திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆசைப்பத்து 975 இதன் கண் "பரவித் திரிந்து எம்பெருமான் என ஏத்த ஆசைப் பட்டேன் வாராய்" என்பதனால் ஆத்தும இலக்கணம் புலனாகும். 7 423 கையாற் றொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண் டெய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென் ஏறயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. ப- ரை. ஐயா - தலைவனே, ஐயாற்று அரசே - திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் அரசனே, அம்மானே - பெரியோனே, கழல் சே அடிகள் - உனது வீரக்கழல் அணிந்த செவ்விய திருவடிகளை, கையால் தொழுது - கைகளினாலே வணங்கி, கழும தழுவிக்கொண்டு - என் மார்பொடு இறுகப் பொருந்தத் தழுவிக் கொண்டு, எய்யாது- எய்ப்படையாமல், என்தன் தலைமேல் வைத்து - என் சிரசிலே அத்திரு வடிகளைச் சூடிக்கொண்டு, எம்பெருமான் பெருமான் என்று - எம் பெருமானே எம்பெருமானே என்று, என்தன் வாயால் அரற்றி- எனது வாயினாற் பல முறை சொல்லி, அனல் சேர் மெழுகு ஒப்ப ஆசைப்பட்டேன் - அக்கினியிற் பட்ட மெழுகு போல மனம் உருகு தற்கு ஆசைப்பட்டேன். உன் ஐயா, ஐயாற்றரசே, அம்மானே, உன் திருவடிகளைக் கையாற் றெழுது தழுவிக்கொண்டு எய்ப்படையாமல் என் சிரசிலே அத்திருவடி களைச் சூடிக்கொண்டு, எம்பெருமான் எம்பெருமான் என்று எனது வாயினாற் பல முறை சொல்லி, அக்கினியிற் பட்ட மெழுகு போல மனம் உருகுதற்கு ஆசைப்பட்டேன் என்பதாம். கையால் தொழுதல் - கை கூப்பி வணங்கல். "கை தொழுஉப் பரளிக் காலுற வணங்கி" (திருமுருகு.252), கையினாற் றொழுபடி யார் நெஞ்சினுள்ளே" (நாவு. 274-7) என வருவன காண்க. எய்யாது என்றது இறைவனைப் பிரிந்ததனால் உண்டாகும் எய்ப்பு நீங்கும் வண் ணம் என்றபடி. எய்யாது வைத்து என முடிக்க. அரற்றல் பலகாற் சொல்லிக் கூவலுமாம். "அரனடி சொல்லி அரற்றி அழுது" (திரு மந். 43) என வருதல் காண்க. அழல் சேர் மெழுகு "அழல் சேர் மெழு கொத்தழிகின்றதே" என திருக்கோவையாரிலும் (44) அடிகள் அருளி யமை காண்க. இதன் கண் ''சேவடிகள் தழுவிக்கொண்டு எய்யாது தலைமேல் வைத்து எம்பெருமான் பெருமான் என்று அரற்றி மெழுகொப்ப உருக ஆசைப்பட்டேன்" என்பதனால் ஆத்தும விலக்கணம் புலப்படுதல் காண்க. ate ale 8
ஆசைப்பத்து 975 இதன் கண் பரவித் திரிந்து எம்பெருமான் என ஏத்த ஆசைப் பட்டேன் வாராய் என்பதனால் ஆத்தும இலக்கணம் புலனாகும் . 7 423 கையாற் றொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண் டெய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென் ஏறயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே . ப- ரை . ஐயா - தலைவனே ஐயாற்று அரசே - திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் அரசனே அம்மானே - பெரியோனே கழல் சே அடிகள் - உனது வீரக்கழல் அணிந்த செவ்விய திருவடிகளை கையால் தொழுது - கைகளினாலே வணங்கி கழும தழுவிக்கொண்டு - என் மார்பொடு இறுகப் பொருந்தத் தழுவிக் கொண்டு எய்யாது எய்ப்படையாமல் என்தன் தலைமேல் வைத்து - என் சிரசிலே அத்திரு வடிகளைச் சூடிக்கொண்டு எம்பெருமான் பெருமான் என்று - எம் பெருமானே எம்பெருமானே என்று என்தன் வாயால் அரற்றி எனது வாயினாற் பல முறை சொல்லி அனல் சேர் மெழுகு ஒப்ப ஆசைப்பட்டேன் - அக்கினியிற் பட்ட மெழுகு போல மனம் உருகு தற்கு ஆசைப்பட்டேன் . உன் ஐயா ஐயாற்றரசே அம்மானே உன் திருவடிகளைக் கையாற் றெழுது தழுவிக்கொண்டு எய்ப்படையாமல் என் சிரசிலே அத்திருவடி களைச் சூடிக்கொண்டு எம்பெருமான் எம்பெருமான் என்று எனது வாயினாற் பல முறை சொல்லி அக்கினியிற் பட்ட மெழுகு போல மனம் உருகுதற்கு ஆசைப்பட்டேன் என்பதாம் . கையால் தொழுதல் - கை கூப்பி வணங்கல் . கை தொழுஉப் பரளிக் காலுற வணங்கி ( திருமுருகு .252 ) கையினாற் றொழுபடி யார் நெஞ்சினுள்ளே ( நாவு . 274-7 ) என வருவன காண்க . எய்யாது என்றது இறைவனைப் பிரிந்ததனால் உண்டாகும் எய்ப்பு நீங்கும் வண் ணம் என்றபடி . எய்யாது வைத்து என முடிக்க . அரற்றல் பலகாற் சொல்லிக் கூவலுமாம் . அரனடி சொல்லி அரற்றி அழுது ( திரு மந் . 43 ) என வருதல் காண்க . அழல் சேர் மெழுகு அழல் சேர் மெழு கொத்தழிகின்றதே என திருக்கோவையாரிலும் ( 44 ) அடிகள் அருளி யமை காண்க . இதன் கண் ' ' சேவடிகள் தழுவிக்கொண்டு எய்யாது தலைமேல் வைத்து எம்பெருமான் பெருமான் என்று அரற்றி மெழுகொப்ப உருக ஆசைப்பட்டேன் என்பதனால் ஆத்தும விலக்கணம் புலப்படுதல் காண்க . ate ale 8