திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

புணர்ச்சிப்பத்து கனையக் கண்ணீ ரருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற் புனையப் பெறுவ தென்று கொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. 1009 ப-ரை. பிறருக்கு நினைய அரிய - நின் அருள்வழி நிற்கும் அன்ப ரல்லாதார்க்கு நினைத்தற்கு அரிய, நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை - நெருப்பு நீர் காற்று நிலன் வான் என்னும் ஐம்பூதங்களி லும் வியாபித்துள்ளவனை, தனை ஒப்பாரை இல்லா தனியை - தன்னை என் பொல்லா ஒப்பவரை இல்லாத ஒரு பொருளாயுள்ளவனை, மணியை - என்னுடைய குற்றமில்லாத மாணிக்கம் போன்ற இறை வனை, நோக்கி தழைத்து தழுத்த கண்டம் கனைய - தரிசித்து உடல் பூரித்துத் துதித்தலினாலே தழுதழுத்த மிடறு கனைப்புற, கண்ணீர் அருவி பாய - கண்ணீரானது அருவி போலப் பாயா நிற்ப, கையும் கூப்பி - கைகளையும் சிரசிற் குவித்து, கடிமலரால் புனைந்து புணரப் பெறுவது என்று கொல்லோ - நறுமணமுள்ள பூக்களால் அலங்கரித் துக் கலக்கப்பெறுவது எந்நாளோ? அன்பரல்லாதார்க்கு நினைத்தற்கு அரியவனும், ஐம்பெரும் பூதங் களிலும் வியாபித்து உள்ளவனும், தன்னை ஒப்பாரை இல்லாத தனியா யுள்ளவனும், பொல்லாமணியைப் போல்வானுமாகிய இறைவனைத் தரிசித்துத் தழைத்து, துதித்தலினாலே தழுதழுத்த கண்டம் கனைப் புறக் கண்ணீர் அருவி பாயக் கைகளைச் சிரசிற் குவித்துக் கடிமலராற் புனைந்து புணரப்பெறுவது எந்நாளோ என்பதாம். நினையப்பிறருக்கு அரிய என்றது யாவராயினும் அன்பரன்றிப் பிறர் அறியொணாமையைக் குறித்தது. செய்யுளாதலின் ஐம்பூதங்களை நெருப்பு முதலாகப் பிறழக் கூறினார். இறைவன் ஐம்பூதங்களிலும் வியாபித்து நிற்றல் பற்றி 'நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பை' என்றார். தனை ஒப்பார் இல்லாமையின் இறைவனைத் 'தனியை" என் றார். இறைவன் தன்னை ஒப்பாரை இல்லாதவன் என்பது, மற்றாருந் தன் னொப்பார் இல்லாதானை" "ஓபொருவர் இல்லாத ஒருவன்" “தன்னானைத் தன் னொப்பாரில்லாதானை " ''இணையொருவர் தாமல்லால் யாருமில்லார்" 214-2 246-9 259-2 296-7 என வரூஉம் அப்பர் அருள் மொழிகளாலும் அறிக. ஒப்பாரை என் னும் இரண்டாம் வேற்றுமையை இல்லாதவன் என்னும் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றோடு முடிக்க. தழுதழுத்த கண்டம் - தழுத்த கண் டம் என நின்றது. கண்டங்கனையப் பெறுவது என்றது துதித்தலினாலே தழுதழுத்த கண்டம் உரை குளறப் பெறுவது என்றவாறு. பொல்லா 94
புணர்ச்சிப்பத்து கனையக் கண்ணீ ரருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற் புனையப் பெறுவ தென்று கொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே . 1009 - ரை . பிறருக்கு நினைய அரிய - நின் அருள்வழி நிற்கும் அன்ப ரல்லாதார்க்கு நினைத்தற்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை - நெருப்பு நீர் காற்று நிலன் வான் என்னும் ஐம்பூதங்களி லும் வியாபித்துள்ளவனை தனை ஒப்பாரை இல்லா தனியை - தன்னை என் பொல்லா ஒப்பவரை இல்லாத ஒரு பொருளாயுள்ளவனை மணியை - என்னுடைய குற்றமில்லாத மாணிக்கம் போன்ற இறை வனை நோக்கி தழைத்து தழுத்த கண்டம் கனைய - தரிசித்து உடல் பூரித்துத் துதித்தலினாலே தழுதழுத்த மிடறு கனைப்புற கண்ணீர் அருவி பாய - கண்ணீரானது அருவி போலப் பாயா நிற்ப கையும் கூப்பி - கைகளையும் சிரசிற் குவித்து கடிமலரால் புனைந்து புணரப் பெறுவது என்று கொல்லோ - நறுமணமுள்ள பூக்களால் அலங்கரித் துக் கலக்கப்பெறுவது எந்நாளோ ? அன்பரல்லாதார்க்கு நினைத்தற்கு அரியவனும் ஐம்பெரும் பூதங் களிலும் வியாபித்து உள்ளவனும் தன்னை ஒப்பாரை இல்லாத தனியா யுள்ளவனும் பொல்லாமணியைப் போல்வானுமாகிய இறைவனைத் தரிசித்துத் தழைத்து துதித்தலினாலே தழுதழுத்த கண்டம் கனைப் புறக் கண்ணீர் அருவி பாயக் கைகளைச் சிரசிற் குவித்துக் கடிமலராற் புனைந்து புணரப்பெறுவது எந்நாளோ என்பதாம் . நினையப்பிறருக்கு அரிய என்றது யாவராயினும் அன்பரன்றிப் பிறர் அறியொணாமையைக் குறித்தது . செய்யுளாதலின் ஐம்பூதங்களை நெருப்பு முதலாகப் பிறழக் கூறினார் . இறைவன் ஐம்பூதங்களிலும் வியாபித்து நிற்றல் பற்றி ' நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பை ' என்றார் . தனை ஒப்பார் இல்லாமையின் இறைவனைத் ' தனியை என் றார் . இறைவன் தன்னை ஒப்பாரை இல்லாதவன் என்பது மற்றாருந் தன் னொப்பார் இல்லாதானை ஓபொருவர் இல்லாத ஒருவன் தன்னானைத் தன் னொப்பாரில்லாதானை ' ' இணையொருவர் தாமல்லால் யாருமில்லார் 214-2 246-9 259-2 296-7 என வரூஉம் அப்பர் அருள் மொழிகளாலும் அறிக . ஒப்பாரை என் னும் இரண்டாம் வேற்றுமையை இல்லாதவன் என்னும் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றோடு முடிக்க . தழுதழுத்த கண்டம் - தழுத்த கண் டம் என நின்றது . கண்டங்கனையப் பெறுவது என்றது துதித்தலினாலே தழுதழுத்த கண்டம் உரை குளறப் பெறுவது என்றவாறு . பொல்லா 94