திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பெருதேன் பில்க எப்போதும் ஏது ஆம் மணியே - மிக்க தேனினது இனிமை போன்ற பேரின்பம் உண்டாதற்கு நிமித்தகாரணமாக வுள்ள மாணிக்கம் போன்றவனே, என்று என்று இரவும் பகலும் ஏத்தி - என்று இங்ஙனம் பலபடக் கூறி இரவும் பகலும் இடை விடாது துதித்து, என் பொல்லா மணியை புணர்ந்து - என் குற்ற மில்லாத மாணிக்க மணி போன்ற இறைவனைக் கலந்து, எழில் ஆர் பாதம் போது ஆய்ந்து அணைவது என்று கொல்லோ - அழகு நிறைந்த திருவடி மலர்களை மெய் அறிவினால் ஆராய்ந்து சார்வது எந்நாளோ? மறும் 1012 மூவேழ் உலகுக்கும் தந்தையாயுள்ளவனே, தாயாயுள்ளவனே. நாயேன் தனையாண்ட பேதாய், பிறவிப் பிணிக்கோர் மருந்தே, எப் போதும் பெருந் தேனினது இனிமை போன்ற பேரின்பம் உண்டா தற்கு நிமித்தகாரணமாயுள்ள மாணிக்கம் போன்றவனே, என்று என்று இரவும் பகலும் ஏத்தி என் பொல்லா மணியைப் புணர்ந்து திருவடி மலரை அணைவது எந்நாளோ என்பதாம் மூ - மூப்பு; பழமை. பழமையுடைய உலகு என இயையும். இனி மூ எழு என்பது மூவேழு என நீண்டது எனக் கொண்டு, சுவர்க் கம், மத்திமம் பாதாளம் என மூன்று வகையாய் எழுந்த உலகம் எனக் கொள்ளினும் அமையும். தன்னுள் அடங்கிய மாயையினின்றும் உலகங்களைத் தோற்றுவித்தலின் இறைவன் உலகத்திற்குத் தந்தை யும் தாயும் எனக் கூறப்பட்டான். தாதை - தாதாய் என விளியுருபேற் றது. பேதை - பெண்; திருவருட் சத்தி. இது இங்கே, என்னை இரங்கி ஆட்கொள்ளுதற்கு ஏதுவாக என்பாற் பதிந்த திருவருட் சத்தியை யுடைய இறைவனைக் குறித்தது. இதற்கு. பக்குவகாலம் வருமுன் னர் என்னை ஆட்கொண்ட அறிவு குறைந்தவனே எனப் பொரு ளுரைப்பது இறைவன் பெருமைக் குணத்திற்கு இழுக்காகுமென்க. பெருந்தேன் பில்க ஏதாம் மணியே என்றது மிக்க தேனினது இனிமைபோன்ற பேரின்பம் உண்டாதற்கு நிமித்தகாரணமாயுள்ள மரணிக்கமணி போன்ற இறைவனே என்றவாறு. ஏது - காரணம். இங்கு நிமித்தகாரணத்தைக் குறித்தது. ஏது ஆம் மணியே என்பதற்கு ஏதும் ஆம் மணியே என உம்மை விரித்து எவ்வித நலமும் ஆதற் குக் காரணமாகிய மாணிக்கமே எனப் பொருள் உரைப்பினுமமை யும். மேதாமணியே எனப் பாடங்கொள்ளின் மோனை இலதாகும் பாதப்போது ஆய்தல் - மெய்யறிவினால் திருவடி மலரைப்பற்றி இடை விடாது அத்துவித பாவனை பண்ணுதல். இதன் கண் 'என் பொல்லா மணியைப் புணர்ந்து எழிலார் பாதப் போது ஆய்ந்தணைவது என்று கொல்லோ' என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க.ல 9
திருவாசக ஆராய்ச்சியுரை பெருதேன் பில்க எப்போதும் ஏது ஆம் மணியே - மிக்க தேனினது இனிமை போன்ற பேரின்பம் உண்டாதற்கு நிமித்தகாரணமாக வுள்ள மாணிக்கம் போன்றவனே என்று என்று இரவும் பகலும் ஏத்தி - என்று இங்ஙனம் பலபடக் கூறி இரவும் பகலும் இடை விடாது துதித்து என் பொல்லா மணியை புணர்ந்து - என் குற்ற மில்லாத மாணிக்க மணி போன்ற இறைவனைக் கலந்து எழில் ஆர் பாதம் போது ஆய்ந்து அணைவது என்று கொல்லோ - அழகு நிறைந்த திருவடி மலர்களை மெய் அறிவினால் ஆராய்ந்து சார்வது எந்நாளோ ? மறும் 1012 மூவேழ் உலகுக்கும் தந்தையாயுள்ளவனே தாயாயுள்ளவனே . நாயேன் தனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே எப் போதும் பெருந் தேனினது இனிமை போன்ற பேரின்பம் உண்டா தற்கு நிமித்தகாரணமாயுள்ள மாணிக்கம் போன்றவனே என்று என்று இரவும் பகலும் ஏத்தி என் பொல்லா மணியைப் புணர்ந்து திருவடி மலரை அணைவது எந்நாளோ என்பதாம் மூ - மூப்பு ; பழமை . பழமையுடைய உலகு என இயையும் . இனி மூ எழு என்பது மூவேழு என நீண்டது எனக் கொண்டு சுவர்க் கம் மத்திமம் பாதாளம் என மூன்று வகையாய் எழுந்த உலகம் எனக் கொள்ளினும் அமையும் . தன்னுள் அடங்கிய மாயையினின்றும் உலகங்களைத் தோற்றுவித்தலின் இறைவன் உலகத்திற்குத் தந்தை யும் தாயும் எனக் கூறப்பட்டான் . தாதை - தாதாய் என விளியுருபேற் றது . பேதை - பெண் ; திருவருட் சத்தி . இது இங்கே என்னை இரங்கி ஆட்கொள்ளுதற்கு ஏதுவாக என்பாற் பதிந்த திருவருட் சத்தியை யுடைய இறைவனைக் குறித்தது . இதற்கு . பக்குவகாலம் வருமுன் னர் என்னை ஆட்கொண்ட அறிவு குறைந்தவனே எனப் பொரு ளுரைப்பது இறைவன் பெருமைக் குணத்திற்கு இழுக்காகுமென்க . பெருந்தேன் பில்க ஏதாம் மணியே என்றது மிக்க தேனினது இனிமைபோன்ற பேரின்பம் உண்டாதற்கு நிமித்தகாரணமாயுள்ள மரணிக்கமணி போன்ற இறைவனே என்றவாறு . ஏது - காரணம் . இங்கு நிமித்தகாரணத்தைக் குறித்தது . ஏது ஆம் மணியே என்பதற்கு ஏதும் ஆம் மணியே என உம்மை விரித்து எவ்வித நலமும் ஆதற் குக் காரணமாகிய மாணிக்கமே எனப் பொருள் உரைப்பினுமமை யும் . மேதாமணியே எனப் பாடங்கொள்ளின் மோனை இலதாகும் பாதப்போது ஆய்தல் - மெய்யறிவினால் திருவடி மலரைப்பற்றி இடை விடாது அத்துவித பாவனை பண்ணுதல் . இதன் கண் ' என் பொல்லா மணியைப் புணர்ந்து எழிலார் பாதப் போது ஆய்ந்தணைவது என்று கொல்லோ ' என்பதனால் அத்துவித இலக்கணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க.ல 9