திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

வாழாப்பத்து சிவபெரு. திருமும் 1 ''பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇ புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்" என இளம்பெருமானடிகளும் அருளியவாற்றானாமறிக. பாதமேயல்லால் நான் மற்றுப் பற்று இலன் எனக்கூட்டுக. "மற் றுப்பற்றெனக் கின்றி நின் றிருப்பாதமே மனம் பாவித்தேன்" (சுந். 48-1) என ஆளுடைய நம்பிகள் அருளியமையுங் காண்க. கண்டாய் - முன்னிலையசை. 1019 ஊடுதல் - அன்பிற்குரிய தலைவர் தன் விருப்பினை நிறைவேற்றி வையாமை பற்றி உண்டாகும் வெறுப்பு. இங்கே இறைவன் திருவடிப் பேறு அருளாமை பற்றி உண்டாயதாகும். உவப்பதும் உன்னை என்றது அங்ஙனம் ஊடினாலும் உவந்து ஏற் றுக் கொள்வதும் உன்னை என்றவாறு. அதனால் உனக்கு உணர்த்து வது எனக்கு உறுதி என்றார். ஊடுவது உன்னோடு என்றதனால் உணர்த்துதல் என்றது ஊடல் தீர்த்தலை. " உணர்த்த வேண்டிய கிழவோன்" (பொருள. 150) என் னும் தொல்காப்பியத்தும் இப்பொருட்டாதல் காண்க. உணர்த்து வது - ஊடலை நீக்கி அருள் செய்வது; என்றது, ஊடற்கேதுவாகிய திருவடிப் பேற்றை அருளாமையை விடுத்து உடனே அருள் செய்ய வேண்டும் என்றவாறு. இதன் கண் 'வருகவென் நருள் புரியாயே" என்றதனால் முத்தி உபாயம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 3 449 வல்லைவா னரக்கர் புரமெரித் தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர் காணுநா ளாதியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே. ப - ரை. வான் அரக்கர் புரம் வல்லை எரித்தானே -வானினை யுடைய அசுரர்களினது முப்புரங்களையும் விரைவில் அழித்தவனே, நான் மற்று பற்று இலேன் - நான் நின்பற்றன்றிப் பிறிதொரு பற்று டையேனல்லேன், தில்லை வாழ் கூத்தா- தில்லைத்திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் கூத்தப்பெருமானே, சிலபுரத்து அரசே - சிவ லோகநாதனே, திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்
வாழாப்பத்து சிவபெரு . திருமும் 1 ' ' பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇ புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் என இளம்பெருமானடிகளும் அருளியவாற்றானாமறிக . பாதமேயல்லால் நான் மற்றுப் பற்று இலன் எனக்கூட்டுக . மற் றுப்பற்றெனக் கின்றி நின் றிருப்பாதமே மனம் பாவித்தேன் ( சுந் . 48-1 ) என ஆளுடைய நம்பிகள் அருளியமையுங் காண்க . கண்டாய் - முன்னிலையசை . 1019 ஊடுதல் - அன்பிற்குரிய தலைவர் தன் விருப்பினை நிறைவேற்றி வையாமை பற்றி உண்டாகும் வெறுப்பு . இங்கே இறைவன் திருவடிப் பேறு அருளாமை பற்றி உண்டாயதாகும் . உவப்பதும் உன்னை என்றது அங்ஙனம் ஊடினாலும் உவந்து ஏற் றுக் கொள்வதும் உன்னை என்றவாறு . அதனால் உனக்கு உணர்த்து வது எனக்கு உறுதி என்றார் . ஊடுவது உன்னோடு என்றதனால் உணர்த்துதல் என்றது ஊடல் தீர்த்தலை . உணர்த்த வேண்டிய கிழவோன் ( பொருள . 150 ) என் னும் தொல்காப்பியத்தும் இப்பொருட்டாதல் காண்க . உணர்த்து வது - ஊடலை நீக்கி அருள் செய்வது ; என்றது ஊடற்கேதுவாகிய திருவடிப் பேற்றை அருளாமையை விடுத்து உடனே அருள் செய்ய வேண்டும் என்றவாறு . இதன் கண் ' வருகவென் நருள் புரியாயே என்றதனால் முத்தி உபாயம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 3 449 வல்லைவா னரக்கர் புரமெரித் தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர் காணுநா ளாதியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே . - ரை . வான் அரக்கர் புரம் வல்லை எரித்தானே -வானினை யுடைய அசுரர்களினது முப்புரங்களையும் விரைவில் அழித்தவனே நான் மற்று பற்று இலேன் - நான் நின்பற்றன்றிப் பிறிதொரு பற்று டையேனல்லேன் தில்லை வாழ் கூத்தா- தில்லைத்திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் கூத்தப்பெருமானே சிலபுரத்து அரசே - சிவ லோகநாதனே திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்