திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

408 அடைக்கலப்பத்து பெரும்பெரு மானென் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என் மனத்தினுள்ளே வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி யாமனின்ற அரும்பெரு மானுடை யாய் அடி பேனுன் அடைக்கலமே. 955 ப - ரை. பெரும் பெருமான் - எல்லாத் தேவர்களிலும் பெரியவ னான பெருமானே, என் பிறவியை வேர் அறுத்து பெரும் பிச்சு தரும் பெருமான் - என் பிறவியாகிய மரத்தை வேரொடும் தொலைத்து நின்னை இடைவிடாது தியானிக்கும் மிக்க பைத்தியத் தைத் தந்த தலைவனே, சதுரப்பெருமான் - அளவற்ற திறமையை யுடைய பெருமானே, என் மனத்தினுள்ளே வரும் பெருமான் - என் மனத்தினுள்ளே அறிவின் கண் தோன்றும் பெருமானே, மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற அரும்பெருமான் - பிரமனும் திருமாலும் முடியும் அடியும் அறியா வண்ணம் நின்ற அருமையையுடைய பெரு மானே. உடையாய் - என்னை ஆளாகவுடையவனே, அடியேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத் தருள்க. பெரும்பெருமானே, என் பிறவியை வேர் அறுத்து நின்னைத் தியானிக்கும் பெரும் பிச்சுத் தரும் பெருமானே, சதுரப் பெருமானே, என் மனத்தினுள்ளே வரும் பெருமானே, பிரமனும் திருமாலும் முடி யும் அடியும் அறியா வண்ணம் நின்ற அருமையையுடைய பெருமானே, என்னை ஆளாக உடையவனே, அடியேன் உன் அடைக்கலமாதலால் என்னைப் பாதுகாத்தருள்க என்பதாம். பெரும் பிச்சு - இறைவனை இடைவிடாது தியானித்துக் கொண் டிருக்கும் நிலைமை. சதுர் - சாதுரியம்; திறமை. மனத்துள்ளே வரு தல் - மனத்தினுள்ளே சிவஞானத்தால் தோன்றுதல். "வந்தென் மனத்திடை மன்னிய ம னே ' (கோயிற். 5) ''வள்ளல் வரவர வந் தொழிந்தான் என் மனத்தே என அடிகள் அருளியமை காண்க. மலரோன் - பிரமன், "மலர் மேலமன்" (சுந். 3-9), ''மலரோன் நெடுமாலறியாமனின்ற அரும் பெருமான்" என்பது, 'நெடியானும் பலரவனும் நேடியாங்கே நேருருவங் காணாமே சென்று நின்ற, படியானை" நாவு.235-11
408 அடைக்கலப்பத்து பெரும்பெரு மானென் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என் மனத்தினுள்ளே வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி யாமனின்ற அரும்பெரு மானுடை யாய் அடி பேனுன் அடைக்கலமே . 955 - ரை . பெரும் பெருமான் - எல்லாத் தேவர்களிலும் பெரியவ னான பெருமானே என் பிறவியை வேர் அறுத்து பெரும் பிச்சு தரும் பெருமான் - என் பிறவியாகிய மரத்தை வேரொடும் தொலைத்து நின்னை இடைவிடாது தியானிக்கும் மிக்க பைத்தியத் தைத் தந்த தலைவனே சதுரப்பெருமான் - அளவற்ற திறமையை யுடைய பெருமானே என் மனத்தினுள்ளே வரும் பெருமான் - என் மனத்தினுள்ளே அறிவின் கண் தோன்றும் பெருமானே மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற அரும்பெருமான் - பிரமனும் திருமாலும் முடியும் அடியும் அறியா வண்ணம் நின்ற அருமையையுடைய பெரு மானே . உடையாய் - என்னை ஆளாகவுடையவனே அடியேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலமாதலாற் பாதுகாத் தருள்க . பெரும்பெருமானே என் பிறவியை வேர் அறுத்து நின்னைத் தியானிக்கும் பெரும் பிச்சுத் தரும் பெருமானே சதுரப் பெருமானே என் மனத்தினுள்ளே வரும் பெருமானே பிரமனும் திருமாலும் முடி யும் அடியும் அறியா வண்ணம் நின்ற அருமையையுடைய பெருமானே என்னை ஆளாக உடையவனே அடியேன் உன் அடைக்கலமாதலால் என்னைப் பாதுகாத்தருள்க என்பதாம் . பெரும் பிச்சு - இறைவனை இடைவிடாது தியானித்துக் கொண் டிருக்கும் நிலைமை . சதுர் - சாதுரியம் ; திறமை . மனத்துள்ளே வரு தல் - மனத்தினுள்ளே சிவஞானத்தால் தோன்றுதல் . வந்தென் மனத்திடை மன்னிய னே ' ( கோயிற் . 5 ) ' ' வள்ளல் வரவர வந் தொழிந்தான் என் மனத்தே என அடிகள் அருளியமை காண்க . மலரோன் - பிரமன் மலர் மேலமன் ( சுந் . 3-9 ) ' ' மலரோன் நெடுமாலறியாமனின்ற அரும் பெருமான் என்பது ' நெடியானும் பலரவனும் நேடியாங்கே நேருருவங் காணாமே சென்று நின்ற படியானை நாவு.235-11