திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அடைக்கலப்பத்து "மாவடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே'' 963 தே:நாவு-51-8 "வடுத்தான் வகிர் மலர் கண்ணிக்குத் தக்கின்று" கோவை 226 என வருவன காண்க. ஏகாரம் இரண்டும் அசை. மலரடிக்கு, கும்பிக்கு என்னும் நான்கனுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தது. கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் என்பவற்றிற்றலால் அழைத்துக் கொள்வாயோ நரகத்திற்கே விடுவாயோ என வினா ஓகாரம் விரித் துரைக்கப்பட்டது. குறிப்பு - கருத்து (கோவை 80 உரை) குறிப்பறி யேன் - கருத்தறிகின்றிலேன் (கோவை 200 உரை) "கோவை வந் தாண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பறியேன்" (கோவை 200) என்பதனாலறிக. பாவிடையாடு குழல்போல் உள்ளம் கரந்து பரந்தது என்றது நெசவுபாவில் நூலினூடு மறைந்து இருபாலும் ஓடுகின்ற குழல் போல என்னுள்ளம் உலகவாஞ்சையில் மறைந்து பரந்து திரிவதாயிற்று என்றவாறு. ஆ-இரக்கக் குறிப்பு. இதன்கண், ''நின் குறிப்பறியேன் உள்ளம் கரந்து பரந்தது கெடு வேன் உடையாய் உன் அடைக்கலம்" என்பவற்றால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 414 பிறிவறியா அன்பர் நின்னருட் பெய்கழற் றாளினைக்கீழ் மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றாருன்னை வந்திப்பதோர் நெறியறி யேனின்னை யேயறி யேனின்னை யேயறியும் அறிவறி யேனுடை பாய் அடி யேனுன் அடைக்கலமே. 8 ப-ரை. நின் அருள் பிறிவு அறியா அன்பர் - நின் திருவருளின் பிரிவை அறியாத அணுக்கன் தொண்டர்கள். பெய்கழல் தாள் இணை கீழ் வந்து - வீரக்கழல் அணிந்த திருவடிகளின் கீழ் வந்து, மறிவு அறியா செல்வம் பெற்றார் - மீளத் திரும்புதல் அறியாத வீட்டின்பச் செல்வத்தைப் பெற்றனர், உன்னை வந்திப்பது ஓர் நெறி அறியேன்- உன்னை வழிபடுகின்ற சிறந்த வழியினை யான் அறிகின்றிலேன், நின் னையே அறியேன் - பரம்பொருளாகிய நின் இயல்பினை அறியும் ஆற்ற லுடையேனல்லேன்; நின்னையே அறியும் அறிவு அறியேன் - நின்னையே முழுதும் அறிதற்குரிய சிவஞானத்தையும் யான் அறியேன்; உடை யாய் - இத்தன்மையையுடைய அடியேனை ஆளாக உடையவனே,அடி யேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலம் பாதுகாத் தருள்க. உடையானே,நின் திருவருளின் பிரிவை அறியாத அன்பர்கள் நின் திருவடியின் கீழ் வந்து வீட்டின்பச் செல்வத்தைப் பெற்றனர். நின்னை வழிபடுகின்ற சிறந்த வழியினை யான் அறிகின்றிலேன்; நின்
அடைக்கலப்பத்து மாவடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே ' ' 963 தே : நாவு - 51-8 வடுத்தான் வகிர் மலர் கண்ணிக்குத் தக்கின்று கோவை 226 என வருவன காண்க . ஏகாரம் இரண்டும் அசை . மலரடிக்கு கும்பிக்கு என்னும் நான்கனுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தது . கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் என்பவற்றிற்றலால் அழைத்துக் கொள்வாயோ நரகத்திற்கே விடுவாயோ என வினா ஓகாரம் விரித் துரைக்கப்பட்டது . குறிப்பு - கருத்து ( கோவை 80 உரை ) குறிப்பறி யேன் - கருத்தறிகின்றிலேன் ( கோவை 200 உரை ) கோவை வந் தாண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பறியேன் ( கோவை 200 ) என்பதனாலறிக . பாவிடையாடு குழல்போல் உள்ளம் கரந்து பரந்தது என்றது நெசவுபாவில் நூலினூடு மறைந்து இருபாலும் ஓடுகின்ற குழல் போல என்னுள்ளம் உலகவாஞ்சையில் மறைந்து பரந்து திரிவதாயிற்று என்றவாறு . - இரக்கக் குறிப்பு . இதன்கண் ' ' நின் குறிப்பறியேன் உள்ளம் கரந்து பரந்தது கெடு வேன் உடையாய் உன் அடைக்கலம் என்பவற்றால் பக்குவ நிண்ணயம் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 414 பிறிவறியா அன்பர் நின்னருட் பெய்கழற் றாளினைக்கீழ் மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றாருன்னை வந்திப்பதோர் நெறியறி யேனின்னை யேயறி யேனின்னை யேயறியும் அறிவறி யேனுடை பாய் அடி யேனுன் அடைக்கலமே . 8 - ரை . நின் அருள் பிறிவு அறியா அன்பர் - நின் திருவருளின் பிரிவை அறியாத அணுக்கன் தொண்டர்கள் . பெய்கழல் தாள் இணை கீழ் வந்து - வீரக்கழல் அணிந்த திருவடிகளின் கீழ் வந்து மறிவு அறியா செல்வம் பெற்றார் - மீளத் திரும்புதல் அறியாத வீட்டின்பச் செல்வத்தைப் பெற்றனர் உன்னை வந்திப்பது ஓர் நெறி அறியேன் உன்னை வழிபடுகின்ற சிறந்த வழியினை யான் அறிகின்றிலேன் நின் னையே அறியேன் - பரம்பொருளாகிய நின் இயல்பினை அறியும் ஆற்ற லுடையேனல்லேன் ; நின்னையே அறியும் அறிவு அறியேன் - நின்னையே முழுதும் அறிதற்குரிய சிவஞானத்தையும் யான் அறியேன் ; உடை யாய் - இத்தன்மையையுடைய அடியேனை ஆளாக உடையவனே அடி யேன் உன் அடைக்கலம் - அடியேன் உன் அடைக்கலம் பாதுகாத் தருள்க . உடையானே நின் திருவருளின் பிரிவை அறியாத அன்பர்கள் நின் திருவடியின் கீழ் வந்து வீட்டின்பச் செல்வத்தைப் பெற்றனர் . நின்னை வழிபடுகின்ற சிறந்த வழியினை யான் அறிகின்றிலேன் ; நின்