திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1001 439 திருவாசக ஆராய்ச்சியுரை அல்லிக் கமலத் தயனு மாலும் அல்லா தவரும் அமரர்கோனும் சொல்லிப் பரவு நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்தசுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை ina நிறையின் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. ப-ரை. அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் - அகவிதழ்களையுடைய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் மற்றைத் தேவரும் தேவர் அரசனும், சொல்லி பரவும் நாமத்தானை - புகழ்ந்து கூறித் துதிக்கின்ற திருநாமத்தை யுடையவனை, சொல்லும் பொருளும் இறந்த சுடரை - சத்தப்பிரபஞ் சத்தையும் அர்த்தப் பிரபஞ்சத்தையும் கடந்து வியாபித்த ஒளிவடிவி னனை, நெல்லிக் கனியை - அடியவர்களுக்கு அங்கை நெல்லிக்கனியைப் போல வெளிப்பட்டுதவுபவனை, தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை - தேனையும் பாலையும் போல இனிமை செய்பவனை சுவை நிறைந்த இனிய அமுதம் போலவும் அமுதின் சுவையைப் போல வும் நன்மை செய்பவனை, பொல்லாமணியை - குற்றமில்லாத மாணிக் கம் போல்வானை, புணர்ந்து புல்லி புணர்வது என்று கொல் - கலந்து தழுவி அத்துவிதமாகக் கலந்து நிற்பது எந்நாளோ? பிரமனும் திருமாலும் மற்றைத் தேவரும் இந்திரனும் புகழ்ந்து துதிக்கின்ற திருநாமங்களையுடையவனும், சொல்லும் பொருளும் கடந்த ஒளிவடிவினனும், அடியவர்களுக்கு நெல்லிக்கனியைப் போல வெளிப்பட்டு உதவுபவனும், தேனையும் பாலையும் போல இனிமை செய் பவனும், அமுது போலவும் அமுதின் சுவை போலவும் நன்மை செய்ப வனும், மாணிக்க மணி போல்வானுமாகிய இறைவனைப் புல்லிப் புணர்வது எந்நாள் என்பதாம். QUE அல்லி - அகவிதழ் அல்லாதவர் என்பதற்குப் பிறர் எனினுமமை யும். அங்ஙனம் உரைக்குங்கால் கோனும் என்பதிலுள்ள உம்மையை அமரர் என்பதனோடும் இயைத்துப் பொருள் கொள்க. சொல்லிப் பர வுதல் - புகழ்களைக் கூறித் துதித்தல் சொல்லும் பொருளும் என்றது மாயையின் தோற்றமாகிய ஒலி வடிவ உலகமாகிய சத்தப் பிரபஞ்ச உலகத்தையும் பொருள்வடிவ உலகமாகிய அர்த்தப் பிரபஞ்சத்தையு மாகும். நெல்லிக் சனியை என்றது இறைவன் அடியார்களுக்கு அங்கை நெல்லிக்கனியைப் போல வெளிப்பட்டருளும் தன்மை பற்றியாகும்.
1001 439 திருவாசக ஆராய்ச்சியுரை அல்லிக் கமலத் தயனு மாலும் அல்லா தவரும் அமரர்கோனும் சொல்லிப் பரவு நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்தசுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை ina நிறையின் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே . - ரை . அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் - அகவிதழ்களையுடைய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் மற்றைத் தேவரும் தேவர் அரசனும் சொல்லி பரவும் நாமத்தானை - புகழ்ந்து கூறித் துதிக்கின்ற திருநாமத்தை யுடையவனை சொல்லும் பொருளும் இறந்த சுடரை - சத்தப்பிரபஞ் சத்தையும் அர்த்தப் பிரபஞ்சத்தையும் கடந்து வியாபித்த ஒளிவடிவி னனை நெல்லிக் கனியை - அடியவர்களுக்கு அங்கை நெல்லிக்கனியைப் போல வெளிப்பட்டுதவுபவனை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை - தேனையும் பாலையும் போல இனிமை செய்பவனை சுவை நிறைந்த இனிய அமுதம் போலவும் அமுதின் சுவையைப் போல வும் நன்மை செய்பவனை பொல்லாமணியை - குற்றமில்லாத மாணிக் கம் போல்வானை புணர்ந்து புல்லி புணர்வது என்று கொல் - கலந்து தழுவி அத்துவிதமாகக் கலந்து நிற்பது எந்நாளோ ? பிரமனும் திருமாலும் மற்றைத் தேவரும் இந்திரனும் புகழ்ந்து துதிக்கின்ற திருநாமங்களையுடையவனும் சொல்லும் பொருளும் கடந்த ஒளிவடிவினனும் அடியவர்களுக்கு நெல்லிக்கனியைப் போல வெளிப்பட்டு உதவுபவனும் தேனையும் பாலையும் போல இனிமை செய் பவனும் அமுது போலவும் அமுதின் சுவை போலவும் நன்மை செய்ப வனும் மாணிக்க மணி போல்வானுமாகிய இறைவனைப் புல்லிப் புணர்வது எந்நாள் என்பதாம் . QUE அல்லி - அகவிதழ் அல்லாதவர் என்பதற்குப் பிறர் எனினுமமை யும் . அங்ஙனம் உரைக்குங்கால் கோனும் என்பதிலுள்ள உம்மையை அமரர் என்பதனோடும் இயைத்துப் பொருள் கொள்க . சொல்லிப் பர வுதல் - புகழ்களைக் கூறித் துதித்தல் சொல்லும் பொருளும் என்றது மாயையின் தோற்றமாகிய ஒலி வடிவ உலகமாகிய சத்தப் பிரபஞ்ச உலகத்தையும் பொருள்வடிவ உலகமாகிய அர்த்தப் பிரபஞ்சத்தையு மாகும் . நெல்லிக் சனியை என்றது இறைவன் அடியார்களுக்கு அங்கை நெல்லிக்கனியைப் போல வெளிப்பட்டருளும் தன்மை பற்றியாகும் .