திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ப-ரை. பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே - மண்ணுல
கத்தவரும் விண்ணுலகத்தவரும் வணங்கித் துதிக்கும் மேலோனே.
பரம்சோதி - மேலான ஒளியையுடையவனே, வந்து ஆட்கொண்டு
வாரா உலகம் தருவானே - வலிய எழுந்தருளி வந்து அடிமை கொண்
டருளி மீண்டு வருதலில்லாத வீட்டுலகினைத் தந்தருள்பவனே, பேர்
ஆயிரமும் பரவி திரிந்து - நினது ஆயிரந் திருநாமங்களையும் வாழ்த்திக்
கொண்டு ஊர்தொறும் திரிந்து, எம்பெருமான் என ஏத்த - எம்பெரு
மானே என்று துதிக்க, ஆரா அமுதே அம்மானே ஆசைப்பட்டேன் -
தெவிட்டாத அமுதம் போன்றவனே பெருமையையுடையவனே
ஆசையுடையவனாயிருக்கின்றேன், வாராய் - எழுந்தருளி வருவா
974
யாக.
பரனே, பரஞ்சோதியே, வந்து ஆட்கொண்டு வீட்டுலகினைத் தந்
தருள்பவனே, உனது ஆயிரந்திருநாமங்களையும் பரவித் திரிந்து எம்
பெருமான் என ஏத்த ஆசையுடையவனாயிருக்கின்றேன்; எழுந்தருளி
வருவாயாக என்பதாம்.
பரவுதலும் ஏத்துதலும் ஒரு பொருளாதலின் பரவி என்பதற்கு
வணங்கி எனப் பொருள் உரைக்கப்பட்டது.
"இறைவ னெம்பெருமான் என்றெப்போதும் ஏத்தியேத்தி நின்றஞ்சலி
செய்துன், அறைகொள் சேவடிக்கன்பொடு மடைந்தேன்"
சுந். 66-1
திருமந். 39
"ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்ரியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே"
என வருவனவற்றாலுமறிக.
வந்தாட் கொண்டு வாராவுலகம் தருவானே என இயைத்துப்
பொருள் கொள்க. வீட்டுலகில் புகுந்தவர் அங்கு நின்றும் மீளாராத
லின் ''வாராவுலகம்" என்றார். 'வாரா வுலகருள வல்லான் றன்னை",
''வாரா வுலகருள வல்லாய் நீயே" (216-2; 251-9) என அப்பரடிகள்
அருளியவாற்றானுங் காண்க.
பேராயிரம் எனப் பொது வகையாற் கூறினும் திருநாமம் ஆயிரத்
தெட்டும் எனக் கொள்க. பேராயிரமும் என்பதில் உம்மை முற்று
"பேருமொராயிரம் பேருடையார்" (சுந். 183) என்பதனாலுமறிக.
திரிதல் - இறைவனது தலங்கள் தோறும் சென்று வணங்குதல். இறை
வன் திருவருளமுதம் அனுபவிக்குந்தோறும் புதிதாகவே தோன்றித்
தெவிட்டாமையின் 'ஆராவமுதே" என்றார். வாராவுலகம் தந்து
எனக் கிடந்தவாறே கூட்டிப் பொருள் கொள்ளுகில் பரவித் திரிதல்
வேண்டாதாகும். ஆதலால் ஆசைப்பட்டேன் வாராய் என மாறிக்
கூட்டிப் பொருள் கோடலே இயைபுடைத்தாகும்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
ப
-
ரை
.
பாரோர்
விண்ணோர்
பரவி
ஏத்தும்
பரனே
-
மண்ணுல
கத்தவரும்
விண்ணுலகத்தவரும்
வணங்கித்
துதிக்கும்
மேலோனே
.
பரம்சோதி
-
மேலான
ஒளியையுடையவனே
வந்து
ஆட்கொண்டு
வாரா
உலகம்
தருவானே
-
வலிய
எழுந்தருளி
வந்து
அடிமை
கொண்
டருளி
மீண்டு
வருதலில்லாத
வீட்டுலகினைத்
தந்தருள்பவனே
பேர்
ஆயிரமும்
பரவி
திரிந்து
-
நினது
ஆயிரந்
திருநாமங்களையும்
வாழ்த்திக்
கொண்டு
ஊர்தொறும்
திரிந்து
எம்பெருமான்
என
ஏத்த
-
எம்பெரு
மானே
என்று
துதிக்க
ஆரா
அமுதே
அம்மானே
ஆசைப்பட்டேன்
-
தெவிட்டாத
அமுதம்
போன்றவனே
பெருமையையுடையவனே
ஆசையுடையவனாயிருக்கின்றேன்
வாராய்
-
எழுந்தருளி
வருவா
974
யாக
.
பரனே
பரஞ்சோதியே
வந்து
ஆட்கொண்டு
வீட்டுலகினைத்
தந்
தருள்பவனே
உனது
ஆயிரந்திருநாமங்களையும்
பரவித்
திரிந்து
எம்
பெருமான்
என
ஏத்த
ஆசையுடையவனாயிருக்கின்றேன்
;
எழுந்தருளி
வருவாயாக
என்பதாம்
.
பரவுதலும்
ஏத்துதலும்
ஒரு
பொருளாதலின்
பரவி
என்பதற்கு
வணங்கி
எனப்
பொருள்
உரைக்கப்பட்டது
.
இறைவ
னெம்பெருமான்
என்றெப்போதும்
ஏத்தியேத்தி
நின்றஞ்சலி
செய்துன்
அறைகொள்
சேவடிக்கன்பொடு
மடைந்தேன்
சுந்
.
66-1
திருமந்
.
39
ஏத்தியும்
எம்பெரு
மான்என்
றிறைஞ்ரியும்
ஆத்தஞ்செய்
தீசன்
அருள்பெற
லாமே
என
வருவனவற்றாலுமறிக
.
வந்தாட்
கொண்டு
வாராவுலகம்
தருவானே
என
இயைத்துப்
பொருள்
கொள்க
.
வீட்டுலகில்
புகுந்தவர்
அங்கு
நின்றும்
மீளாராத
லின்
'
'
வாராவுலகம்
என்றார்
.
'
வாரா
வுலகருள
வல்லான்
றன்னை
'
'
வாரா
வுலகருள
வல்லாய்
நீயே
(
216-2
;
251-9
)
என
அப்பரடிகள்
அருளியவாற்றானுங்
காண்க
.
பேராயிரம்
எனப்
பொது
வகையாற்
கூறினும்
திருநாமம்
ஆயிரத்
தெட்டும்
எனக்
கொள்க
.
பேராயிரமும்
என்பதில்
உம்மை
முற்று
பேருமொராயிரம்
பேருடையார்
(
சுந்
.
183
)
என்பதனாலுமறிக
.
திரிதல்
-
இறைவனது
தலங்கள்
தோறும்
சென்று
வணங்குதல்
.
இறை
வன்
திருவருளமுதம்
அனுபவிக்குந்தோறும்
புதிதாகவே
தோன்றித்
தெவிட்டாமையின்
'
ஆராவமுதே
என்றார்
.
வாராவுலகம்
தந்து
எனக்
கிடந்தவாறே
கூட்டிப்
பொருள்
கொள்ளுகில்
பரவித்
திரிதல்
வேண்டாதாகும்
.
ஆதலால்
ஆசைப்பட்டேன்
வாராய்
என
மாறிக்
கூட்டிப்
பொருள்
கோடலே
இயைபுடைத்தாகும்
.