திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

998 13 திருவாசக ஆராய்ச்சியுரை ''தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில் ஒல்லனல் கொளுவி ஒருநொடி வில்லொன்று வளைத்த வீரம் போற்றி'' பொடிபட 11-ந் திருமுறை கோயில் நான். 40-14-6 என வருவனவற்றாலுமறிக. இறைவனது வெகுளித்தீயே முப்புரங்களை அழித்தது என்க. மெய்ந்நெறி - உண்மை நெறிப்பயனாகவுள்ள இறைவன். இனி மெய்ந்நெறியாகிய வீடு பேற்றினை அருள்பவன் எனப் பொருள் கொள்ளுதலுமுண்டு. மெய்ந்நெறி, மேவிய வெந்நரகத்தி லழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத முதலானை" சுந். 40-10 ''அமரர்க் கருளிய மெய்ந்நெறி' திருமந். 34 என வருவனவுங் காண்க. மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடு செந்தீ அருளும் மெய்ந்நெறி என்றது முப்புரங்களை அழித்தற் பொருட்டுத் தேவர்கள் தைத்து விடுத்த தேரினை அவர்கள் உள்ளக் குறிப்பினை உணர்ந்து அச்சு முறியும் வண்ணம் சினந்து திருவடியை வைத்துச் சினமாகிய தீயை முப்புரங்களில் செலுத்தியதெனவும் உரைக்கலாம். தச்சு விடுத்தலுந் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற என வருதல் காண்க. பொய்ந்நெறி என்றது சிறு குடிலைப் பொரு ளெனக் கருதுதல். இதன் கண், 'அருநரகத்திடை விழப்புகுகின்றேனை மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே" என்பதனால் முத்தியிலக் கணம் புலப்படுதல் காண்க. 10
998 13 திருவாசக ஆராய்ச்சியுரை ' ' தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில் ஒல்லனல் கொளுவி ஒருநொடி வில்லொன்று வளைத்த வீரம் போற்றி ' ' பொடிபட 11 - ந் திருமுறை கோயில் நான் . 40-14-6 என வருவனவற்றாலுமறிக . இறைவனது வெகுளித்தீயே முப்புரங்களை அழித்தது என்க . மெய்ந்நெறி - உண்மை நெறிப்பயனாகவுள்ள இறைவன் . இனி மெய்ந்நெறியாகிய வீடு பேற்றினை அருள்பவன் எனப் பொருள் கொள்ளுதலுமுண்டு . மெய்ந்நெறி மேவிய வெந்நரகத்தி லழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத முதலானை சுந் . 40-10 ' ' அமரர்க் கருளிய மெய்ந்நெறி ' திருமந் . 34 என வருவனவுங் காண்க . மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடு செந்தீ அருளும் மெய்ந்நெறி என்றது முப்புரங்களை அழித்தற் பொருட்டுத் தேவர்கள் தைத்து விடுத்த தேரினை அவர்கள் உள்ளக் குறிப்பினை உணர்ந்து அச்சு முறியும் வண்ணம் சினந்து திருவடியை வைத்துச் சினமாகிய தீயை முப்புரங்களில் செலுத்தியதெனவும் உரைக்கலாம் . தச்சு விடுத்தலுந் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற என வருதல் காண்க . பொய்ந்நெறி என்றது சிறு குடிலைப் பொரு ளெனக் கருதுதல் . இதன் கண் ' அருநரகத்திடை விழப்புகுகின்றேனை மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே என்பதனால் முத்தியிலக் கணம் புலப்படுதல் காண்க . 10