திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அதிசயப்பத்து 997 இவ்வுடம்பு இருளாகிய ஆணவம் செறிதலால் உளதாகிய வல் வினைகளாகிய சிறு குடிசையாகும். இவ்வுடம்பினை நிலையான பொருள் எனக் கருதி மகிழ்ந்து அருநரகத்திடை விழப் புகுகின்ற என்னை, முப் புரத்தினை அழித்த இறைவன் என் பொய்ந்நெறி நீக்கி ஆண்ட அதிச யத்தைக் கண்டோம் என்பதாம். பின்ன இருள் - இருளாகிய ஆணவம். திணிந்து என்னும் செய்தெனெச் சம் ஏதுப்பொருட்டு. எழுந்திட்டதோர் சிறுகுடில் எனவும் வல்வினைச் சிறுகுடில் எனவும் தனித்தனி இயையும். இதை இத்தை என விரித்தல் விகாரம் பெற்றது. தெருளுதல் - தெளிவாக விளங்கித் தோன்றுதல். மும்மதில் - இரும்பு வெள்ளி பொன் என்பவற்றாலான மூவகைப்பட்ட மதில். மதில் அதனையுடைய புரத்திற்கு ஆகுபெயர். நொடிவரை - கைந் நொடிப்பொழுது. சினப்பதத்தொடு - வெகுளுஞ் செவ்வியுடன். இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவனாயிருந்தும் முப்புரங்களும் உயிர் களுக்குச் செய்யும் தீமையினைக் கண்டு இரங்கி, அப்புரங்கள் மேல் வெகுண்டானாதலின் 'சினப்பதத்தொடும்' என்றார். முப்புரங்களை நொடிப்பொழுதில் சினப்பதத்தொடும் செந்தீ அருளியமை, ஒன்றிய திரிபுரமொரு நொடியினீலெரி, சென்று கொள்வகை சிறுமுறுவல் கொடொளி பெற நின்றனன்" ஞான.124-6 'நன்மையிலா வல்லவுணர் நகர் மூன்று மொரு நொடியில் வின்மலையின் நாண் கொளுவி வேங்கணையா லெய்தழித்த, நின்மலனார்" ஞான.323-6 அவுணர் புரமூன்று மொரு நொடிவரையின் மூள வெரிசெய் சடையர்'" antren "அந்தர முழிதரு திரிபுரமொரு நொடியளவினில் வெந்தழிதர வெய்த விடலையர்'" ஞான.344-5 'அரணம் மூன்றும் சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார்'" நாவு. 33-8 நாவு. 292-2 ஞான 327-2 'அவுணர்புரம் ஒரு நொடியில் எரி செய்தான்" ‘மன் னுவான் புரங்கள் மூன்றும் உற்றொரு நொடியின் முன்னம், உள்ளழல் வாயின் வீழச் செற்றருள் செய்தார்" நாவு. 78-7 நொடிக்கும் அளவிற் புரமூன்றெரியச் சிலை தொட்டவனே" "செற்றது மூவெயில் நொடிப்பது மாத்திரை'' எனத் தேவாரத்தும், சுந். 4-9 சுந். 44-1
அதிசயப்பத்து 997 இவ்வுடம்பு இருளாகிய ஆணவம் செறிதலால் உளதாகிய வல் வினைகளாகிய சிறு குடிசையாகும் . இவ்வுடம்பினை நிலையான பொருள் எனக் கருதி மகிழ்ந்து அருநரகத்திடை விழப் புகுகின்ற என்னை முப் புரத்தினை அழித்த இறைவன் என் பொய்ந்நெறி நீக்கி ஆண்ட அதிச யத்தைக் கண்டோம் என்பதாம் . பின்ன இருள் - இருளாகிய ஆணவம் . திணிந்து என்னும் செய்தெனெச் சம் ஏதுப்பொருட்டு . எழுந்திட்டதோர் சிறுகுடில் எனவும் வல்வினைச் சிறுகுடில் எனவும் தனித்தனி இயையும் . இதை இத்தை என விரித்தல் விகாரம் பெற்றது . தெருளுதல் - தெளிவாக விளங்கித் தோன்றுதல் . மும்மதில் - இரும்பு வெள்ளி பொன் என்பவற்றாலான மூவகைப்பட்ட மதில் . மதில் அதனையுடைய புரத்திற்கு ஆகுபெயர் . நொடிவரை - கைந் நொடிப்பொழுது . சினப்பதத்தொடு - வெகுளுஞ் செவ்வியுடன் . இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவனாயிருந்தும் முப்புரங்களும் உயிர் களுக்குச் செய்யும் தீமையினைக் கண்டு இரங்கி அப்புரங்கள் மேல் வெகுண்டானாதலின் ' சினப்பதத்தொடும் ' என்றார் . முப்புரங்களை நொடிப்பொழுதில் சினப்பதத்தொடும் செந்தீ அருளியமை ஒன்றிய திரிபுரமொரு நொடியினீலெரி சென்று கொள்வகை சிறுமுறுவல் கொடொளி பெற நின்றனன் ஞான.124-6 ' நன்மையிலா வல்லவுணர் நகர் மூன்று மொரு நொடியில் வின்மலையின் நாண் கொளுவி வேங்கணையா லெய்தழித்த நின்மலனார் ஞான.323-6 அவுணர் புரமூன்று மொரு நொடிவரையின் மூள வெரிசெய் சடையர் ' antren அந்தர முழிதரு திரிபுரமொரு நொடியளவினில் வெந்தழிதர வெய்த விடலையர் ' ஞான.344-5 ' அரணம் மூன்றும் சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார் ' நாவு . 33-8 நாவு . 292-2 ஞான 327-2 ' அவுணர்புரம் ஒரு நொடியில் எரி செய்தான் மன் னுவான் புரங்கள் மூன்றும் உற்றொரு நொடியின் முன்னம் உள்ளழல் வாயின் வீழச் செற்றருள் செய்தார் நாவு . 78-7 நொடிக்கும் அளவிற் புரமூன்றெரியச் சிலை தொட்டவனே செற்றது மூவெயில் நொடிப்பது மாத்திரை ' ' எனத் தேவாரத்தும் சுந் . 4-9 சுந் . 44-1