திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை ஆளாகஏற்றுக்கொண்டு பாராட்டும் பெருங் குணத்தையும் புகழ்ந்து பாடி, சிவனே சிவனே என்று ஓலம் இடினும் - சிவனே சிவனே என்று அடைக்கலம் வேண்டி முறையீடு செய்யினும், உணராய் உணராய் - துயிலுணர்ந்தாயுமில்லை நாங்கள் சொல்லுவதனை அறிந்தாயுமில்லை, ஏல குழலி பரிசு-மயிர்ச் சாந்தணிந்த கூந்தலையுடைய பெண்ணே, உன் தன்மை இதுவா? எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி! பொக்கங்களே பேசும் படிறீயாயினும் இவளுக்கு நல்லருள் செய்வாயாக (என வேண்டுதல் செய்தலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்) என்ப தாம். 503 திருமாலும் நான்முகனும் காணாதவாறு மலையுருவாய் நின்ற இறைவனை. நாங்களா அறியும் தகுதியுடையோமென்று பணிவு டைமை தோன்றுமாறுள்ள பொய் மொழிகளைப் பேசும் படிறீ! உன் இல்லின் புறவாயிற் கதவினையாவது திறக்கின்றாயில்லையே. ஞாலமே, விண்ணே பிறவே அறிதற்கரியனாகிய இறைவனது திருக்கோலத்தை யும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலத்தினையும் புகழ்ந்து பாடிச் சிவனே சிவனேயென்று ஓலமிடினும் துயிலுணர்ந்தாயுமில்லை. நாங்கள் செய்வதனை அறிந்தாயுமில்லை, ஏலக் குழலீ, உன் தன்மை இதுவா? எம்பாவாய்! இவளுக்கு நல்லருள் செய்வாயாக (என வேண் டுதல் செய்தலும் எழுந்து கடை திறந்து வந்த அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்) என்பதாம். முன்னொரு காலத்தில் திருமாலும் பிரமனும் நாம் பிரமம், நாம் பிரமம் என்று தம்முள் வாதிட்டபோது அவர்களது அகங்காரத்தை அடக்கவேண்டிச் சிவபெருமான் அழன் மலையாக அவர்களுக்கு இடையே தோன்றி, இதன் அடியையும் முடியையும் காணவல்லீரேல் அவரே முதல்வராவீர் என்றுரைக்கத், திருமால் வராகவுருக்கொண்டு நிலத்தை அகழ்ந்து அடியையும், பிரமன் அன்னவுருக்கொண்டு விண் ணிற் பறந்து முடியையும் தேடி அறிய முடியாமையின் "மாலறியா நான்முகனும் காணா மலையினை'' என்றார். அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய் நிலமுதற்கீ ழண்டமுற நின்றதுதா கொன்னேடீ நிலமுதற்கீ ழண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தா லாங்காரந் தவிரார்காண் சாழலோ" "பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ" (சாழல் 6) (தோனோ 12)
திருவெம்பாவை ஆளாகஏற்றுக்கொண்டு பாராட்டும் பெருங் குணத்தையும் புகழ்ந்து பாடி சிவனே சிவனே என்று ஓலம் இடினும் - சிவனே சிவனே என்று அடைக்கலம் வேண்டி முறையீடு செய்யினும் உணராய் உணராய் - துயிலுணர்ந்தாயுமில்லை நாங்கள் சொல்லுவதனை அறிந்தாயுமில்லை ஏல குழலி பரிசு - மயிர்ச் சாந்தணிந்த கூந்தலையுடைய பெண்ணே உன் தன்மை இதுவா ? எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி ! பொக்கங்களே பேசும் படிறீயாயினும் இவளுக்கு நல்லருள் செய்வாயாக ( என வேண்டுதல் செய்தலும் எழுந்து வந்த அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் ) என்ப தாம் . 503 திருமாலும் நான்முகனும் காணாதவாறு மலையுருவாய் நின்ற இறைவனை . நாங்களா அறியும் தகுதியுடையோமென்று பணிவு டைமை தோன்றுமாறுள்ள பொய் மொழிகளைப் பேசும் படிறீ ! உன் இல்லின் புறவாயிற் கதவினையாவது திறக்கின்றாயில்லையே . ஞாலமே விண்ணே பிறவே அறிதற்கரியனாகிய இறைவனது திருக்கோலத்தை யும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலத்தினையும் புகழ்ந்து பாடிச் சிவனே சிவனேயென்று ஓலமிடினும் துயிலுணர்ந்தாயுமில்லை . நாங்கள் செய்வதனை அறிந்தாயுமில்லை ஏலக் குழலீ உன் தன்மை இதுவா ? எம்பாவாய் ! இவளுக்கு நல்லருள் செய்வாயாக ( என வேண் டுதல் செய்தலும் எழுந்து கடை திறந்து வந்த அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர் ) என்பதாம் . முன்னொரு காலத்தில் திருமாலும் பிரமனும் நாம் பிரமம் நாம் பிரமம் என்று தம்முள் வாதிட்டபோது அவர்களது அகங்காரத்தை அடக்கவேண்டிச் சிவபெருமான் அழன் மலையாக அவர்களுக்கு இடையே தோன்றி இதன் அடியையும் முடியையும் காணவல்லீரேல் அவரே முதல்வராவீர் என்றுரைக்கத் திருமால் வராகவுருக்கொண்டு நிலத்தை அகழ்ந்து அடியையும் பிரமன் அன்னவுருக்கொண்டு விண் ணிற் பறந்து முடியையும் தேடி அறிய முடியாமையின் மாலறியா நான்முகனும் காணா மலையினை ' ' என்றார் . அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய் நிலமுதற்கீ ழண்டமுற நின்றதுதா கொன்னேடீ நிலமுதற்கீ ழண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தா லாங்காரந் தவிரார்காண் சாழலோ பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ ( சாழல் 6 ) ( தோனோ 12 )