திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆசைப்பத்து 969 சனை" (சீவக. 431) என்புழியும் இப்பொருட்டாயிற்று. இங்கு உடம் பைக் குறித்தது. இருக்ககில்லேன் என்றது இவ்வுடம்புடன் இருத்த லால் உளதாகும் துன்பத்தினை நீக்கும் ஆற்றல் இல்லாமை பற்றியா கும். எப்பாலவர் என்றது உருத்திரர், மகேசுவரர், சதாசிவர் முத லிய உயர்ந்த பதவியிலிருப்பவர்களை. இறைவனை என் அமுதே என்றது தம்மை ஆட்கொண்ட உரிமையற்றியாகும். காண ஆசைப்பட்டேன் என இறைவனைத் தரிசிக்க ஆசைப்பட்டதாகக் கூறினும் இதன் பதி கத்து "பழவடியார் கூட்ட, மடியேன் காண ஆசைப்பட்டேன்'' (9) எனவும், நானோர் துணை காணேன் (10) எனவும் அருளிச் செய்திருத் தலான் அணுக்கன் தொண்டர் கூட்டத்தினையும் காண ஆசைப்பட் டேன் எனப் பொருள் கொள்ளப்பட்டது. கண்டாய் முன்னிலையசை. இதன் கண், 'தோல் போர்த்த குப்பாயம் புக்கிருக்ககில்லேன், கூவிக்கொள்ளாய் கோவேயோ, காண ஆசைப்பட்டேன்" என்பவற் றால் ஆத்தும இலக்கணம் புலப்படுமாறு காண்க. 2 சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இதுசிதையக் கூாைய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளு குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ப - ரை. சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதைய - சீழ் வடியப்பெற்று அதனால் ஈ மொய்க்கப்பெற்று அழுக்கொடு திரிகின்ற சிறு வீடாகிய இவ்வுடம்பு கெட்டொழியும்படி, கூவாய் - அழைத்துக்கொள்வாயாக, கோவே - அரசனே, கூத்தா கூத்தப்பிரானே, காத்து ஆட்கொள்ளும் குருமணியே - அடியேனைப் பாதுகாத்து அடிமை கொள்ளும் பரமாசாரியனாகிய மாணிக்கமே. தேவா -வானவனே, தேவர்க்கு அரியானே - வானவர்க்கு அரிய மேலானவனே, சிவனே - சிவபெருமானே, சிறிது என் முகம் நோக்கி - சிறிது என்னுடைய முகத்தைப் பார்த்து, ஆ ஆ என்ன ஆசைப்பட் டேன் - ஆ ஆ என்று இரங்கி அருளுவதை விரும்புகின்றேன். கோவே, அடியேனைக் காத்து ஆட்கொள்ளும் குருமணியே, தேவா, தேவர்க்கரியானே, சிவனே, சிறு வீடாகிய இந்த உடம்பு கெட்டொழிய என்னை அழைத்தருள்க. சிறிது என்னுடைய முகத் தைப் பார்த்து ஆவா என்று இரங்கி அருளுவதை விரும்புகின்றேன். சீ - சீழ். சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் என்றது உடலின் இழிவரல் கூறியவாறாம். வார்தல் - வடிதல்.
ஆசைப்பத்து 969 சனை ( சீவக . 431 ) என்புழியும் இப்பொருட்டாயிற்று . இங்கு உடம் பைக் குறித்தது . இருக்ககில்லேன் என்றது இவ்வுடம்புடன் இருத்த லால் உளதாகும் துன்பத்தினை நீக்கும் ஆற்றல் இல்லாமை பற்றியா கும் . எப்பாலவர் என்றது உருத்திரர் மகேசுவரர் சதாசிவர் முத லிய உயர்ந்த பதவியிலிருப்பவர்களை . இறைவனை என் அமுதே என்றது தம்மை ஆட்கொண்ட உரிமையற்றியாகும் . காண ஆசைப்பட்டேன் என இறைவனைத் தரிசிக்க ஆசைப்பட்டதாகக் கூறினும் இதன் பதி கத்து பழவடியார் கூட்ட மடியேன் காண ஆசைப்பட்டேன் ' ' ( 9 ) எனவும் நானோர் துணை காணேன் ( 10 ) எனவும் அருளிச் செய்திருத் தலான் அணுக்கன் தொண்டர் கூட்டத்தினையும் காண ஆசைப்பட் டேன் எனப் பொருள் கொள்ளப்பட்டது . கண்டாய் முன்னிலையசை . இதன் கண் ' தோல் போர்த்த குப்பாயம் புக்கிருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ காண ஆசைப்பட்டேன் என்பவற் றால் ஆத்தும இலக்கணம் புலப்படுமாறு காண்க . 2 சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இதுசிதையக் கூாைய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளு குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே . - ரை . சீ வார்ந்து மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதைய - சீழ் வடியப்பெற்று அதனால் மொய்க்கப்பெற்று அழுக்கொடு திரிகின்ற சிறு வீடாகிய இவ்வுடம்பு கெட்டொழியும்படி கூவாய் - அழைத்துக்கொள்வாயாக கோவே - அரசனே கூத்தா கூத்தப்பிரானே காத்து ஆட்கொள்ளும் குருமணியே - அடியேனைப் பாதுகாத்து அடிமை கொள்ளும் பரமாசாரியனாகிய மாணிக்கமே . தேவா -வானவனே தேவர்க்கு அரியானே - வானவர்க்கு அரிய மேலானவனே சிவனே - சிவபெருமானே சிறிது என் முகம் நோக்கி - சிறிது என்னுடைய முகத்தைப் பார்த்து என்ன ஆசைப்பட் டேன் - என்று இரங்கி அருளுவதை விரும்புகின்றேன் . கோவே அடியேனைக் காத்து ஆட்கொள்ளும் குருமணியே தேவா தேவர்க்கரியானே சிவனே சிறு வீடாகிய இந்த உடம்பு கெட்டொழிய என்னை அழைத்தருள்க . சிறிது என்னுடைய முகத் தைப் பார்த்து ஆவா என்று இரங்கி அருளுவதை விரும்புகின்றேன் . சீ - சீழ் . சீ வார்ந்து மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் என்றது உடலின் இழிவரல் கூறியவாறாம் . வார்தல் - வடிதல் .