திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

428 அதிசயப்பத்து முன்னை யென்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப் 981 பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த அன்னை யாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ப- ரை. முக்கண் உடை எந்தை - மூன்று திருக்கண்களையுடைய எமது தந்தையும், தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் - தன்னை எத்துணை மேம்பாட்டினரும் அறிதற்கு அருமையானவனும், அடி யார்க்கு எளியவன் - பெய்யடியார்க்கு எளிவந்து அருள் செய்பவனும் பொன்னை வென்றது ஓர் புரி சடை முடிதனில் இளமதியது வைத்த அன்னை - நிறத்தினாற் பொன்னை வென்ற ஒப்பற்ற முறுகிய சடை முடி யின் கண்ணே பிறைச்சந்திரனைத் தரிசித்த தாய் போன்றவனுமாகிய இறைவன், என்னுடை முன்னை வல்வினை போயிட ஆண்டு - என் னுடைய பழைய வலிய சஞ்சித கன்மங்கள் முழுவதும் நீங்கிப் போகும் வண்ணம் ஆட்கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண் டாம்-தனது மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயச் செயலினைக் கண்டோம். முக்கணுடைய எமது தந்தையும் எத்துணை மேம்பாட்டினராலும் அறிதற்கரியவனும் மெய்யடியார்க்கு எளியவனும் புரிசடைமுடிதனில் பிறைச் சந்திரனை வைத்த அன்னை போன்றவனுமாகிய இறைவன் என் னுடைய முன்னை வல்வினை நீங்கிப் போகும்வண்ணம் ஆட்கொண்டு தன் அடியாரிற் கூட்டிய அதிரயச் செயலினைக் கண்டோம் என்பதாம். முன்னை என்னுடை வல்வினை போயிட என்றதனால் பழைய சஞ் சிதகன்மங்கள் நீங்கியமை கொள்ளப்படினும் அதன் சார்பினால் இனி வரும் ஆகாமியகன்மமும் நீங்கியமை கொள்ளப்படும். ஆகவே எஞ்சி நின்றது எடுத்தவுடலோடு கூடிய பிராரத்தவினையாகும். அது உட லுடனொழியும். "விரிந்த சஞ்சித வினைகளன் புடனாம் விழிக்க வெந்தன விரவுமிப் பிறப்பிற் பொருந்தும் வல்வினை யுடலுட னகலும் புந்தி சேரருள் வருவினை போக்கு" திருவாத. திருப்பெருந், 74 எனத் திருவாத வூரடிகள் புராணத்து வருதல் காண்க போயிட ஆண்டு என இயையும்.
428 அதிசயப்பத்து முன்னை யென்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப் 981 பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த அன்னை யாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே . ப- ரை . முக்கண் உடை எந்தை - மூன்று திருக்கண்களையுடைய எமது தந்தையும் தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் - தன்னை எத்துணை மேம்பாட்டினரும் அறிதற்கு அருமையானவனும் அடி யார்க்கு எளியவன் - பெய்யடியார்க்கு எளிவந்து அருள் செய்பவனும் பொன்னை வென்றது ஓர் புரி சடை முடிதனில் இளமதியது வைத்த அன்னை - நிறத்தினாற் பொன்னை வென்ற ஒப்பற்ற முறுகிய சடை முடி யின் கண்ணே பிறைச்சந்திரனைத் தரிசித்த தாய் போன்றவனுமாகிய இறைவன் என்னுடை முன்னை வல்வினை போயிட ஆண்டு - என் னுடைய பழைய வலிய சஞ்சித கன்மங்கள் முழுவதும் நீங்கிப் போகும் வண்ணம் ஆட்கொண்டருளி தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண் டாம் - தனது மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயச் செயலினைக் கண்டோம் . முக்கணுடைய எமது தந்தையும் எத்துணை மேம்பாட்டினராலும் அறிதற்கரியவனும் மெய்யடியார்க்கு எளியவனும் புரிசடைமுடிதனில் பிறைச் சந்திரனை வைத்த அன்னை போன்றவனுமாகிய இறைவன் என் னுடைய முன்னை வல்வினை நீங்கிப் போகும்வண்ணம் ஆட்கொண்டு தன் அடியாரிற் கூட்டிய அதிரயச் செயலினைக் கண்டோம் என்பதாம் . முன்னை என்னுடை வல்வினை போயிட என்றதனால் பழைய சஞ் சிதகன்மங்கள் நீங்கியமை கொள்ளப்படினும் அதன் சார்பினால் இனி வரும் ஆகாமியகன்மமும் நீங்கியமை கொள்ளப்படும் . ஆகவே எஞ்சி நின்றது எடுத்தவுடலோடு கூடிய பிராரத்தவினையாகும் . அது உட லுடனொழியும் . விரிந்த சஞ்சித வினைகளன் புடனாம் விழிக்க வெந்தன விரவுமிப் பிறப்பிற் பொருந்தும் வல்வினை யுடலுட னகலும் புந்தி சேரருள் வருவினை போக்கு திருவாத . திருப்பெருந் 74 எனத் திருவாத வூரடிகள் புராணத்து வருதல் காண்க போயிட ஆண்டு என இயையும் .