திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அடைக்கலப்பத்து துன்பத்தைப் புயல் என ஏகதேச உருவகஞ் செய்தமையால் அது பொழியும் வெள்ளத்தை அவலமாகவும், வானைக் கரையாகவும் கொள்க. வான் ஏறினர் என இறந்த காலத்தாற் கூறினமையின் இழி கின்ற என்பதற்கு வீழ்ந்து கீழ்மைப்பட்ட எனவுரைக்க. இனி இழி கின்ற எனவே கொண்டு ஏறினர் என இறந்த காலத்தாற் கூறியது. துணிவு பற்றியெனினுமமையும். கழற்புணை கொண்டு வான்கரை ஏறி னர் என்றது இடைவிடாத கடவுட்டியானத்தால் வீடுபேறு எய்தினர் என்பதாம். "வம்பலர் தும்பை அம்பல வாணநின் அருளெனும் நலத்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்த்துமாசெய்யே" WRITED "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்" 957 11-ந் திருமுறை கோயில் நான்மணி. 16 குறள் 10 என வருவனவற்றாலுமறிக. இடர்க்கடல் வாய் உண்டாரும் சுழி என் றது பொறிவழிச் சேறலை. யான் இடர்க்கடல்வாய்ச் சென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் என்க. i unamuon "தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையா லெற்றுண்டு பற்கிறான் றின்றிக் கவியைநேர் துவர்வாயா ரென்னுங் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் புனிமென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதலந்த மில்லா மல்லற் கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்கனேற்கே" என அடிகள் அருளியிருத்தல் ஈண்டு அறியற்பாலது. சத. 2 அழிகின்றனன் என்றது உன்னால் ஆட்கொள்ளப்பட்டும் நின்கழற் புணையைப் பற்றமாட்டாமையால் கெட்டு வருந்துவேனாயினேன் என் றவாறு பாதுகாத்தருள்க என்பது குறிப்பெச்சம். யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த்திரைபொரக் காமச்சுறவெறிய அழிகின்றனன் என அடிகள் கூறியது உலகியல் பற் றியாகும். உலகியலில் மக்களுயிர்கள் இறைவன் அருள்வழிச் செல் லாது ஐம்பொறிகளின் வழிச் சென்று துயருழக்கும் இயல்பினை ஈண் டுக்கூறியதன்றி இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தாம் அந்நிலையை அடைந்ததாகக் கூறியதன்றெனத் தெளிந்துணர்ந்து கொள்க.
அடைக்கலப்பத்து துன்பத்தைப் புயல் என ஏகதேச உருவகஞ் செய்தமையால் அது பொழியும் வெள்ளத்தை அவலமாகவும் வானைக் கரையாகவும் கொள்க . வான் ஏறினர் என இறந்த காலத்தாற் கூறினமையின் இழி கின்ற என்பதற்கு வீழ்ந்து கீழ்மைப்பட்ட எனவுரைக்க . இனி இழி கின்ற எனவே கொண்டு ஏறினர் என இறந்த காலத்தாற் கூறியது . துணிவு பற்றியெனினுமமையும் . கழற்புணை கொண்டு வான்கரை ஏறி னர் என்றது இடைவிடாத கடவுட்டியானத்தால் வீடுபேறு எய்தினர் என்பதாம் . வம்பலர் தும்பை அம்பல வாணநின் அருளெனும் நலத்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்த்துமாசெய்யே WRITED பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் 957 11 - ந் திருமுறை கோயில் நான்மணி . 16 குறள் 10 என வருவனவற்றாலுமறிக . இடர்க்கடல் வாய் உண்டாரும் சுழி என் றது பொறிவழிச் சேறலை . யான் இடர்க்கடல்வாய்ச் சென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் என்க . i unamuon தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையா லெற்றுண்டு பற்கிறான் றின்றிக் கவியைநேர் துவர்வாயா ரென்னுங் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் புனிமென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதலந்த மில்லா மல்லற் கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்கனேற்கே என அடிகள் அருளியிருத்தல் ஈண்டு அறியற்பாலது . சத . 2 அழிகின்றனன் என்றது உன்னால் ஆட்கொள்ளப்பட்டும் நின்கழற் புணையைப் பற்றமாட்டாமையால் கெட்டு வருந்துவேனாயினேன் என் றவாறு பாதுகாத்தருள்க என்பது குறிப்பெச்சம் . யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த்திரைபொரக் காமச்சுறவெறிய அழிகின்றனன் என அடிகள் கூறியது உலகியல் பற் றியாகும் . உலகியலில் மக்களுயிர்கள் இறைவன் அருள்வழிச் செல் லாது ஐம்பொறிகளின் வழிச் சென்று துயருழக்கும் இயல்பினை ஈண் டுக்கூறியதன்றி இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தாம் அந்நிலையை அடைந்ததாகக் கூறியதன்றெனத் தெளிந்துணர்ந்து கொள்க .