திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

வாழாப்பத்து முத்தியுபாயம் திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது On goi திருவாதவூரடிகள் இறைவன் தம்மை ஆட்கொண்ட திருப்பெருந் துறையில் இதனை அருளிச் செய்தார். உலகில் வாழ்கிலேன் என்பதை இறைவன்பால் எடுத்துக்கூறும் பத்துப்பாடல்களையுடைய பதிகம் இதுவாகும். இதன் உள்ளுறை முத்தியுபாயம் என உள்ளது. வீடுபேற் றிற்குரிய காரணமாகிய உலகப் பற்றின்மையை உணர்த்துதல் என் பது இதன் பொருளாகும். இதனைத் திருவாசகச் சிறப்புடையார், "நீண்டவுல கத்தினிற்பற் றொன்றிலே னிவ்வுடற்க ணின்று வாழேன். மாண்ட குநின் பதநிழற்கீழ் வருகவருள் புரியெனுஞ்சொல் வாழாப் பத்தே' த" என்பர். இது எழுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம் எழுசீர்க் சழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 28. 446 பாரொடு விண்ணாய்ப் பரந்தவெம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே பாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ பருளிலை யானால் வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டான். வருகவென் றருள்புரி யாயே. usive Fo ப - ரை : பாரொடு விண்ணாய் பரந்த எம்பரனே - நிலமுதல் வான் ஈறாகவுள்ள உலகமுழுவதும் வியாபித்த எங்கள் மேலோனே; நான் மற்று பற்று இலேன் - யான் நின்பற்றன்றி வேறு உலகப்பற்று ஒன்றும் இல்லேன்; சீரொடு பொலிவாய் - மிக்க புகழொடு விளங்கு பவனே, சிவபுரத்து அரசே - சிவலோகத்து நாதனே, திருப்பெருந் துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெரு மானே. ஆண்ட நீ அருள் இலையானால் - என்னை ஆட்கொண்டருளிய நீ எனக்கு வீடு பேற்றினை அருளாதொழிகுவையாயின், யாரொடு நோகேன் - நின்னைத்தவிர வேறு யாரிடத்து என் துன்பத்தை எடுத் துரைப்பேன், ஆர்க்கு எடுத்து உரைப்பேன் யாரிடத்து என் குறை யினை எழுத்துச் சொல்வேன், வார் சடல் உலகில் வாழ்கிலேன்- நெடிய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில் வாழ்ந்திருக்கும் ஆற்றலுடையே னல்லேன்; ஆதலால், வருக என்று அருள் புரியாய் - இங்கே வருக என்று அழைத் தருள்வாயாக.
வாழாப்பத்து முத்தியுபாயம் திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது On goi திருவாதவூரடிகள் இறைவன் தம்மை ஆட்கொண்ட திருப்பெருந் துறையில் இதனை அருளிச் செய்தார் . உலகில் வாழ்கிலேன் என்பதை இறைவன்பால் எடுத்துக்கூறும் பத்துப்பாடல்களையுடைய பதிகம் இதுவாகும் . இதன் உள்ளுறை முத்தியுபாயம் என உள்ளது . வீடுபேற் றிற்குரிய காரணமாகிய உலகப் பற்றின்மையை உணர்த்துதல் என் பது இதன் பொருளாகும் . இதனைத் திருவாசகச் சிறப்புடையார் நீண்டவுல கத்தினிற்பற் றொன்றிலே னிவ்வுடற்க ணின்று வாழேன் . மாண்ட குநின் பதநிழற்கீழ் வருகவருள் புரியெனுஞ்சொல் வாழாப் பத்தே ' என்பர் . இது எழுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம் எழுசீர்க் சழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 28 . 446 பாரொடு விண்ணாய்ப் பரந்தவெம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே பாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ பருளிலை யானால் வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டான் . வருகவென் றருள்புரி யாயே . usive Fo - ரை : பாரொடு விண்ணாய் பரந்த எம்பரனே - நிலமுதல் வான் ஈறாகவுள்ள உலகமுழுவதும் வியாபித்த எங்கள் மேலோனே ; நான் மற்று பற்று இலேன் - யான் நின்பற்றன்றி வேறு உலகப்பற்று ஒன்றும் இல்லேன் ; சீரொடு பொலிவாய் - மிக்க புகழொடு விளங்கு பவனே சிவபுரத்து அரசே - சிவலோகத்து நாதனே திருப்பெருந் துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெரு மானே . ஆண்ட நீ அருள் இலையானால் - என்னை ஆட்கொண்டருளிய நீ எனக்கு வீடு பேற்றினை அருளாதொழிகுவையாயின் யாரொடு நோகேன் - நின்னைத்தவிர வேறு யாரிடத்து என் துன்பத்தை எடுத் துரைப்பேன் ஆர்க்கு எடுத்து உரைப்பேன் யாரிடத்து என் குறை யினை எழுத்துச் சொல்வேன் வார் சடல் உலகில் வாழ்கிலேன் நெடிய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில் வாழ்ந்திருக்கும் ஆற்றலுடையே னல்லேன் ; ஆதலால் வருக என்று அருள் புரியாய் - இங்கே வருக என்று அழைத் தருள்வாயாக .