திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

506 திருவாசக ஆராய்ச்சியுரை இறைவன் கோதாட்டல்: 'கொங்கண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி' (திருவெம்.17) "அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு (பொன்னூ.6) "என்னைக் கோதுமாட்டிநின் குரைகழல் காட்டி (செத்திலாப்-8) என வருவனவற்றாலுமறிக. சீலம் - அருட்குணம். கோலமும் சீலமும்பாடி என இயையும் இறைவன் திருக்கோலத்தினையும் சீலத்தினையும் புகழ்ந்துபாடி சிவனே சிவனே என்று அடைக்கலம் வேண்டி பேரொலி செய்தும் நீ துயிலு ணர்ந்தாயுமில்லை நாங்கள் சொல்வதை அறிந்தாயுமில்லை என்பார், கோலமும் சீலமும் பாடி சிவனே சிவனே என்றோலமிடினும் உணராய் உணராய் என்று கூறுவாராயினர். ஓலம் அடைக்கலம் வேண்டு வோர் கூவியழைக்கும் குறிப்புமொழி. உணராய் உணராய் என்ப தில் முன்னையது துயிலெழாமையையும் பின்னையது சொன்னதை அறி யாமையையும் உணர்த்தின. காண் - முன்னிலை யசை, ஏலம் மயிர்ச் சாந்து. ஏலக்குழலி - அண்மைவிளி. இது புறத்தே இனிய கோல முடையையாயினும் அகத்தே அன்புடையையல்லை என்பது தோன்ற நின்றது. பரிசு இதுவா என அவாய் நிலையான் ஒருசொல் வருவித் துரைக்க. இது கலவிகரணி என்னும் சத்தி, காளி என்னும் சத்தியைத் துயிலுணர்த்தியதாகக் கூறிய தென்பர். மும்" இதன்கண் "ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோல் என்பதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 160. மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே யறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே யுறு மெமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய் 5 ப-ரை. மானே - மான்நோக்குப் போலும் மருண்ட நோக்கினை. யுடையவளே, நீ நென்னலை நாளை நானே வந்து உங்களை எழுப்பு வன் என்றலும் நாணாமே - நீ நேற்று நாளை நீயிர் துயிலெழுதற்கு முன்னரே நானே வந்து உங்களை எழுப்புவன் என்று கூறியதையும்
506 திருவாசக ஆராய்ச்சியுரை இறைவன் கோதாட்டல் : ' கொங்கண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி ' ( திருவெம் .17 ) அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு ( பொன்னூ .6 ) என்னைக் கோதுமாட்டிநின் குரைகழல் காட்டி ( செத்திலாப் -8 ) என வருவனவற்றாலுமறிக . சீலம் - அருட்குணம் . கோலமும் சீலமும்பாடி என இயையும் இறைவன் திருக்கோலத்தினையும் சீலத்தினையும் புகழ்ந்துபாடி சிவனே சிவனே என்று அடைக்கலம் வேண்டி பேரொலி செய்தும் நீ துயிலு ணர்ந்தாயுமில்லை நாங்கள் சொல்வதை அறிந்தாயுமில்லை என்பார் கோலமும் சீலமும் பாடி சிவனே சிவனே என்றோலமிடினும் உணராய் உணராய் என்று கூறுவாராயினர் . ஓலம் அடைக்கலம் வேண்டு வோர் கூவியழைக்கும் குறிப்புமொழி . உணராய் உணராய் என்ப தில் முன்னையது துயிலெழாமையையும் பின்னையது சொன்னதை அறி யாமையையும் உணர்த்தின . காண் - முன்னிலை யசை ஏலம் மயிர்ச் சாந்து . ஏலக்குழலி - அண்மைவிளி . இது புறத்தே இனிய கோல முடையையாயினும் அகத்தே அன்புடையையல்லை என்பது தோன்ற நின்றது . பரிசு இதுவா என அவாய் நிலையான் ஒருசொல் வருவித் துரைக்க . இது கலவிகரணி என்னும் சத்தி காளி என்னும் சத்தியைத் துயிலுணர்த்தியதாகக் கூறிய தென்பர் . மும் இதன்கண் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோல் என்பதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 160. மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே யறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே யுறு மெமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய் 5 - ரை . மானே - மான்நோக்குப் போலும் மருண்ட நோக்கினை . யுடையவளே நீ நென்னலை நாளை நானே வந்து உங்களை எழுப்பு வன் என்றலும் நாணாமே - நீ நேற்று நாளை நீயிர் துயிலெழுதற்கு முன்னரே நானே வந்து உங்களை எழுப்புவன் என்று கூறியதையும்