திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆசைப்பத்து எலும்பு மிடைந்து ஊத்தை மிக்கு என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. மிடைதல் - நெருங்குதல். ''பல் பூ மிடைந்த படலைக் கண்ணி" (பெரும்பாண். 174). மிடைந்து மிக்கு என்னும் சினை வினை யெச்சங்களை, நடைக்கூடம் என்பதற்கு நடைக்கூடமாகிய என வரு விக்கப்பட்ட ஆகிய என்னும் ஆக்க வினைக்குறிப்புடன் முடிக்க, ஊறல் என்னும் வினைப்பெயரும் வீறிலி என்னும் வினையாலணையும் பெயரும் ஊறுகின்ற வீறில்லாத என பெயரெச்சப் பொருள் தந்து நடைக் கூடம் என்னும் பெயரொடு முடிந்தன. வீறு - பெருமை. (சில.2-87 அரும்பதம்) சோத்தம் - இழிந்தார் செய்யும் வணக்கம். (கோவை 173 உரை). "சோத்த மெம் பெருமான் என்று தோத்தி ரங்கள் சொல்ல" (தே. நா. 50-2). உடைந்து நைந்து உருகி என்ப தற்கு எழுவாயும், ஏதுவுமாகிய அன்பும் வருவிக்கப்பட்டன. ஒளி என் றது இறைவனை உணர்தற் கேதுவாகிய அருள் ஞானத்தை உணர்த்தி யது. பாதம் அடைந்து என்பது பாதமாகிய வீடு பேற்றினைப் பெற்று என்றவாறு. நின்றிடுவான் - நிலைபெறும் பொருட்டு. வான் ஈற்று வினையெச்சம். அஞ்சலி 971 இதன் கண் 'உடைந்து நைந்து உருகி யுன்னொளி நோக்கி உன் திருமலர்ப்பாதமடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்" என்பத னால் அத்தும இலக்கணம் உணர்த்தப்பட்டது. 4 420 அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி அடியே னுடை யாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும் விடையாய் பொடியாடீ எளிவந் தென்னை யாண்டு கொண்ட என்ன ரமுதேயோ அளியே னென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ப- ரை. விடையாய் - இடப ஊர்தியையுடையவனே, பொடி ஆடீ - திருவெண்ணீற்றை அணிந்தவனே, எளிவந்து என்னை ஆண்டு கொண்ட என் ஆர் அமுதேயோ - எளிதாக வலியவந்து என்னை அடிமை கொண்ட என்னுடைய அரிய அமுதம் போன்றவனேயோ, அம்மானே - பெருமையையுடையவனே, அகத்தே அளிபுண் -உள்ளே யுள்ள நெகிழ்ந்த புண் போன்ற தன்மையை, புறம் தோல் மூடி - புறத்தே தோலால் மூடி அமைக்கப்பட்ட, அடியேனுடை யாக்கை- அடியேனுடைய உடம்பின் கண்ணே, புளியம்பழம் ஒத்து இருந்தேன்- ஓடும் பழமும் பற்றுதலில்லாத புளியம்பழத்தைப் போலப் பற்றற்று இருந்தேன், இருந்தும் - அங்ஙனம் இருந்தும், அளியேன் என்ன
ஆசைப்பத்து எலும்பு மிடைந்து ஊத்தை மிக்கு என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . மிடைதல் - நெருங்குதல் . ' ' பல் பூ மிடைந்த படலைக் கண்ணி ( பெரும்பாண் . 174 ) . மிடைந்து மிக்கு என்னும் சினை வினை யெச்சங்களை நடைக்கூடம் என்பதற்கு நடைக்கூடமாகிய என வரு விக்கப்பட்ட ஆகிய என்னும் ஆக்க வினைக்குறிப்புடன் முடிக்க ஊறல் என்னும் வினைப்பெயரும் வீறிலி என்னும் வினையாலணையும் பெயரும் ஊறுகின்ற வீறில்லாத என பெயரெச்சப் பொருள் தந்து நடைக் கூடம் என்னும் பெயரொடு முடிந்தன . வீறு - பெருமை . ( சில.2-87 அரும்பதம் ) சோத்தம் - இழிந்தார் செய்யும் வணக்கம் . ( கோவை 173 உரை ) . சோத்த மெம் பெருமான் என்று தோத்தி ரங்கள் சொல்ல ( தே . நா . 50-2 ) . உடைந்து நைந்து உருகி என்ப தற்கு எழுவாயும் ஏதுவுமாகிய அன்பும் வருவிக்கப்பட்டன . ஒளி என் றது இறைவனை உணர்தற் கேதுவாகிய அருள் ஞானத்தை உணர்த்தி யது . பாதம் அடைந்து என்பது பாதமாகிய வீடு பேற்றினைப் பெற்று என்றவாறு . நின்றிடுவான் - நிலைபெறும் பொருட்டு . வான் ஈற்று வினையெச்சம் . அஞ்சலி 971 இதன் கண் ' உடைந்து நைந்து உருகி யுன்னொளி நோக்கி உன் திருமலர்ப்பாதமடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் என்பத னால் அத்தும இலக்கணம் உணர்த்தப்பட்டது . 4 420 அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி அடியே னுடை யாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும் விடையாய் பொடியாடீ எளிவந் தென்னை யாண்டு கொண்ட என்ன ரமுதேயோ அளியே னென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே . ப- ரை . விடையாய் - இடப ஊர்தியையுடையவனே பொடி ஆடீ - திருவெண்ணீற்றை அணிந்தவனே எளிவந்து என்னை ஆண்டு கொண்ட என் ஆர் அமுதேயோ - எளிதாக வலியவந்து என்னை அடிமை கொண்ட என்னுடைய அரிய அமுதம் போன்றவனேயோ அம்மானே - பெருமையையுடையவனே அகத்தே அளிபுண் -உள்ளே யுள்ள நெகிழ்ந்த புண் போன்ற தன்மையை புறம் தோல் மூடி - புறத்தே தோலால் மூடி அமைக்கப்பட்ட அடியேனுடை யாக்கை அடியேனுடைய உடம்பின் கண்ணே புளியம்பழம் ஒத்து இருந்தேன் ஓடும் பழமும் பற்றுதலில்லாத புளியம்பழத்தைப் போலப் பற்றற்று இருந்தேன் இருந்தும் - அங்ஙனம் இருந்தும் அளியேன் என்ன