திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அடைக்கலப்பத்து உடையாய், தாமரைமலர் போன்ற திருவடிகளைச் சேர்ந்தமைந்த மெய்யடியார்கள் உடனே கதியடையுமாறு சென்றனர். யான் பாவி யேன், புன்குரம்பையையும் அழுக்கு மனத்தையுமுடைய அடியேன் உன் அடைக்கலமே என்பதாம். 953 செழுங்கமலம் என்பது செழுக்கமலம் என எதுகை நோக்கி வலித் தது. திருவடிக்குச் செந்தாமரைமலர் நிறத்தினாலும் மென்மையினாலு மன்றி இதழ்களின் செறிவாகிய திரண்ட வடிவினாலும் உவமையாகும். பழுத்த மனம் - அன்பு கனிந்த மனம். அடியார் என்றது இறைவன் குருவடிவாய் இங்கு எழுந்தருளியபோது உடன் போந்த அணுக்கன் தொண்டர்களை. பழுத்த மனத்தடியருடன் தாமும் போகும் பேறு பெறாமையின் "யான் பாவியேன்" என்றார். நுடைதல் - நெளிதல். குடம்பை என்றது உடம்பினை. பொல்லா அழுக்கு மனத்தடியேன் எனக் கூட்டுக. பொல்லாத என்பது கடைக் குறைந்து நின்றது. பொல்லா -தீமையையுடைய. கல்வி ஞானம் - வீடு பேற்றுக் கல்வி யின் அறிவு; தத்துவஞானம் என்றவாறு. அழுக்கு -வாசனாமலம். அடைக்கலம் - பக்குவகாலம் நீண்ணயமாகும் வரையும் உன் பாது காவலை வேண்டுகின்றேன். இதன் கண் 'உடையாய் உன் அடைக்கலமே" என்பதனால் பக் குவ நிண்ணயம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 1 407 வெறுப்பன வே செய்யு மென்சிறு ஏமயைநின் பெருமை யினால் பொறுப்பவ லேயராட் பூண்பவ னேபொகு கங்கை௯டச் செறுப்பவ னேறின் றிருவரு ளாலென் பிறவியைவேர் அறுப்பவ னேயுடை பாய்அடி பேனுன் அடைக்கலமே. ப - ரை. வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமை யினால் பொறுப்பவனே - வெறுக்கத்தக்க தீச்செயல்களைச் செய்கின்ற எனது இழிந்த இயல்பிலை நினது பெருந்தன்மையினாலே பொறுத்தருள் வோனே, அரா பூண்பவனே - அரவங்களை ஆபரணங்களாக அணிந்த வனே, பொங்கு கங்கை சடை செறுப்பவனே - பொங்கி வந்த கங்கை வெள்ளத்தைச் சடையினசண் அடக்கினவனே, நின திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவளே - நினது திருவருளாகிய வாளினாலே என் பிறவியாகிய மாமத்தின் வேரினை அறுப்பவனே, உடையாய் - என்னை ஆளாக உடைவளே, அடியேன் உன் அடைக்கலம் - அடி யேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத்தருள்க.
அடைக்கலப்பத்து உடையாய் தாமரைமலர் போன்ற திருவடிகளைச் சேர்ந்தமைந்த மெய்யடியார்கள் உடனே கதியடையுமாறு சென்றனர் . யான் பாவி யேன் புன்குரம்பையையும் அழுக்கு மனத்தையுமுடைய அடியேன் உன் அடைக்கலமே என்பதாம் . 953 செழுங்கமலம் என்பது செழுக்கமலம் என எதுகை நோக்கி வலித் தது . திருவடிக்குச் செந்தாமரைமலர் நிறத்தினாலும் மென்மையினாலு மன்றி இதழ்களின் செறிவாகிய திரண்ட வடிவினாலும் உவமையாகும் . பழுத்த மனம் - அன்பு கனிந்த மனம் . அடியார் என்றது இறைவன் குருவடிவாய் இங்கு எழுந்தருளியபோது உடன் போந்த அணுக்கன் தொண்டர்களை . பழுத்த மனத்தடியருடன் தாமும் போகும் பேறு பெறாமையின் யான் பாவியேன் என்றார் . நுடைதல் - நெளிதல் . குடம்பை என்றது உடம்பினை . பொல்லா அழுக்கு மனத்தடியேன் எனக் கூட்டுக . பொல்லாத என்பது கடைக் குறைந்து நின்றது . பொல்லா -தீமையையுடைய . கல்வி ஞானம் - வீடு பேற்றுக் கல்வி யின் அறிவு ; தத்துவஞானம் என்றவாறு . அழுக்கு -வாசனாமலம் . அடைக்கலம் - பக்குவகாலம் நீண்ணயமாகும் வரையும் உன் பாது காவலை வேண்டுகின்றேன் . இதன் கண் ' உடையாய் உன் அடைக்கலமே என்பதனால் பக் குவ நிண்ணயம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 1 407 வெறுப்பன வே செய்யு மென்சிறு ஏமயைநின் பெருமை யினால் பொறுப்பவ லேயராட் பூண்பவ னேபொகு கங்கை டச் செறுப்பவ னேறின் றிருவரு ளாலென் பிறவியைவேர் அறுப்பவ னேயுடை பாய்அடி பேனுன் அடைக்கலமே . - ரை . வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமை யினால் பொறுப்பவனே - வெறுக்கத்தக்க தீச்செயல்களைச் செய்கின்ற எனது இழிந்த இயல்பிலை நினது பெருந்தன்மையினாலே பொறுத்தருள் வோனே அரா பூண்பவனே - அரவங்களை ஆபரணங்களாக அணிந்த வனே பொங்கு கங்கை சடை செறுப்பவனே - பொங்கி வந்த கங்கை வெள்ளத்தைச் சடையினசண் அடக்கினவனே நின திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவளே - நினது திருவருளாகிய வாளினாலே என் பிறவியாகிய மாமத்தின் வேரினை அறுப்பவனே உடையாய் - என்னை ஆளாக உடைவளே அடியேன் உன் அடைக்கலம் - அடி யேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத்தருள்க .