திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
976
424
திருவாசக ஆராய்ச்சியுரை
செடியா ராக்கைத் திறமற வீசிச்
சிவபுர நகர்புக்குக்
கடியார் சோதி கண்டு கொண்டென்
கண்ணிணை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பர னேயுன்
பழவடி யார்கூட்டம்
அடியேன் காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
மிக
ப-ரை.
படிதான் இல்லா பரம்பரனே - ஒப்பில்லாத
மேலோனே, அம்மானே - பெருமையையுடையவனே, செடி
ஆக்கை திறம் அற வீசி - முடைநாற்றமுடைய இவ்வுடம்பின் திற
மாகிய அகப்பற்றினை முழுவதும் நீக்கி, சிவபுர நகர் புக்கு - சிவ
லோகத்தின் கணுள்ள திருக்கோயிலிற் புகுந்து, கடி ஆர் சோதி கண்டு
கொண்டு - உலகிற்கும் உயிர்களுக்கும் காவலாகப் பொருந்திய நினது
அருள் ஒளியைத் தரிசித்துக் கொண்டு, என் கண் இணை களி கூர - என்
இரு கண்களும் மகிழ்ச்சி மிகும்படி, அடியேன் உன் பழ அடியார் கூட்
டம் காண ஆசைப்பட்டேன் - அடியேன் நினது பழமையான அணுக்
கன் தொண்டர்களின் கூட்டத்தைக் காணவும் ஆசைப்படுகின்றேன்.
பரம்பரனே, அம்மானே, இவ்வுடம்பின் திறத்தினை முழுவதும்
நீக்கி, சிவலோகத்தின் கணுள்ள திருக்கோயிலிற் புகுந்து, உலகு உயிர்
களுக்குக் காவலாகப் பொருந்திய நின் அருள் ஒளியைத் தரிசித்துக்
கொண்டு என் இரு கண்களும் களி கூரும்படி, உன் பழவடியார் கூட்
டத்தினைக் காண அடியேன் ஆசைப்படுகின்றேன் என்பதாம்.
செடி - முடைநாற்றம். ''செடி சேர் உடலைச் சிதையாதது" என
அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. அகப்பற்று உடலைப் பற்றி
நிகழ்தலின் அதனை 'யாக்கைத் திறம்" என்றார். அற வீசுதல் - முழு
வதும் நீக்குதல். உலகமும் உயிர்களும் நிலைதளராதிருத்தற்கும் இயங்
குதற்கும் இறைவன் அருள் ஒளி காவலாக அமைந்திருத்தலின் கடி
யார் சோதி" என்றார். களி கூரவும் அடியார் கூட்டம் காணவும் என
உம்மை விரிக்க. படி - ஒப்பு. இறைவன் ஒப்பில்லாதவன் என்பதை
"ஒப்புனக்கில்லா ஒருவனே" (பிடித். 5) என அடிகள் பிறிதோரிடத்
தும் கூறுவர். பழவடியார் என்றது அணுக்கன் தொண்டரை.
இதன் கண் "ஆக்கைத் திறமற வீசி சோதி கண்டு கொண்டு கண்
களிகூர பழவடியார் கூட்டம் காண ஆசைப்பட்டேன்' என்பதனால்
ஆத்தும விலக்கணம் புலப்படுதல் காண்க,
9
976
424
திருவாசக
ஆராய்ச்சியுரை
செடியா
ராக்கைத்
திறமற
வீசிச்
சிவபுர
நகர்புக்குக்
கடியார்
சோதி
கண்டு
கொண்டென்
கண்ணிணை
களிகூரப்
படிதா
னில்லாப்
பரம்பர
னேயுன்
பழவடி
யார்கூட்டம்
அடியேன்
காண
ஆசைப்
பட்டேன்
கண்டாய்
அம்மானே
.
மிக
ப
-
ரை
.
படிதான்
இல்லா
பரம்பரனே
-
ஒப்பில்லாத
மேலோனே
அம்மானே
-
பெருமையையுடையவனே
செடி
ஆக்கை
திறம்
அற
வீசி
-
முடைநாற்றமுடைய
இவ்வுடம்பின்
திற
மாகிய
அகப்பற்றினை
முழுவதும்
நீக்கி
சிவபுர
நகர்
புக்கு
-
சிவ
லோகத்தின்
கணுள்ள
திருக்கோயிலிற்
புகுந்து
கடி
ஆர்
சோதி
கண்டு
கொண்டு
-
உலகிற்கும்
உயிர்களுக்கும்
காவலாகப்
பொருந்திய
நினது
அருள்
ஒளியைத்
தரிசித்துக்
கொண்டு
என்
கண்
இணை
களி
கூர
-
என்
இரு
கண்களும்
மகிழ்ச்சி
மிகும்படி
அடியேன்
உன்
பழ
அடியார்
கூட்
டம்
காண
ஆசைப்பட்டேன்
-
அடியேன்
நினது
பழமையான
அணுக்
கன்
தொண்டர்களின்
கூட்டத்தைக்
காணவும்
ஆசைப்படுகின்றேன்
.
பரம்பரனே
அம்மானே
இவ்வுடம்பின்
திறத்தினை
முழுவதும்
நீக்கி
சிவலோகத்தின்
கணுள்ள
திருக்கோயிலிற்
புகுந்து
உலகு
உயிர்
களுக்குக்
காவலாகப்
பொருந்திய
நின்
அருள்
ஒளியைத்
தரிசித்துக்
கொண்டு
என்
இரு
கண்களும்
களி
கூரும்படி
உன்
பழவடியார்
கூட்
டத்தினைக்
காண
அடியேன்
ஆசைப்படுகின்றேன்
என்பதாம்
.
செடி
-
முடைநாற்றம்
.
'
'
செடி
சேர்
உடலைச்
சிதையாதது
என
அடிகள்
பிறிதோரிடத்தும்
கூறுதல்
காண்க
.
அகப்பற்று
உடலைப்
பற்றி
நிகழ்தலின்
அதனை
'
யாக்கைத்
திறம்
என்றார்
.
அற
வீசுதல்
-
முழு
வதும்
நீக்குதல்
.
உலகமும்
உயிர்களும்
நிலைதளராதிருத்தற்கும்
இயங்
குதற்கும்
இறைவன்
அருள்
ஒளி
காவலாக
அமைந்திருத்தலின்
கடி
யார்
சோதி
என்றார்
.
களி
கூரவும்
அடியார்
கூட்டம்
காணவும்
என
உம்மை
விரிக்க
.
படி
-
ஒப்பு
.
இறைவன்
ஒப்பில்லாதவன்
என்பதை
ஒப்புனக்கில்லா
ஒருவனே
(
பிடித்
.
5
)
என
அடிகள்
பிறிதோரிடத்
தும்
கூறுவர்
.
பழவடியார்
என்றது
அணுக்கன்
தொண்டரை
.
இதன்
கண்
ஆக்கைத்
திறமற
வீசி
சோதி
கண்டு
கொண்டு
கண்
களிகூர
பழவடியார்
கூட்டம்
காண
ஆசைப்பட்டேன்
'
என்பதனால்
ஆத்தும
விலக்கணம்
புலப்படுதல்
காண்க
9