திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆசைப்பத்து முத்தா வுன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகை காண அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ப-ரை. வானோர் அறியா மலர் சே அடியானே - விண்ணவரும் அறிய முடியாத தாமரை மலர் போன்ற செவ்விய திருவடிகளையுடை யவனே, முத்தா - இயல்பாகவே பாசங்களினீங்கினவனே, நாயேன் எய்த்தேன் - இழிவு டைய யான் இவ்வுடம்பினைச் சுமந்து இளைத்தேன், இனி இங்கு இருக்ககில்லேன் - இனி இவ்வுலகில் இவ்வுடம்போடு இருக் கும் ஆற்றலுடையேனல்லேன்; இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் - இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் வாழ்க்கையை நியமித்த நீயே இதனை நீக்கியருள்வாயாக, உன்தன் முக ஒளி நோக்கி - நினது திரு முகத்தின் அருள் ஒளியைத் தரிசித்து, முறுவல் நகை காண அத்தா அம்மானே சால ஆசைப்பட்டேன் - நினது புன்சிரிப்பினைக் காணும் பொருட்டு அத்தனே பெருமையையுடையவனே மிகவும் விரும்பு கின்றேன். வானோர் அறியாச் சேவடியானே, முத்தா, நாயேன் இளைத்தேன்; இனி இவ்வுலகில் இவ்வுடம்போடு இருக்கும் ஆற்றலுடையேனல் லேன்; இவ்வுடலோடு வாழும் வாழ்க்கையை நியமித்த நீயே இதனை நீக்கி அருள்வாயாக; அத்தா அம்மானே நின் முறுவல் நகை காண விரும்புகின்றேன் என்பதாம். 422 973 எய்த்தேன் இவ்வுலகில் இவ்வுடம்போடு இருத்தலால் தளர்ந் தேன். வைத்தாய் வாங்காய் என்றது வைத்த நீயே வாங்க வேண்டும் என்றவாறு. ''விச்சதின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்'" (திருச்சதகம் 96) என்பத னாலுமறிக. முக ஒளி என்றது அருள் ஒளியை. முறுவல் நகை : சிறு சிரிப்பு. இதன் கண், 'இனி இருக்ககில்லேன், முகவொளி நோக்கி முறு வல் நகை காண சால ஆசைப்பட்டேன்" என்பதனால் ஆத்தும இலக்க ணம் புலப்படும். 6 பாரோர் விண்ணோர் பரவி மேத்தும் பரனே பரஞ்சோதி வாராய் வாரா வுலந் தந்து வந்தாட் கொள்வானே பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமா னெனவேத்த ஆரா வமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.
ஆசைப்பத்து முத்தா வுன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகை காண அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே . - ரை . வானோர் அறியா மலர் சே அடியானே - விண்ணவரும் அறிய முடியாத தாமரை மலர் போன்ற செவ்விய திருவடிகளையுடை யவனே முத்தா - இயல்பாகவே பாசங்களினீங்கினவனே நாயேன் எய்த்தேன் - இழிவு டைய யான் இவ்வுடம்பினைச் சுமந்து இளைத்தேன் இனி இங்கு இருக்ககில்லேன் - இனி இவ்வுலகில் இவ்வுடம்போடு இருக் கும் ஆற்றலுடையேனல்லேன் ; இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் - இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் வாழ்க்கையை நியமித்த நீயே இதனை நீக்கியருள்வாயாக உன்தன் முக ஒளி நோக்கி - நினது திரு முகத்தின் அருள் ஒளியைத் தரிசித்து முறுவல் நகை காண அத்தா அம்மானே சால ஆசைப்பட்டேன் - நினது புன்சிரிப்பினைக் காணும் பொருட்டு அத்தனே பெருமையையுடையவனே மிகவும் விரும்பு கின்றேன் . வானோர் அறியாச் சேவடியானே முத்தா நாயேன் இளைத்தேன் ; இனி இவ்வுலகில் இவ்வுடம்போடு இருக்கும் ஆற்றலுடையேனல் லேன் ; இவ்வுடலோடு வாழும் வாழ்க்கையை நியமித்த நீயே இதனை நீக்கி அருள்வாயாக ; அத்தா அம்மானே நின் முறுவல் நகை காண விரும்புகின்றேன் என்பதாம் . 422 973 எய்த்தேன் இவ்வுலகில் இவ்வுடம்போடு இருத்தலால் தளர்ந் தேன் . வைத்தாய் வாங்காய் என்றது வைத்த நீயே வாங்க வேண்டும் என்றவாறு . ' ' விச்சதின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் ' ( திருச்சதகம் 96 ) என்பத னாலுமறிக . முக ஒளி என்றது அருள் ஒளியை . முறுவல் நகை : சிறு சிரிப்பு . இதன் கண் ' இனி இருக்ககில்லேன் முகவொளி நோக்கி முறு வல் நகை காண சால ஆசைப்பட்டேன் என்பதனால் ஆத்தும இலக்க ணம் புலப்படும் . 6 பாரோர் விண்ணோர் பரவி மேத்தும் பரனே பரஞ்சோதி வாராய் வாரா வுலந் தந்து வந்தாட் கொள்வானே பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமா னெனவேத்த ஆரா வமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே .