் சிந்தை மரக்கண் என்செவி யிரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா திருப்பெருந்துறை மேளிய சிவனே . ப- ரை . தென் பராய்த்துறையாய் - அழகிய திருப்பராய்த் துறை என்னும் தலத்தை யுடையவனே சிவலோகா - சிவலோக நாதனே திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் ழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே அயனும் மாலும் அன்பர் ஆகி மற்று அரு தவம் முயல்வார் - பிரமனும் திருமாலும் உனக்கன்பு டையவர்களாகி மேலும் நின்னருளைப் பெறும் பொருட்டுச் செயற்கரிய தவங்களை முயன்று செய்வார்கள் மற்று எனை பலர் - வேறு எத் தனையோ பலர் அழல் உறு மெழுகாம் என்பராய் நினைவர் - நெருப் பினைச் சேர்ந்த மெழுகு போன்று உருகுகின்ற என்பினையுடையராய் நின்னைத் தியானிப்பார்கள் ; நிற்க - அவரெல்லாம் உளராகவும் . இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய் - இவ்வுலகின் கண் அன்பு முதலிய ஒன்றுமில்லாத என்னை யாது காரணமாக ஆட்கொண்டருளினை என் சிந்தை வன்பராய் முருடு ஒக்கும் - எனது மனம் வலிய பராய் மரத் தின் கட்டை ஒக்கும் மரக்கண் - என் கண் மரக்கணுவை ஒக்கும் ; என் செவி இரும்பினும் வலிது - என் செவி இரும்பினும் வலியது . திருப்பராய்த்துறையையுடையவனே சிவலோகநாதனே திருப் பெருந்துறை மேவிய சிவனே அயனும் மாலும் உனக்கன்புடையவர்க ளாகி அரிய தவத்தினை முயன்று செய்வார்கள் . வேறு எத்தனையோ பலர் அழலுறு மெழுகு போன்று உருகுகின்ற என்பினையுடையராய் நினைவார்கள் ; அவரெல்லாம் உளராகவும் அன்பு முதலிய ஒன்று மிலாத என்னை யாது காரணமாக ஆட்கொண்டருளினை . என் சிந்தை வலிய பராய் மரத்தின் கட்டை ஒக்கும் ; என் கண் மரக்கணுவை ஒக் கும் ; என் செவி இருப்பினும் வலியது என்பதாம் .