திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

425 ஆசைப்பத்து வெஞ்சே லனைய கண்ணார்தம் வெகுளி வலையி லகப்பட்டு தி நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால் அஞ்சே லென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 0 977 ப-ரை: பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா - பஞ்சை ஒத்த அடிகளையுடைய உமையம்மையை இடப்பாகத்திலுடைய ஒப்பற் றவனே, அம்மானே - பெருமையையுடையவனே, நாயேன் வெம் சேல் அனைய கண்ணார் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் - இழி வுடைய யான் விரும்பப்படும் சேல்மீன் போன்ற கண்களையுடைய மகளிரது ஊடலாலுளதாகும் வெகுளி வலையில் அகப்பட்டு வருந்தி னேன் : ஞான சுடரே ஞான சூரியனே, நான் ஓர் துணை காணேன் - நான் எனக்குத் துணையாவார் நின்னை அன்றிப் பிறர் ஒருவரையும் காணப்பெற்றிலேன்; பவள திருவாயால் - நினது பவ ளம் போன்ற அழகிய திருவாயினால், அஞ்சேல் என்ன ஆசைப்பட் டேன் - என்னைப் பார்த்து அஞ்சற்க என்று அருள்செய்ய ஆசைப்பட் டேன். இறைவனே, நாயேன் மகளிரது ஊடலால் உளதாகும் வெகுளி வலையில் அகப்பட்டு வருந்தினேன். எனக்குத் துணையாவார் நின்னை யன்றிப் பிறர் ஒருவரையும் காணப்பெற்றிலேன். உன் பவளத் திரு வாயால் அஞ்சற்க என்று அருள்செய்ய ஆசைப்பட்டேன் என்பதாம்; வெம்மை - விருப்பம். சேல் அனைய கண் - சேல் மீனைப்போலப் பிற ழும் கண். வெகுளி - ஊடலாலுளதாகும் வெறுப்பு. இதனை ''தெரியிழாய்! செய்தவ றில்வழி யாங்குச் சினவுவாய் மெய்பிரிந் தன்னவர் மாட்டு" கலி 87: 3-4 என்னும் கலித்தொகையினுங் காண்க: நைந்தேன் என்பது எதுகை நோக்கி நைஞ்சேன் எனப் போலியாயிற்று. துணை-துணையாவார். பஞ் சேரடி - செம்பஞ்சு போன்ற மென்மையும் நிறமுமுடைய அடி. அஞ் சேல் என்றலால் இறைவன் தம்மை அழைத்து அபயங் கொடுத்தல் நிகழுமாதலின் அடிகள் அதனை விரும்புவாராயினர். இதன் கண் 'சேலனைய கண்ணார் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன்,ஓர்துணை காணேன் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்'* என்பதனால் ஆத்தும இலக்கணம் புலப்படுதல் காண்க. 92 10
425 ஆசைப்பத்து வெஞ்சே லனைய கண்ணார்தம் வெகுளி வலையி லகப்பட்டு தி நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால் அஞ்சே லென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே . 0 977 - ரை : பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா - பஞ்சை ஒத்த அடிகளையுடைய உமையம்மையை இடப்பாகத்திலுடைய ஒப்பற் றவனே அம்மானே - பெருமையையுடையவனே நாயேன் வெம் சேல் அனைய கண்ணார் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் - இழி வுடைய யான் விரும்பப்படும் சேல்மீன் போன்ற கண்களையுடைய மகளிரது ஊடலாலுளதாகும் வெகுளி வலையில் அகப்பட்டு வருந்தி னேன் : ஞான சுடரே ஞான சூரியனே நான் ஓர் துணை காணேன் - நான் எனக்குத் துணையாவார் நின்னை அன்றிப் பிறர் ஒருவரையும் காணப்பெற்றிலேன் ; பவள திருவாயால் - நினது பவ ளம் போன்ற அழகிய திருவாயினால் அஞ்சேல் என்ன ஆசைப்பட் டேன் - என்னைப் பார்த்து அஞ்சற்க என்று அருள்செய்ய ஆசைப்பட் டேன் . இறைவனே நாயேன் மகளிரது ஊடலால் உளதாகும் வெகுளி வலையில் அகப்பட்டு வருந்தினேன் . எனக்குத் துணையாவார் நின்னை யன்றிப் பிறர் ஒருவரையும் காணப்பெற்றிலேன் . உன் பவளத் திரு வாயால் அஞ்சற்க என்று அருள்செய்ய ஆசைப்பட்டேன் என்பதாம் ; வெம்மை - விருப்பம் . சேல் அனைய கண் - சேல் மீனைப்போலப் பிற ழும் கண் . வெகுளி - ஊடலாலுளதாகும் வெறுப்பு . இதனை ' ' தெரியிழாய் ! செய்தவ றில்வழி யாங்குச் சினவுவாய் மெய்பிரிந் தன்னவர் மாட்டு கலி 87 : 3-4 என்னும் கலித்தொகையினுங் காண்க : நைந்தேன் என்பது எதுகை நோக்கி நைஞ்சேன் எனப் போலியாயிற்று . துணை - துணையாவார் . பஞ் சேரடி - செம்பஞ்சு போன்ற மென்மையும் நிறமுமுடைய அடி . அஞ் சேல் என்றலால் இறைவன் தம்மை அழைத்து அபயங் கொடுத்தல் நிகழுமாதலின் அடிகள் அதனை விரும்புவாராயினர் . இதன் கண் ' சேலனைய கண்ணார் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் ஓர்துணை காணேன் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் ' * என்பதனால் ஆத்தும இலக்கணம் புலப்படுதல் காண்க . 92 10