திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

புணர்ச்சிப்பத்து சாரமாட்டாத் தன்னை என்றது இறைவனது அருமையை உணர்த்தி நின்றது. "சரிய மாலொடு நான்முகன் காண்பதற் கரியராகி நின் றார்" (தே. அப்பர் 121-9) என்பது காண்க. என் அமுதை மணியை என உரிமை கூறியது தாம் இறைவனால் ஆட்கொள்ளப்பட் டமை பற்றியாகும். என் 1001 அடங்கி புடைப்பட்டிருத்தல் - இறைவனிற் கலந்து அவன் வியாபகத்துள் விரிவடைந்திருத்தல். இப்பதிகம் அத்துவித இலக்கணம் உரைத்தலின் புடைபட்டிருப்பது என்பதற்குப் பக்கத்திற் பொருந்தி யிருப்பது எனப் பொருள் கொள்ளல் பொருந்தாதென்க. புடைபடு தல் - விரிவடைதல், மிகுதியாதல் என்னும் பொருட்டாதலை, "பொருளதிகாரம் வல்லாரை யாண்டும் காணாமையின் அரசன் புடை படக் கவன்று' என இறையனார் களவியலுரைபில் (முதல் சூத். உரை) வருதலான் அறிக. என்று கொல்லோ என்பதில் ஓகாரம் எந்நாள் வாய்க்குமோ என அவாவுதலைக் குறிப்பதாய் அதனை விரைவில் அருள வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்வதாக அமைந்துள்ளது. 700 இதன் கண், "என் பொல்லாமணியைப் புணர்ந்து புடைப்பட்டிருப் பது என்று கொல்லோ" என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 1 437 அற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்தைம் புலனாய சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து சிவனெம் பெருமா னென்றேத்தி ஊற்று மணற்போ னெக்குறெக் குள்ளே உருகி யோல மிட்டுப் போற்றி நிற்ப தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. சிந்தை ப-ரை. அரசே அடியேன் ஆற்றகில்லேன் - இறைவனே நின் அடியவனாகிய யான் இவ்வுலக வாழ்க்கையைப் பொறுக்கும் ஆற்ற லுடையேனல்லேன், அவனி தலத்து ஐம்புலனாய சேற்றில் அழுந்தா செய்து - பூலோகத்தில் ஐம்புலன்களாகிய சேற்றின்கண் அழுந்திவிடாமல் நின்னைத் தியானித்து, சிவன் எம்பெருமான் என்று ஏத்தி - சிவனே எம்பெருமானே என்று நின்னைத் தியானித்து, ஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உள் உருகி - நீரூற்றினையுடைய மணலைப் போல உள்ளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பினால் உருகி, ஓலம் இட்டு அடைக்கலம் வேண்டி அழைத்து, போற்றி - வணங்கி, என் பொல்லா மணியை புணர்ந்து நிற்பது என்று கொல்லோ - என்னுடைய துளைக் கப்படாத மாணிக்கம் போன்ற நின்னைக் கலந்து அத்துவிதமாக நிற் பது எந்நாளோ?
புணர்ச்சிப்பத்து சாரமாட்டாத் தன்னை என்றது இறைவனது அருமையை உணர்த்தி நின்றது . சரிய மாலொடு நான்முகன் காண்பதற் கரியராகி நின் றார் ( தே . அப்பர் 121-9 ) என்பது காண்க . என் அமுதை மணியை என உரிமை கூறியது தாம் இறைவனால் ஆட்கொள்ளப்பட் டமை பற்றியாகும் . என் 1001 அடங்கி புடைப்பட்டிருத்தல் - இறைவனிற் கலந்து அவன் வியாபகத்துள் விரிவடைந்திருத்தல் . இப்பதிகம் அத்துவித இலக்கணம் உரைத்தலின் புடைபட்டிருப்பது என்பதற்குப் பக்கத்திற் பொருந்தி யிருப்பது எனப் பொருள் கொள்ளல் பொருந்தாதென்க . புடைபடு தல் - விரிவடைதல் மிகுதியாதல் என்னும் பொருட்டாதலை பொருளதிகாரம் வல்லாரை யாண்டும் காணாமையின் அரசன் புடை படக் கவன்று ' என இறையனார் களவியலுரைபில் ( முதல் சூத் . உரை ) வருதலான் அறிக . என்று கொல்லோ என்பதில் ஓகாரம் எந்நாள் வாய்க்குமோ என அவாவுதலைக் குறிப்பதாய் அதனை விரைவில் அருள வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்வதாக அமைந்துள்ளது . 700 இதன் கண் என் பொல்லாமணியைப் புணர்ந்து புடைப்பட்டிருப் பது என்று கொல்லோ என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 1 437 அற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்தைம் புலனாய சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து சிவனெம் பெருமா னென்றேத்தி ஊற்று மணற்போ னெக்குறெக் குள்ளே உருகி யோல மிட்டுப் போற்றி நிற்ப தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே . சிந்தை - ரை . அரசே அடியேன் ஆற்றகில்லேன் - இறைவனே நின் அடியவனாகிய யான் இவ்வுலக வாழ்க்கையைப் பொறுக்கும் ஆற்ற லுடையேனல்லேன் அவனி தலத்து ஐம்புலனாய சேற்றில் அழுந்தா செய்து - பூலோகத்தில் ஐம்புலன்களாகிய சேற்றின்கண் அழுந்திவிடாமல் நின்னைத் தியானித்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி - சிவனே எம்பெருமானே என்று நின்னைத் தியானித்து ஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உள் உருகி - நீரூற்றினையுடைய மணலைப் போல உள்ளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பினால் உருகி ஓலம் இட்டு அடைக்கலம் வேண்டி அழைத்து போற்றி - வணங்கி என் பொல்லா மணியை புணர்ந்து நிற்பது என்று கொல்லோ - என்னுடைய துளைக் கப்படாத மாணிக்கம் போன்ற நின்னைக் கலந்து அத்துவிதமாக நிற் பது எந்நாளோ ?