திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தரு சுடர்ச்சோதி என்பதை மறித்தும் ஒருமுறை உரைத்து அதனை ஆக்கி என்பதற்கு விசேடணமாகக் கொள்ளினுமமையும். 994 எழுத அரு என்பது எழுதரு என ஈறுகெட்டது. இறைவன் எழுதற்கரியான் என்பது ''இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத் தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே" என அப்பரடி கள் அருளியவாற்றானுமறிக. இனி எழுதரு சுடர்ச் சோதி என்பதற்கு எழுந்து தோன்றுகின்ற சுடர்போன்ற ஒளிவடிவினன் எனப்பொரு ளுரைப்பாருமுளர். இதன்கண், "நீக்கிக் குரம்பையிற் புகப்பெய்து நோக்கிச் சொற் செய்து விளாக்கைத்துத் தூக்கிப் பொய்யறத் துகளறுத்து ஆக்கி ஆண்டு அடியரிற் கூட்டிய" என்பதனால் முத்தியிலக்கணம் என்னும் பதிகம் நுதலியபொருள் புலப்படுமாறு காண்க. 8 434 உற்ற வாக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்ற வாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொற் றெளியாமே அத்த னாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ப - ரை. உற்ற ஆக்கையின் உறுபொருள் - செய்த வினைக்கு ஈடாக மானுட உடம்பினது மேலாகிய பயன் என்னையெனில், நறு மலர் எழுதரு நாற்றம் போல் - நறிய மலரிலுண்டாகிய மணம் போல், பற்றல் ஆவது ஓர் நிலை இலா பரம்பொருள் - ஐம்புலனால் பற்றப்படு வதாகிய ஒரு தன்மை இல்லாத மேலாகிய பொருளைக் காணுதலா கும், அப்பொருள் பாராது - அப்பரம்பொருளைக் காண முயலாது, பெற்ற ஆறு பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளி யாமே - தம் வினைக்கீடாகப் பெற்றவகையில் வினைப்பயனை அனுப வித்து அவ்வளவில் ஒழிகின்ற அறிவு மயங்கினவர்களின் பேச்சுக்களைத் தெளிந்து ஏற்றுக் கொள்ளாவண்ணம், அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - எங்கள் தந்தை என்னை ஆட்கொண்டு மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்டோம். கிடைத்த மானுட யாக்கையினது மேலாகிய பயன் என்னை யெனில் பரம்பொருளைக் காணுதலாகும். அப்பரம் பொருளைக் காண முயலாது தம் வினைக்கீடாகப் பெற்ற வகையில் அடைந்த வினைப்
திருவாசக ஆராய்ச்சியுரை தரு சுடர்ச்சோதி என்பதை மறித்தும் ஒருமுறை உரைத்து அதனை ஆக்கி என்பதற்கு விசேடணமாகக் கொள்ளினுமமையும் . 994 எழுத அரு என்பது எழுதரு என ஈறுகெட்டது . இறைவன் எழுதற்கரியான் என்பது ' ' இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத் தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே என அப்பரடி கள் அருளியவாற்றானுமறிக . இனி எழுதரு சுடர்ச் சோதி என்பதற்கு எழுந்து தோன்றுகின்ற சுடர்போன்ற ஒளிவடிவினன் எனப்பொரு ளுரைப்பாருமுளர் . இதன்கண் நீக்கிக் குரம்பையிற் புகப்பெய்து நோக்கிச் சொற் செய்து விளாக்கைத்துத் தூக்கிப் பொய்யறத் துகளறுத்து ஆக்கி ஆண்டு அடியரிற் கூட்டிய என்பதனால் முத்தியிலக்கணம் என்னும் பதிகம் நுதலியபொருள் புலப்படுமாறு காண்க . 8 434 உற்ற வாக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்ற வாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொற் றெளியாமே அத்த னாண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே . - ரை . உற்ற ஆக்கையின் உறுபொருள் - செய்த வினைக்கு ஈடாக மானுட உடம்பினது மேலாகிய பயன் என்னையெனில் நறு மலர் எழுதரு நாற்றம் போல் - நறிய மலரிலுண்டாகிய மணம் போல் பற்றல் ஆவது ஓர் நிலை இலா பரம்பொருள் - ஐம்புலனால் பற்றப்படு வதாகிய ஒரு தன்மை இல்லாத மேலாகிய பொருளைக் காணுதலா கும் அப்பொருள் பாராது - அப்பரம்பொருளைக் காண முயலாது பெற்ற ஆறு பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளி யாமே - தம் வினைக்கீடாகப் பெற்றவகையில் வினைப்பயனை அனுப வித்து அவ்வளவில் ஒழிகின்ற அறிவு மயங்கினவர்களின் பேச்சுக்களைத் தெளிந்து ஏற்றுக் கொள்ளாவண்ணம் அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாம் - எங்கள் தந்தை என்னை ஆட்கொண்டு மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்டோம் . கிடைத்த மானுட யாக்கையினது மேலாகிய பயன் என்னை யெனில் பரம்பொருளைக் காணுதலாகும் . அப்பரம் பொருளைக் காண முயலாது தம் வினைக்கீடாகப் பெற்ற வகையில் அடைந்த வினைப்