திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

புணர்ச்சிப்பத்து "தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்" என இத்திருவாசகத்தும், "சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே'' "அங்கை நெல்லிபின் பழத்தி டை யமுதே" எனத் தேவாரத்தும், *'மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்குஞ் சுத்தனை" எனத் திருமந்திரத்தும், "மன்றிடைத் தோன்றிய நெல்லிக்கனி நிற்ப" எனப் பொன்வண்ணத் தந்தாதியிலும், "செய்ய வேலவன் துரந்துவந் திடுந்தினைத் துணையில் கையில் நெல்லிபோற் காட்டுவன் நீவிருங் காண்டீர்" அண்ட. 162 1005 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்னும் திருக்குறளினும் அதன் உரையினுங் காண்க. சுந். 4-3 சுந். 54-3 440 திகழத் திகழும் அடியும் முடியும் (2992) எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க. தேனைப் பாலை என்றது இறைவன் இனிமை செய்யும் தன்மை பற்றியாகும். 'கன்னலும் பாலும் தேனு மாரமுதுங் கனியுமா யினியை யாயினையே'' எனத் திருவிசைப்பாவில் (திருமுகத்தலை. 8) வருதலுங் காண்க. காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் (74) சூரன் வதை.283 அமுதை அமுதின் சுவையை என்றது அமுதுண்டார் நரை திரை மூப்புச் சாக்காடு இன்றி இன்புற்று இருத்தல் போல, தன்னை அடைந்த தகுதியுடைய உயிர்களுக்கு மீளத் திரும்புதலில்லாத வீட்டினையும் இன்பத்தினையும் தருதல் பற்றியாகும். பொல்லாமணியைப் புணர்ந்து புல்லிப் புணர்வது என்றது இறை வனைக் கலந்து பற்றி இடைவிடாது அத்துவித பாவனை செய்வது என்ற வாறு. இக்கருத்தினை, இதன்கண் "என் பொல்லா மணியைப் புணர்ந்து புல்லிப் புணர் வது என்று கொல்லோ" என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 4
புணர்ச்சிப்பத்து தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் என இத்திருவாசகத்தும் சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே ' ' அங்கை நெல்லிபின் பழத்தி டை யமுதே எனத் தேவாரத்தும் * ' மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்குஞ் சுத்தனை எனத் திருமந்திரத்தும் மன்றிடைத் தோன்றிய நெல்லிக்கனி நிற்ப எனப் பொன்வண்ணத் தந்தாதியிலும் செய்ய வேலவன் துரந்துவந் திடுந்தினைத் துணையில் கையில் நெல்லிபோற் காட்டுவன் நீவிருங் காண்டீர் அண்ட . 162 1005 ' பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்னும் திருக்குறளினும் அதன் உரையினுங் காண்க . சுந் . 4-3 சுந் . 54-3 440 திகழத் திகழும் அடியும் முடியும் ( 2992 ) எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க . தேனைப் பாலை என்றது இறைவன் இனிமை செய்யும் தன்மை பற்றியாகும் . ' கன்னலும் பாலும் தேனு மாரமுதுங் கனியுமா யினியை யாயினையே ' ' எனத் திருவிசைப்பாவில் ( திருமுகத்தலை . 8 ) வருதலுங் காண்க . காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் ( 74 ) சூரன் வதை .283 அமுதை அமுதின் சுவையை என்றது அமுதுண்டார் நரை திரை மூப்புச் சாக்காடு இன்றி இன்புற்று இருத்தல் போல தன்னை அடைந்த தகுதியுடைய உயிர்களுக்கு மீளத் திரும்புதலில்லாத வீட்டினையும் இன்பத்தினையும் தருதல் பற்றியாகும் . பொல்லாமணியைப் புணர்ந்து புல்லிப் புணர்வது என்றது இறை வனைக் கலந்து பற்றி இடைவிடாது அத்துவித பாவனை செய்வது என்ற வாறு . இக்கருத்தினை இதன்கண் என் பொல்லா மணியைப் புணர்ந்து புல்லிப் புணர் வது என்று கொல்லோ என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 4