திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

24. ஆசைப்பத்து ஆத்துமவிலக்கணம் திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது அடிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்குங் காலத்தில் இது அருளிச் செய்யப்பட்டது. திருவாசகச் சிறப்புடையார் 'கருவியு றும் ஊனுடற்கண் வாராமல் திருவருளிற் கலப்பதற்கே அரனடியைப் புகழ்ந்து பெருகு ஆர்வமொடு பாடுதலே ஆசைப்பத்தாம்" எனக் கூறியவாறு, இனிப் பிறவியை யடையாமையும் திருவருளைப் பெறுத லும் அணுக்கன் தொண்டரைக் கூடுதலும் ஆகிய தமது விருப்பத்தி னைக் கூறுகின்ற பத்துப் பாட்டுக்களையுடைய பகுதியாகும். இதன் உட்பொருள் ஆத்துமவிலக்கணம் என்பது தூய்மை அடைந்த தன் உயி ரின் இயல்பை அறிந்து அதன் ஆர்வத்தை அளிக்கும்படி இறைவன் பால் வேண்டுதல். ஆத்தும விலக்கணம் என்பதற்கு உயிரின் அடையா ளம் என நேரே பொருள் கொள்ளப்படும். இது அறுசீர்க்கழி நெடி லடி ஆசிரிய விருத்தம். அறுசீர்க் கழி நெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 416 கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென் றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. ப-ரை. கருட கொடியோன் காண மாட்டா - கருடக் கொடி யையுடைய திருமாலும் காணமுடியாத, கழல் சே அடி என்னும் பொருளை இங்கு தந்து - வீரக்கழல் அணிந்த செவ்விய திருவடிகள் என்று சொல்லப்படும் மெய்ப்பொருளை இவ்வுலகில் ஞானாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து தந்து, என்னை ஆண்ட பொல்லா மணி யேயோ - என்னை அடிமை கொண்ட சாணையிடப்படாத இயல்பான ஒளியையுடைய மாணிக்கமே, இருளை துரந்திட்டு - பிராரத்தகன்மத் தாலுளதாகும் எனது வாசனாமலத்தை நீக்கி, இங்கே வா என்று அங்கே கூவும் - இங்கே வா என்று என்னை நின் வீட்டுலகிற்கு அழைக்
24. ஆசைப்பத்து ஆத்துமவிலக்கணம் திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது அடிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்குங் காலத்தில் இது அருளிச் செய்யப்பட்டது . திருவாசகச் சிறப்புடையார் ' கருவியு றும் ஊனுடற்கண் வாராமல் திருவருளிற் கலப்பதற்கே அரனடியைப் புகழ்ந்து பெருகு ஆர்வமொடு பாடுதலே ஆசைப்பத்தாம் எனக் கூறியவாறு இனிப் பிறவியை யடையாமையும் திருவருளைப் பெறுத லும் அணுக்கன் தொண்டரைக் கூடுதலும் ஆகிய தமது விருப்பத்தி னைக் கூறுகின்ற பத்துப் பாட்டுக்களையுடைய பகுதியாகும் . இதன் உட்பொருள் ஆத்துமவிலக்கணம் என்பது தூய்மை அடைந்த தன் உயி ரின் இயல்பை அறிந்து அதன் ஆர்வத்தை அளிக்கும்படி இறைவன் பால் வேண்டுதல் . ஆத்தும விலக்கணம் என்பதற்கு உயிரின் அடையா ளம் என நேரே பொருள் கொள்ளப்படும் . இது அறுசீர்க்கழி நெடி லடி ஆசிரிய விருத்தம் . அறுசீர்க் கழி நெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 416 கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென் றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே . - ரை . கருட கொடியோன் காண மாட்டா - கருடக் கொடி யையுடைய திருமாலும் காணமுடியாத கழல் சே அடி என்னும் பொருளை இங்கு தந்து - வீரக்கழல் அணிந்த செவ்விய திருவடிகள் என்று சொல்லப்படும் மெய்ப்பொருளை இவ்வுலகில் ஞானாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து தந்து என்னை ஆண்ட பொல்லா மணி யேயோ - என்னை அடிமை கொண்ட சாணையிடப்படாத இயல்பான ஒளியையுடைய மாணிக்கமே இருளை துரந்திட்டு - பிராரத்தகன்மத் தாலுளதாகும் எனது வாசனாமலத்தை நீக்கி இங்கே வா என்று அங்கே கூவும் - இங்கே வா என்று என்னை நின் வீட்டுலகிற்கு அழைக்