திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

வாழாப்பத்து ப-ரை. வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே -தீவினையால் வஞ்சிக்கப்பட்டவனாகிய என்னை ஆட்கொண்டருளிய ஆசாரிய ரத்தி னமே, நான் மற்று பற்று இலேன் - நான் நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன், உம்பரும் அறியா ஒருவனே - தேவர் களும் அறியவொண்ணாத ஒப்பற்றவனே, இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் செம்பெருமானே - அயன் அரி என்னும் இருவ ருடைய அறிவுக்கும் அகப்படாது கடந்து எல்லாவுலகங்களையும் மேலும் கீழும் ஊடுருவிச் சென்ற செம்மையான திருமேனியையுடைய இறைவனே, சிவபுரத்து அரசே - சிவநகர்க்கு நாதனே, திருப்பெருந் துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெரு மானே, எம்பெருமானே - எங்கள் தலைவனே, என்னை ஆள்வானே- என்னைப் பணி கொள்ள வேண்டியவனே, என்னை நீ கூவிக்கொண்டு அருள் - என்னை நீ இங்கே வருக என அழைத்து அருள்வாயாக. 1017 வம்பனேன்தன்னை ஆட்கொண்டருளிய பெரிய குருமணியே. நான் மற்று பற்றுடையேனல்லேன்; உம்பரும் அறியா ஒருவனே, அயன் அரி என்னும் இருவரின் அறிவிற்கும் அகப்படாது கடந்து எல்லாவுலகங்களையும் ஊடுருவிச் சென்ற செம்மையான திருமேனியை யுடைய இறைவனே, சிலபுரத்தரசே, திருப்பெருந்துறையுறை சிவனே, எம்பெருமானே, என்னைப் பணி கொள்ள வேண்டியவனே, என்னை நீ கூவிக் கொண்டருள்வாயாக என்பதாம். வம்பனேன் றன்னை என்றது அடிகள் அணுக்கன் தொண்டராய் இருந்த காலத்து இறைவனைப் பிரிதற்கு ஏதுவாகச் செய்த தீவினையி னால் வஞ்சிக்கப்பட்ட என்னை என்றவாறு. வம்பு - வஞ்சனை. மாமணி மாணிக்கமாயினும் ஆண்ட என்ற விசேடணத்தால் பெரிய ஆசாரிய ரத்தினம் எனப் பொருள் கொள்ளப்பட்டது. உம்பூர்- தேவர். உம்மை - உயர்வு சிறப்பு. இருவரும் என்ற தொகைக் குறிப்புச் சொல் அயன் அரியை உணர்த்தியது. இருவர்க்கு என்னும் நான்காம் வேற் றுமையை அவர்கள் உணர்வோடு சேர்த்து இருவர் உணர்விற்கும் அறிய முடியாது எனக் கொள்க, உலகம் ஊடுருவியது, 'அடி முடியறி யும் ஆதரவதனில்' (போற்றி. 5) 'பார் விசும்பு ஊடுருவி வரம்பு அயன் மால் அறியாத் தில்லை வானவன்' (கோவை 251) இருவரும் தேடும் பொழுது அக்கினிப் பிழம்பாய் உலகங்களை ஊடுருவி நீண்டு சென்றமையைக் குறித்தது. வம்பனேன் தன்னை ஆண்ட மாமணியே என முன்னர்க் கூறிப் பின்னர் என்னை ஆள்வானே என்றது என்னை ஆண்டு பணி கொள்ள வேண்டியவன் நீயே என்னும் பொருள் தந்து நின்றது. வருகவென் றருள் புரியாய் என்பது 'என்னை நீ கூவிக் கொண்டருள்' என மற்ருெரு வகையால் இங்குக் கூறப்பட்டது. இதன் சண் "என்னை நீ கூவிக் கொண்டருள்" என்பதனால் முத்தி uடாயம் என்னும் பதிசப் பொருள் புலப்படுதல் காண்க. 2
வாழாப்பத்து - ரை . வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே -தீவினையால் வஞ்சிக்கப்பட்டவனாகிய என்னை ஆட்கொண்டருளிய ஆசாரிய ரத்தி னமே நான் மற்று பற்று இலேன் - நான் நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும் உடையேனல்லேன் உம்பரும் அறியா ஒருவனே - தேவர் களும் அறியவொண்ணாத ஒப்பற்றவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் செம்பெருமானே - அயன் அரி என்னும் இருவ ருடைய அறிவுக்கும் அகப்படாது கடந்து எல்லாவுலகங்களையும் மேலும் கீழும் ஊடுருவிச் சென்ற செம்மையான திருமேனியையுடைய இறைவனே சிவபுரத்து அரசே - சிவநகர்க்கு நாதனே திருப்பெருந் துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெரு மானே எம்பெருமானே - எங்கள் தலைவனே என்னை ஆள்வானே என்னைப் பணி கொள்ள வேண்டியவனே என்னை நீ கூவிக்கொண்டு அருள் - என்னை நீ இங்கே வருக என அழைத்து அருள்வாயாக . 1017 வம்பனேன்தன்னை ஆட்கொண்டருளிய பெரிய குருமணியே . நான் மற்று பற்றுடையேனல்லேன் ; உம்பரும் அறியா ஒருவனே அயன் அரி என்னும் இருவரின் அறிவிற்கும் அகப்படாது கடந்து எல்லாவுலகங்களையும் ஊடுருவிச் சென்ற செம்மையான திருமேனியை யுடைய இறைவனே சிலபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே என்னைப் பணி கொள்ள வேண்டியவனே என்னை நீ கூவிக் கொண்டருள்வாயாக என்பதாம் . வம்பனேன் றன்னை என்றது அடிகள் அணுக்கன் தொண்டராய் இருந்த காலத்து இறைவனைப் பிரிதற்கு ஏதுவாகச் செய்த தீவினையி னால் வஞ்சிக்கப்பட்ட என்னை என்றவாறு . வம்பு - வஞ்சனை . மாமணி மாணிக்கமாயினும் ஆண்ட என்ற விசேடணத்தால் பெரிய ஆசாரிய ரத்தினம் எனப் பொருள் கொள்ளப்பட்டது . உம்பூர்- தேவர் . உம்மை - உயர்வு சிறப்பு . இருவரும் என்ற தொகைக் குறிப்புச் சொல் அயன் அரியை உணர்த்தியது . இருவர்க்கு என்னும் நான்காம் வேற் றுமையை அவர்கள் உணர்வோடு சேர்த்து இருவர் உணர்விற்கும் அறிய முடியாது எனக் கொள்க உலகம் ஊடுருவியது ' அடி முடியறி யும் ஆதரவதனில் ' ( போற்றி . 5 ) ' பார் விசும்பு ஊடுருவி வரம்பு அயன் மால் அறியாத் தில்லை வானவன் ' ( கோவை 251 ) இருவரும் தேடும் பொழுது அக்கினிப் பிழம்பாய் உலகங்களை ஊடுருவி நீண்டு சென்றமையைக் குறித்தது . வம்பனேன் தன்னை ஆண்ட மாமணியே என முன்னர்க் கூறிப் பின்னர் என்னை ஆள்வானே என்றது என்னை ஆண்டு பணி கொள்ள வேண்டியவன் நீயே என்னும் பொருள் தந்து நின்றது . வருகவென் றருள் புரியாய் என்பது ' என்னை நீ கூவிக் கொண்டருள் ' என மற்ருெரு வகையால் இங்குக் கூறப்பட்டது . இதன் சண் என்னை நீ கூவிக் கொண்டருள் என்பதனால் முத்தி u டாயம் என்னும் பதிசப் பொருள் புலப்படுதல் காண்க . 2