திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

944 402 திருவாசக ஆராய்ச்சியுரை மாய னேமறி கடல்விட முண்ட வான வாமணி கண்டத்தெம் அமுதே நாயி னேனுனை நினையவு மாட்டேன் நமச்சி வாயவென் றுன்னடி பணியாப் பேய னாகிலும் பெருநெறி காட்டாய் பிறைகு லாஞ்சடைப் பிஞ்ளுக னேயோ சேய னாகிநின் றலறுவ தழகோ திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. மேவிய சிவனே. ப-ரை: மாயனே - என்னை ஆட்கொண்டபின் சூழ்ச்சியாக மறைந்தவனே, மறிகடல் விடம் உண்ட வானவா - திரைகள் மடங்கு கின்ற கடலில் எழுந்த நஞ்சை உண்ட தேவனே, மணி கண்டத்து எம் அமுதே - அதனால் நீலமணிபோலும் திருமிடற்றையுடைய எங் கள் அமுதம் போன்றவனே, திருப்பெருந்துறை திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, பிறை குலாம் சடை பிஞ்ஞகனேயோ - பிறைச் சந்திரன் விளங்குகின்ற சடை யாலாகிய தலைக்கோலத்தையுடையவனே. நாயினேன் உனை நினைய வும் மாட்டேன் - இழிவுடைய யான் நின்னை இடையறாது நினையவு மாட்டாதவனாயிருக்கின்றேன், நமச்சிவாய என்று உன் அடி பணியா பேயன் ஆகிலும்-நமச்சிவாய என்று ஒதிக்கொண்டு நின் திருவடியை வணங்காத பேய்த்தன்மையையுடைய அறிவிலியாகிலும், பெருநெறி காட்டாய் - முத்திநெறியைக் காட்டியருள்வாயாக. சேயன் ஆகி நின்று அலறுவது அழகோ - நின்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் நினக்குத் தூரத்தேனாகி நின்று கதறுவது நின் புகழ்க்கழகாமோ. மாயனே, விடமுண்ட வானவா. மணிகண்டத்து எம் அமுதே. திருப்பெருந்துறை மேவிய சிவனே, நாயினேன் உனை இடையறாது நினைக்கவும் மாட்டேன். நமச்சிவாய என்று ஓதிக்கொண்டு உன் திரு வடியை வணங்காத பேயனாகிலும் பெருநெறிகாட்டியருள்வாயாக. நின்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் சேயனாப் நின்று அலறுவது நின் புகழ்க்கு அழகாமோ என்பதாம். மாயன் - சூழ்ச்சியையுடையவன். விடமுண்ட வானவா என்றது விடமுண்டும் இறவாத அமரனே என்றவாறு. அலை நீர் விடமுண்ட நித்தனே (செ.3). மணி கண்டம் - உண்ட விடம் தங்குதலால் நீலமணி போன்ற கழுத்து. மணி கண்டன் - நீலமணி போலுங் கண்டன் (கோவை 81 உரை) “படுகடல் வாய்ப்படு நஞ்சமுதா மைந்நாண் மணி கண்டன்" (கோவை 81) 'அருந்தும் விடமணியா மணி கண் டன்" (கோவை 272) "மாசற்ற சோதி மணி மிடற் றண்ணலை" (திருமந்திரம் 1506) மணி கண்டம் - அழகிய கண்டம் எனினுமாம். முன்னோன் மணி கண்டம் ஒத்து" என்புழி (கோவை 210 பேர்) என வருவன காண்க.
944 402 திருவாசக ஆராய்ச்சியுரை மாய னேமறி கடல்விட முண்ட வான வாமணி கண்டத்தெம் அமுதே நாயி னேனுனை நினையவு மாட்டேன் நமச்சி வாயவென் றுன்னடி பணியாப் பேய னாகிலும் பெருநெறி காட்டாய் பிறைகு லாஞ்சடைப் பிஞ்ளுக னேயோ சேய னாகிநின் றலறுவ தழகோ திருப்பெ ருந்துறை மேவிய சிவனே . மேவிய சிவனே . - ரை : மாயனே - என்னை ஆட்கொண்டபின் சூழ்ச்சியாக மறைந்தவனே மறிகடல் விடம் உண்ட வானவா - திரைகள் மடங்கு கின்ற கடலில் எழுந்த நஞ்சை உண்ட தேவனே மணி கண்டத்து எம் அமுதே - அதனால் நீலமணிபோலும் திருமிடற்றையுடைய எங் கள் அமுதம் போன்றவனே திருப்பெருந்துறை திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே பிறை குலாம் சடை பிஞ்ஞகனேயோ - பிறைச் சந்திரன் விளங்குகின்ற சடை யாலாகிய தலைக்கோலத்தையுடையவனே . நாயினேன் உனை நினைய வும் மாட்டேன் - இழிவுடைய யான் நின்னை இடையறாது நினையவு மாட்டாதவனாயிருக்கின்றேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா பேயன் ஆகிலும் - நமச்சிவாய என்று ஒதிக்கொண்டு நின் திருவடியை வணங்காத பேய்த்தன்மையையுடைய அறிவிலியாகிலும் பெருநெறி காட்டாய் - முத்திநெறியைக் காட்டியருள்வாயாக . சேயன் ஆகி நின்று அலறுவது அழகோ - நின்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் நினக்குத் தூரத்தேனாகி நின்று கதறுவது நின் புகழ்க்கழகாமோ . மாயனே விடமுண்ட வானவா . மணிகண்டத்து எம் அமுதே . திருப்பெருந்துறை மேவிய சிவனே நாயினேன் உனை இடையறாது நினைக்கவும் மாட்டேன் . நமச்சிவாய என்று ஓதிக்கொண்டு உன் திரு வடியை வணங்காத பேயனாகிலும் பெருநெறிகாட்டியருள்வாயாக . நின்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் சேயனாப் நின்று அலறுவது நின் புகழ்க்கு அழகாமோ என்பதாம் . மாயன் - சூழ்ச்சியையுடையவன் . விடமுண்ட வானவா என்றது விடமுண்டும் இறவாத அமரனே என்றவாறு . அலை நீர் விடமுண்ட நித்தனே ( செ .3 ) . மணி கண்டம் - உண்ட விடம் தங்குதலால் நீலமணி போன்ற கழுத்து . மணி கண்டன் - நீலமணி போலுங் கண்டன் ( கோவை 81 உரை ) படுகடல் வாய்ப்படு நஞ்சமுதா மைந்நாண் மணி கண்டன் ( கோவை 81 ) ' அருந்தும் விடமணியா மணி கண் டன் ( கோவை 272 ) மாசற்ற சோதி மணி மிடற் றண்ணலை ( திருமந்திரம் 1506 ) மணி கண்டம் - அழகிய கண்டம் எனினுமாம் . முன்னோன் மணி கண்டம் ஒத்து என்புழி ( கோவை 210 பேர் ) என வருவன காண்க .