திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்து காணமாட்டா அம்மான்" (புணர்ச்சி 5 ) 504 ''வாவிங்கே குயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஓவி யவருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி மேவி அன்றண்டங் கடந்து விரிசுடராய் நின்ற மெய்யன்” (குயிற் 8) "எல்லை நான்முகன் மாலறியாக் கடனாமுருவத்தரன்" (திருக்கோவை 77) என அடிகளும், "விளவார் கனிபட நூறிய கடல்வண்ணனும் வேதக் கிளர்தாமரை மலர்மே லுறை கேடில் புகழோனும் அளவா வணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்" (ஞான 10-9) என ஆளுடைய பிள்ளையாரும் அருளியமை காண்க. நான்முகனும் என்றதில் உம்மை மாலுக்கும் கூட்டப்பட்டது. அறியா காணா என்பன ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் உம் ஈறுகெட்ட போல் என்னும் ஒப்பில் போலி தகுதியின்மை தோன்ற நின்றது. பொக்கம்- பொய். இதனை “பொக்கமும் பிசிய நடலையும் பொய்யே" என்னும் பிங்கலந்தையாலும் (7-131) அறிக. பொக்கங்களே பேசும் வாய் என இயையும். கடை திறவாமையா லும் சிவனே சிவனே என்று ஓலமிடினும் உணராமையாலும் நாம் போலறிவோம் என்பது பொக்கமாயிற்று. ஏகாரம் பிரிநிலை. பாலையும் தேனையும் மொழியின் இனிமைக்கு உவமை கூறல், "பாலொத்தனைய மொழிய ள்' (ஞான-தே.-70 -2) தேனெத்தன மென்மொழி மான்விழியாள் (ஞான-தே.70-1) எனவும், "தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றெனக் கானமர் கோதை கனாமொழி கின்றாள் >> என வருவனவற்றாலும் அறிக. (சீவக. 222) படிறீ - வஞ்சகீ, படிறு- வஞ்சனை, படிறு குய்யம் பகர்வ வஞ் சனை' என்பது திவாகரம் (பண்பு). பணிவுடைமை தோன்ற இனிமை யாகப் பேசுதலின் இவளிடத்துக் கடை திறவாமையும் துயிலெழா மையுமாகிய முரண்பட்ட செயல்கள் உளவாதலின் படிறீ" என் றார். முன்னர் கூறியவாறு நாங்கள் வந்தபோது புறவாயிற் கதவை யாவது திறக்கின்றாயில்லை என்பார், 'கடை திறவாய்' என்றார்.
திருவாசக ஆராய்ச்சியுரை திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்து காணமாட்டா அம்மான் ( புணர்ச்சி 5 ) 504 ' ' வாவிங்கே குயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஓவி யவருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி மேவி அன்றண்டங் கடந்து விரிசுடராய் நின்ற மெய்யன் ( குயிற் 8 ) எல்லை நான்முகன் மாலறியாக் கடனாமுருவத்தரன் ( திருக்கோவை 77 ) என அடிகளும் விளவார் கனிபட நூறிய கடல்வண்ணனும் வேதக் கிளர்தாமரை மலர்மே லுறை கேடில் புகழோனும் அளவா வணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல் ( ஞான 10-9 ) என ஆளுடைய பிள்ளையாரும் அருளியமை காண்க . நான்முகனும் என்றதில் உம்மை மாலுக்கும் கூட்டப்பட்டது . அறியா காணா என்பன ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் உம் ஈறுகெட்ட போல் என்னும் ஒப்பில் போலி தகுதியின்மை தோன்ற நின்றது . பொக்கம்- பொய் . இதனை பொக்கமும் பிசிய நடலையும் பொய்யே என்னும் பிங்கலந்தையாலும் ( 7-131 ) அறிக . பொக்கங்களே பேசும் வாய் என இயையும் . கடை திறவாமையா லும் சிவனே சிவனே என்று ஓலமிடினும் உணராமையாலும் நாம் போலறிவோம் என்பது பொக்கமாயிற்று . ஏகாரம் பிரிநிலை . பாலையும் தேனையும் மொழியின் இனிமைக்கு உவமை கூறல் பாலொத்தனைய மொழிய ள் ' ( ஞான - தே . - 70 -2 ) தேனெத்தன மென்மொழி மான்விழியாள் ( ஞான - தே.70-1 ) எனவும் தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றெனக் கானமர் கோதை கனாமொழி கின்றாள் >> என வருவனவற்றாலும் அறிக . ( சீவக . 222 ) படிறீ - வஞ்சகீ படிறு- வஞ்சனை படிறு குய்யம் பகர்வ வஞ் சனை ' என்பது திவாகரம் ( பண்பு ) . பணிவுடைமை தோன்ற இனிமை யாகப் பேசுதலின் இவளிடத்துக் கடை திறவாமையும் துயிலெழா மையுமாகிய முரண்பட்ட செயல்கள் உளவாதலின் படிறீ என் றார் . முன்னர் கூறியவாறு நாங்கள் வந்தபோது புறவாயிற் கதவை யாவது திறக்கின்றாயில்லை என்பார் ' கடை திறவாய் ' என்றார் .